MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 32 மணி நேரம் டிராபிக் ஜாம்.. 25 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

32 மணி நேரம் டிராபிக் ஜாம்.. 25 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

Mumbai-Pune Highway: 32-Hr Traffic Jam: மும்பை-புனே விரைவுச்சாலை சுமார் 94.5 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். உலக வரலாற்றிலேயே மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்களில் இதுவும் ஒன்றாகும்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 05 2026, 10:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மும்பை புனே விரைவுச்சாலையில் கவிழந்த டேங்கர் லாரி
Image Credit : X

மும்பை-புனே விரைவுச்சாலையில் கவிழந்த டேங்கர் லாரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை-புனே விரைவுச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து நெரிசல் இன்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மும்பை-புனே விரைவுச்சாலையில் அடோஷி சுரங்கப்பாதை அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் எளிதில் தீப்பற்றக்கூடிய புரோப்பிலீன் (Propylene) வாயுவை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

24
25 கிமீ அணிவகுத்து நின்ற வாகனங்கள்
Image Credit : X

25 கிமீ அணிவகுத்து நின்ற வாகனங்கள்

இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 25 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் வாகனங்களில் சிக்கித் தவித்தனர். நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். விபத்துக்குள்ளான டேங்கரில் எரியக்கூடிய வாயு இருந்ததால் மீட்புப் பணி மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Related image1
65 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே டிராபிக் ஜாம்..! நாட்டில் இருக்கிற வண்டி எல்லாம் மதுரை பக்கம்.. மிரட்டும் விஜய்
Related image2
இனி ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம் இருக்காது! நெடுஞ்சாலைத்துறை கொண்டுவரும் புதிய திட்டம்!
34
32 மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரானது
Image Credit : X

32 மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரானது

தீயணைப்புப் படையினர் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தனர், அதே நேரத்தில் மூன்று பெரிய கிரேன்களின் உதவியுடன் டேங்கர் தூக்கப்பட்டது. இந்த மீட்புப் பணியில் நெடுஞ்சாலை காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, ஓஎன்ஜிசி நிபுணர் குழு, சிஐஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். 

இதன் விளைவாக சுமார் 32 மணி நேரத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான எரிவாயு டேங்கர் சாலையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, புனே-மும்பை மற்றும் மும்பை-புனே ஆகிய இரு வழித்தடங்களிலும் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

44
கழிப்பறை, குடிநீரின்றி மக்கள் பரிதவிப்பு
Image Credit : ANI

கழிப்பறை, குடிநீரின்றி மக்கள் பரிதவிப்பு

மும்பை-புனே விரைவுச்சாலை சுமார் 94.5 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். உலக வரலாற்றிலேயே மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்களில் இதுவும் ஒன்றாகும். சாதாரணமாக ஒரு நாளைக்கு 1,00,000 வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கழிப்பறை, குடிநீர் மற்றும் உணவு வசதியின்றி தவித்தனர்.

அதிகாரிகள் சொன்னது என்ன?

போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்தபோதும் டோல் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நிர்வாகம் பயணிகளைப் புறக்கணித்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நீண்ட நெரிசல் காரணமாக மும்பை, புனே இடையே பேருந்துகள் சேவை முடங்கியது. 

இதனால் பயணிகள் பேருந்து நிலையங்களிலும் முடங்கி கிடந்தனர். எரிவாயுவின் தன்மையைக் கருத்தில் கொண்டு விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டோம். பொதுமக்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முன்னுரிமை அளித்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மும்பை
மகாராஷ்டிரா
இந்தியா
போக்குவரத்து விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
AI வளர்ச்சியில் ஆபத்தா? Carnegie India Global Technology Summit-ல் AI எதிர்காலம் குறித்து விவாதம்
Recommended image2
கோடை காலத்தில் தினமும் ரூ.1,000 சம்பாதிக்கலாம்.. வெயில் அதிகமானா காசும் அதிகரிக்கும்
Recommended image3
வெறும் ரூ.333 போட்டா ரூ.17 லட்சமா..? வட்டியை கொத்து கொத்தா அள்ளி கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
Related Stories
Recommended image1
65 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே டிராபிக் ஜாம்..! நாட்டில் இருக்கிற வண்டி எல்லாம் மதுரை பக்கம்.. மிரட்டும் விஜய்
Recommended image2
இனி ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம் இருக்காது! நெடுஞ்சாலைத்துறை கொண்டுவரும் புதிய திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved