பொம்பள Case போட்டுட்டாங்க... பூர்ணிமா வெளியேறியதும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகளை கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிரதீப் ஆண்டனி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அதிகளவிலான சர்ச்சைகளை சந்தித்த சீசன் என்றே சொல்லலாம். இந்த சீசனில் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு எவிக்ஷன் தான். இந்த சீசனில் மிகவும் பலம் வாய்ந்த போட்டியாளராக திகழ்ந்து வந்தார் பிரதீப். இவருக்கான ரசிகர் வட்டமும் நாளுக்கு நாள் பெரிதாகி வந்ததால், இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்கிற பேச்சும் எழத் தொடங்கியது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரே மாதத்தில் இந்நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப். அவரால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி மாயா, பூர்ணிமா, ஐஷு, ரவீனா ஆகியோர் உரிமைக்குரல் எழுப்பியதால் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினர். பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் அவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பிரதீப்புக்கு நியாயம் கேட்டு சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்... 57 வயதிலும் வேகம் குறையாத இசைப்புயல்... பணக்கார இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இதோ
இந்த நிலையில், பூர்ணிமா நேற்று முன்தினம் ரூ.16 லட்சத்துடன் கூடிய பணப்பெட்டி உடன் பிக்பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா வெளியேறியதும். சில முட்டாப்பயலையெல்லாம் காசு முதலாளி ஆக்குதடா என்கிற பாடலை பதிவிட்டு இருந்தார். அவர் பூர்ணிமாவை கிண்டலடிக்கும் வகையில் தான் இப்பாடலை பதிவிட்டுள்ளார் என்று எண்ணிய நெட்டிசன்கள் சிலர் அவரை விமர்சித்து வந்தனர். இதைப்பார்த்து கடுப்பான பிரதீப், பூர்ணிமா அம்மாகிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறடிக்குற கும்பல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாய கிளராதீங்க. பொளச்சு போங்க. உங்க பொளப்ப கெடுக்க மாட்டேன் என்று பதிவிட்டார்.
இதைப்பார்த்த பூர்ணிமா ரசிகர்கள் பிரதீப் பூர்ணிமாவின் குடும்பத்தினரை கிண்டலடிக்கும் விதமாக இப்படி பதிவிட்டுள்ளதாக கருதி அவரை மீண்டும் திட்டத்தொடங்கினர். அவரின் குடும்பத்தையும் இழுத்து பேசத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த பிரதீப், பர்ஸ்ட் வெளிய வர போட்டியாளர்கள் கிட்ட பிக்பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாள் இருக்கானு கேட்டுட்டு என்னை வந்து கலாய்ங்க, என் குடும்பத்த இழுங்க, என் மனநிலை பத்தி பேசுங்க. சும்மா ஒன்னும் தெரியாம யூகத்தை தூக்கிக்கிட்டு வராதீங்க. என் மடில கனமில்லை என பதிலடி கொடுத்தார்.
அதன்பின்னரும் பூர்ணிமா ரசிகர்கள் அட்டாக் பண்ணியதால், கோபத்தின் உச்சத்துக்கே சென்ற பிரதீப், என்ன அடிச்சு சாவடிச்சு டைட்டில எடுத்துக்கனு நான் தான் சொன்னேன். அவங்க பெருந்தன்மையா பொம்பள case போட்டு அனுப்சிட்டாங்க. அப்டி தான் நான் பார்க்குறேன். உண்மையில் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த சீசன் முடிஞ்சதும் நான் போய் சம்பளம் வாங்கிட்டு வர்றேன். அநியாயத்துக்கு டாக்சிக்கா இருக்கு என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரதீப்.
இதையும் படியுங்கள்... தயாரிப்பாளராக மாற நினைத்து மொத்த பணத்தையும் இழந்த நடிகைகள்.. சாவித்ரியின் நிலை யாருக்கும் வரக்கூடாது..