MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Vehicle Number Plate: வண்டிக்கு நம்பர் பிளேட் ஏன் முக்கியம்? இந்த சிஸ்டம் எங்கே, எப்போ ஆரம்பிச்சது தெரியுமா?

Vehicle Number Plate: வண்டிக்கு நம்பர் பிளேட் ஏன் முக்கியம்? இந்த சிஸ்டம் எங்கே, எப்போ ஆரம்பிச்சது தெரியுமா?

Number Plate Check: வண்டிகளுக்கு நம்பர் பிளேட் எதுக்கு வந்துச்சு? வெள்ளை, மஞ்சள், பச்சைன்னு நம்பர் பிளேட்ல ஏன் இத்தனை கலர்ஸ் இருக்கு தெரியுமா? அதோட வரலாறு என்ன? தெரிஞ்சுக்கலாம் வாங்க.! 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 24 2026, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வண்டிக்கு நம்பர் பிளேட் ஏன் முக்கியம்?
Image Credit : Gemini

வண்டிக்கு நம்பர் பிளேட் ஏன் முக்கியம்?

சமீபத்துல சோஷியல் மீடியால ஒரு வீடியோ செம வைரல் ஆச்சு. ஸ்டீயரிங்ல இருக்குற ஒரு பட்டனை தட்டுனா, கார் நம்பர் பிளேட் மாறுற மாதிரி ஒரு மேஜிக் சீன் அதுல இருந்துச்சு. இதைப் பார்த்து மக்கள் ஷாக் ஆனாங்க. இதே நேரத்துல, நம்ம நாட்டுல போலி, சேதப்படுத்தப்பட்ட நம்பர் பிளேட்கள் மேல போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்துட்டு வராங்க. இந்த சூழல்ல, நம்பர் பிளேட்னா என்ன? அதோட கதை எப்போ, எங்கே ஆரம்பிச்சதுன்னு இப்ப பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 41(6)
Image Credit : social media

மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 41(6)

மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 41(6) படி, ஒரு வண்டிக்கு கொடுக்கப்படுற ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்தான் போக்குவரத்துத் துறை கொடுக்குற அதிகாரப்பூர்வ அடையாளம். இதை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி (RTO) ஒதுக்குவார். இந்தியால ரோட்டுல ஓடுற எந்த வண்டியா இருந்தாலும், இதுதான் சட்டப்பூர்வமான அடையாளம். பிரிவு 39 படி, முறையான ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் இல்லாம வண்டி ஓட்டுறது சட்டப்படி குற்றம். வண்டியோட முன்பக்கமும் பின்பக்கமும் இந்த நம்பர் தெளிவா தெரியணும்னு சட்டம் சொல்லுது.

Related Articles

Related image1
Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?
Related image2
Ant Mill: நீண்ட நாட்கள் வட்டமடித்து மரணிக்கும் எறும்புகள்.! வினோத நிகழ்வுக்கான காரணம் என்ன?
36
நம்பர் பிளேட்டில் உள்ள இலக்கங்கள் எதை குறிக்கிறது?
Image Credit : Indian Tech & Infra x

நம்பர் பிளேட்டில் உள்ள இலக்கங்கள் எதை குறிக்கிறது?

நம்ம நாட்டுல நம்பர் பிளேட் அமைப்பு ஒரு குறிப்பிட்ட முறையில இருக்கும். உதாரணமா, 'TN 06 AB 1234'னு ஒரு நம்பர் இருக்குன்னு வச்சுப்போம். இதுல முதல் ரெண்டு எழுத்து (TN), வண்டி எந்த மாநிலத்துல ரிஜிஸ்டர் ஆச்சுன்னு சொல்லும். அதுக்கடுத்து வர்ற ரெண்டு நம்பர் (06), அந்த மாநிலத்துல இருக்குற RTO அல்லது மாவட்ட ஆபீஸைக் குறிக்கும். நடுவுல இருக்குற எழுத்துக்கள் (AB), அந்த நம்பர் எந்த சீரிஸ்ல வந்துச்சுன்னு சொல்லும். கடைசியா இருக்குற நாலு நம்பர் (1234), அந்த வண்டிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட யூனிக் நம்பர். இப்போ இதெல்லாம் கம்ப்யூட்டர்மயமானதுனால, மோசடி பண்றது அவ்ளோ ஈஸி இல்ல.

46
இந்த முறை எங்கே, எப்போது துவங்கியது?
Image Credit : ai generated photo

இந்த முறை எங்கே, எப்போது துவங்கியது?

