மாதம் ரூ.35 லட்சம் சம்பாதிக்கும் 22 வயது யூ டியூபர்.. யார் இந்த இஷான் ஷர்மா?
யூ டியூப் மூலம் பிரபலமான 22 வயது இளைஞர் ஒருவர் மாதம் ரூ.35 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
Youtuber Ishan Sharma
யூ டியூப் என்பது வெறும் பொழுது போக்குக்கான சமூக வலைதளம் என்பதை தாண்டி பலருக்கு தனி அடையாளத்தை கொடுத்து வருகிறார். மேலும் யூ டியூப் மூலம் பிரபலமான 22 வயது இளைஞர் ஒருவர் மாதம் ரூ.35 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
Youtuber Ishan Sharma
பெங்களூருவைச் சேர்ந்த இஷான் ஷர்மா என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ டியூப் சேனலை தொடங்கினார். அதில் தான் கற்று கொண்ட விஷயங்கள் மற்றும் தனது பயணம் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ராஜஸ்தானின் பிலானி இன்ஸ்டியூட்டில் படித்து வந்த அவர் கிடைக்கும் நேரத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அவர் தனது முதல் வீடியோவை பதிவிட்ட போது அவரின் சக நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
Youtuber Ishan Sharma
அவரின் வீடியோக்கள் நல்ல வரவேற்பு கிடைத்த உடன் தனது கல்வியை பாதியில் நிறுத்திய அவர் முழு நேரமாக யூ டியூபில் கவனம் செலுத்த தொடங்கினார். இதன் மூலம் பிரபலமான யூ டியூப் செலிபிரிட்டியாக மாறி உள்ளார் அவர் தற்போது ஒரு மாதத்திற்கு ரூ.35 லட்சம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
Youtuber Ishan Sharma
இஷான் ஷர்மா ஒருமுறை அளித்த பேட்டியில் தனக்கு ஒரு மாதம் மட்டும் ரூ 35 லட்சம் சம்பாதித்தது குறித்து பேசியிருந்தார். மேலும் மாதம் ரூ.35 லட்சம் சம்பாதிப்பது சிறிய தொகை என்பதால், வெளியில் சென்று வியாபாரம் செய்ய பணம் போதவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
Youtuber Ishan Sharma
அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஷான் ஷர்மாவின் இந்த வீடியோ வைரலான நிலையில் 35 லட்சம் என்பது சிறிய பணமா என்று கேள்வி எழுப்பியதுடன் தங்கள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர். 22 வயதாகும் இஷானின் சொத்து மதிப்பு ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது. யூ டியூபில் இருந்து அவருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கிறாராம்.