Tax Free Income: இந்த 10 வருமானங்களுக்கு வருமான வரியே கிடையாது.. மக்களே நோட் பண்ணுங்க
Tax Free Income: வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய தகவல். வருமான வரி சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில வருமானங்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வரி இல்லா வருமானம்
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரியை சட்டப்படி எவ்வாறு குறைக்கலாம் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. முதலீடுகள் மற்றும் கழிவுகளைத் தவிர, வருமான வரி சட்டத்தில் சில வருமானங்களுக்கு முழுமையான வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சலுகைகள் குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே பொருந்தும்.
கல்வி, விவசாயம் மற்றும் ஓய்வூதிய பலன்கள்
அரசு அல்லது தனியார் அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு வருமான வரி இல்லை. மேலும், விவசாய வருமானமும் பொதுவாக வருமான வரியில் இருந்து விலக்கு பெறுகிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கிராச்சுவிட்டி மற்றும் ஓய்வின்போது பெறும் லீவ் என்காஷ்மென்ட்டும் முழுமையாக வரி விலக்கு பெறும். தனியார் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட உச்ச வரம்பிற்குள் சலுகை வழங்கப்படுகிறது.
முதலீடுகள் மற்றும் சேமிப்பில் கிடைக்கும் வரி விலக்கு
சில நிபந்தனைகளுடன் LIC பாலிசி முதிர்வுத் தொகை வரி விலக்கு பெறப்படுகிறது. மேலும், PPF, சுகன்யா சம்ரித்தி திட்டம், குறிப்பிட்ட வரி விலக்கு பத்திரங்கள் மற்றும் சில NRI கணக்குகளுக்கு வட்டிக்கும் வரி கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு PF தொகையை திரும்பப் பெற்றாலும் வரி விதிக்கப்படாது.
குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த வருமானங்கள்
HUF (Hindu Undivided Family) மூலம் ஏற்கனவே வரி செலுத்தப்பட்ட வருமானம் குடும்ப உறுப்பினர்களுக்கு பகிரப்பட்டால் மீண்டும் வரி விதிக்கப்படாது. கூட்டாண்மை நிறுவனம் அல்லது LLP மூலம் கிடைக்கும் லாபப் பங்கு வரி விலக்கு பெறும். ஆனால், அதே நிறுவனத்திலிருந்து சம்பளம் அல்லது கமிஷன் பெற்றால் அதற்கு வரி விதிக்கப்படும்.
பரிசுகள் மற்றும் வாரிசு சொத்துகளுக்கு என்ன விதி?
உறவினர்களிடமிருந்து பெறப்படும் திருமணப் பரிசுகள் மற்றும் வாரிசு சொத்துகளுக்கு வரி கிடையாது. ஆனால், உறவினர் அல்லாதவர்களிடமிருந்து பெறப்படும் பரிசின் மதிப்பு ₹50,000-ஐ கடந்தால், அந்த வருமான வரி விதிப்பிற்கு உட்படலாம். எனவே, வரி விலக்கு பெறும் ஒவ்வொரு வருமானத்திற்கும் பொருந்தும் விதிமுறைகளை அறிந்தபின் மட்டுமே திட்டமிடுவது சிறந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