உலகத்துலயே முதல் முறையா பிரான்ஸ் நாடுதான் வண்டிகளுக்கு அடையாள அட்டையை அறிமுகப்படுத்துச்சு. ஆகஸ்ட் 14, 1893-ல பாரிஸ் போலீஸ் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தாங்க. ஆக்சிடென்ட் பண்ணிட்டு தப்பிச்சுப் போற வண்டிகளைப் பிடிக்கிறதுக்காக இதை ஆரம்பிச்சாங்க. அப்போ, நம்பரோட சேர்த்து ஓனரோட பெயர், முகவரியையும் பிளேட்ல எழுத வேண்டியிருந்தது. அதுக்கப்புறம் 1896-ல ஜெர்மனியும், 1898-ல நெதர்லாந்தும் இந்த முறையை நாடு முழுக்க அமல்படுத்துச்சு. அமெரிக்காவுல நியூயார்க்ல 1901-ல நம்பர் பிளேட்டுகளை கட்டாயமாக்கினாங்க. ஆனா, அப்போ ஓனர்களே தோல் அல்லது உலோகத்துல நம்பரை எழுதிக்கணும். 1903-ல மாசசூசெட்ஸ் மாகாணம்தான் முதல் முறையா அதிகாரப்பூர்வ பிளேட்டுகளை வழங்குச்சு.

56
பிரிட்டிஷ் காலத்தில் அதிகாரப்பூர்வ அறிமுகம்
Image Credit : Social Media

பிரிட்டிஷ் காலத்தில் அதிகாரப்பூர்வ அறிமுகம்

பிரிட்டிஷ் காலத்துல, 1914-ம் வருஷத்திய இந்திய மோட்டார் வாகனச் சட்டம் மூலமா இந்தியால இந்த சிஸ்டம் அதிகாரப்பூர்வமா வந்துச்சு. ஆனா, அதுக்கு முன்னாடியே பம்பாய் (1901), பெங்கால் (1903), மெட்ராஸ் (1907), பஞ்சாப் (1907), பர்மா (1906) போன்ற மாகாணங்கள்ல உள்ளூர் சட்டங்கள் இருந்துச்சு. வண்டிகள் அதிகமானதால, 1939-ல ஒரு முறையான சிஸ்டத்தைக் கொண்டு வந்தாங்க. அதுக்கப்புறம் 1988 மோட்டார் வாகனச் சட்டம், 1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் மூலமா, இப்போ நாம பார்க்குற ஒரே மாதிரியான மாநில குறியீடுகள் கொண்ட சிஸ்டம் அமலுக்கு வந்துச்சு.

66
வண்ண வண்ண நம்பர் பிளேட்கள் ஏன்?
Image Credit : gemini

வண்ண வண்ண நம்பர் பிளேட்கள் ஏன்?

இப்போ நம்பர் பிளேட்ல பலவிதமான கலர்ஸ் வந்துடுச்சு. சொந்தப் பயன்பாட்டு வண்டிகளுக்கு வெள்ளை பிளேட்ல கருப்பு எழுத்துகளும், கமர்ஷியல் வண்டிகளுக்கு மஞ்சள் பிளேட்டும், எலக்ட்ரிக் வண்டிகளுக்கு பச்சை பிளேட்டும் பயன்படுத்துறாங்க. மோசடிகளைத் தடுக்க, குரோமியம் அடிப்படையிலான ஹோலோகிராம், லேசர் கோட் கொண்ட 'உயர் பாதுகாப்பு பதிவுத் தகடுகள்' (HSRP) கொண்டு வந்தாங்க. அப்புறம் 2021-ல 'BH' அதாவது பாரத் சீரிஸ் அறிமுகப்படுத்தினாங்க. இதனால, வேலைக்காக வேற மாநிலங்களுக்கு மாறுறவங்க அடிக்கடி வண்டியை ரீ-ரிஜிஸ்டர் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அன்றைய பாரிஸ் போலீஸ் சட்டத்துல இருந்து இன்னைக்கு டிஜிட்டல் சிஸ்டம் வரைக்கும், நம்பர் பிளேட்டுகளோட பயணம் ரொம்பவே சுவாரஸ்யமா அமைஞ்சிருக்கு.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
தொழில்நுட்பம்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hero Retro Bike: பழைய ஸ்டைலில் புது பைக்... ஹீரோவின் அடுத்த மாஸ்டர்பீஸ் இதுதானா?
Recommended image2
Skoda Kushaq: 100,000 விற்பனை மைல்கல்.. சரிவிலிருந்து மீளுமா ஸ்கோடா குஷாக்?
Recommended image3
Ola S1: ரூ.1 லட்சம் கூட இல்ல.. 176 கி.மீ ரேஞ்ச்.. மிரட்டலான அம்சங்களுடன் ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Related Stories
Recommended image1
Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?
Recommended image2
Ant Mill: நீண்ட நாட்கள் வட்டமடித்து மரணிக்கும் எறும்புகள்.! வினோத நிகழ்வுக்கான காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved