MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பைக், கார்களின் இன்சூரன்ஸ் தொலைந்து விட்டதா.? டூப்ளிகேட் காப்பி வாங்குவது ரொம்ப ஈசி.! எப்படி தெரியுமா.?

பைக், கார்களின் இன்சூரன்ஸ் தொலைந்து விட்டதா.? டூப்ளிகேட் காப்பி வாங்குவது ரொம்ப ஈசி.! எப்படி தெரியுமா.?

கார் மற்றும் பைக் இன்சூரன்ஸ் காப்பி தொலைந்து போனால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் எளிதாக பெறலாம். இதற்கான நடைமுறை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். 

3 Min read
Ajmal Khan
Published : Sep 10 2024, 02:31 PM IST| Updated : Sep 10 2024, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Car, bike, price increase,

Car, bike, price increase,

வாகன விற்பனை அதிகரிப்பு

நவீன யுகத்திற்கு ஏற்ப மக்களும் மாறிக்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொதுப்போக்குவரத்துகளில்  பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். வெயில், சீட் கிடைக்காமல் நிற்க வேண்டும் என்ற காரணத்தாலும், நேரம் செலவு போன்ற காரணத்தாலும் தங்களது ஊதியத்திற்கு ஏற்ப பைக்கோ அல்லது காரோ இன்றைய நிலையில் அதிகமாக வாங்கப்படுகிறது.

நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு கார்கள் மற்றும் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனால் மக்களின் பார்வை பைக் மற்றும் கார்களின் மீது விழுகிறது. உயர்தர வகுப்பினர் வீட்டில் மட்டுமே இருந்த கார்கள் தற்போது நடுத்தர வர்க்க மக்களும் வாங்கும் நிலைக்கு உருவாகிவிட்டது.
 

26
used car bike sale

used car bike sale

காப்பீடு கட்டாய தேவை

இதற்கு காரணம் பைக்கில் இரண்டு பேருக்கு மேல் செல்ல முடியாத ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு பிள்ளைகள் என்று வைத்தால் மொதம் 4 பேர் ஆட்டோவிலாவது அல்லது காரிலாவது வெளியே செல்லும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டே பெரும்பாலான மக்கள் கார்களை இஎம்ஐயில் வாங்கி விடுகிறார்கள். 

இந்தநிலையல் பல லட்சம் கொடுத்து கார் வாங்கினாலும் அதனை பராமரிப்பு என்பது கடினமான வேலை, இதற்காகவே பல மடங்கு செலவு ஏற்படும். மேலும் இயற்கை சீற்றம் மற்றும் விபத்து காலங்களில் வாகனம் சேதமாகும் போது இழப்பை பெறுவதற்காக கொண்டு வரப்பட்டது தான் இன்சூரன்ஸ். கார்களுக்கு எப்படி பெட்ரோல், டீசல் தேவையோ அதே போல இன்சூரன்ஸ் மிக முக்கியம்.

36
car insurance 4.jpg

car insurance 4.jpg

அந்த முக்கியமான இன்சூரன்ஸ் காப்பி தொலைந்து விட்டால்  விபத்து காப்பீடு பெற முடியாத நிலை உருவாகும். எனவே தொலைந்து போன இன்சூரன்ஸ் காப்பிக்கு பதிலாக புதிய காப்பி எப்படி பெறலாம் என்பதை தற்போது பார்க்கலாம். 

இன்சூரன்ஸ் தகவல்கள்

கார் இன்சூரன்ஸ் பாலிசியில் கார் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர், வாகன தயாரிப்பு விவரங்கள், காரின் நிறம் மேலும் இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் நாட்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். காரின் மதிப்பு பொன்றவை இடம்பெற்றிருக்கும்.


இன்சூரன்ஸ் டூப்ளிகேட் நகல் பெறுவது எப்படி.?

இன்சூரன்ஸ் காப்பி தொலைந்து போனால் பல முறைகளில்  டூப்ளிகேட் பெற முடியும், முதலாவதாக தற்போது உள்ள நவீன காலத்தில் கார்கள் வாங்கும் போது கண்டிப்பாக இமெயில் முகவரி கேட்பார்கள். இதில் இன்சூரன்ஸ் காப்பியின் நகல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும். இதனை சேகரித்து வைத்திருந்தால். எளிமையாக இன்சூரன்ஸ் பாலிசி ஆவணத்தை எடுத்துவிடலாம். 
 

46
car insurance 5.jpg

car insurance 5.jpg

இணையதளம், வாட்ஸ் ஆப் மூலம் டூப்ளிகேட் இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று அங்கு தமது வாகனத்தின் எண்கள் மற்றும் மொபைல் போன் எண்ணை பதிவு செய்தால் பாலிசி காப்பி கிடைத்து விடும். இதனை எளிதாக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். மற்றொன்றாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் கஸ்டமர் சர்வீஸ் வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வருகிறது. அதில் உரிய தகவல்கள் பதிவு செய்தால் வாட்ஸ் அப்பில் நமக்கு தேவையான இன்சூரன்ஸ் காப்பியை பெற்று விடலாம். அடுத்தாக காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று வாகன எண்ணின் தகவலை தெரிவிப்பதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் டூப்ளிகேட் இன்சூரன்ஸ் காபி கிடைத்துவிடும். ஆனால் இந்த ஆவணங்களை பெற வாகனத்தின் ஆர்சி புக் மற்றும் வாகன உரிமையாளரின் அடையாள அட்டை கண்டிப்பாக தேவைப்படும்.
 

56

பைக் இன்சூரன்ஸ் டூப்ளிகேட் பெறுவது எப்படி.?

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலின் காரணமாக இரண்டு சக்கர வாகனத்தின் காப்பீடு பாலிசியின் நகலை எளிதாக டவுன்லோடு செய்ய முடியும். நேரில் அழைவதை விட ஆன்லைன் மூலமாக எளிதில் நகலை பெற்றுவிடலாம். 

முதலில், உங்கள் இரு சக்கர வாகனம் காப்பீட்டு செய்யப்பட்ட  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று அங்கு இன்சூரன்ஸ் எடுத்த போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அடுத்தாக  இரு சக்கர வாகனத்திற்குப் பதிவு செய்யப்பட்ட பாலிசியைத் தேர்ந்தெடுத்து, பைக் இன்சூரன்ஸ் நகல் பதிவிறக்கத்தைக் கிளிக் செய்தால் உடனடியாக டூப்ளிகேட் கிடைத்து விடும். 
 

66

அடுத்ததாக தாங்கள் இரு சக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்த நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணை அழைத்தோ அல்லது  கடிதம் மூலமாகவோ உங்கள் பாலிசி ஆவணத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை உங்கள் காப்பீட்டாளர் உறுதி செய்ய. அப்போதுதான் டூப்ளிகேட் பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதனையடுத்து சரிபார்ப்புக்கு பிறகு டூப்ளிகேட் ஆவணங்கள் அனுப்பிவைக்கப்படும். 


 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved