270 கிமீ மைலேஜ் தரும் டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஊட்டி - பெங்களூரு அசால்ட்டா போலாம்.. விலை எவ்வளவு?
Tata Electric Scooter Price : டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் மலிவு விலையில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. 270 கிமீ வரம்பு, சக்திவாய்ந்த மோட்டார் மற்றும் பல மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tata Electric Scooter Price
நம் நாட்டில் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு என பல காரணங்கள் இதற்கு உண்டு. குறைந்த விலையில் அதிக வசதிகள், அதிக மைலேஜ் மற்றும் சிறந்த செயல்திறனைத் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள், இந்த செய்தி உங்களுக்கானது தான். இப்போதெல்லாம், பல சக்திவாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் வருகின்றது. ஆனால் அதன் விலை மற்றும் ரேஞ்ச் போன்ற பலவற்றை பார்க்கும் போது பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை உயர்ந்தவையாக உள்ளது.
Tata Electric Scooter Mileage
இருப்பினும் சில ஸ்கூட்டர்கள் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மானியத்துடன் கிடைப்பதால் பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வாகன சந்தையில் முக்கிய இடத்தை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதும் புரட்சியை ஏற்படுத்தும். நானோ காரை போல மலிவு விலை கார் மட்டுமல்ல, ஸ்கூட்டருக்கும் இது பொருந்தும். ஏன் அப்படி என்று கேட்கிறீர்களா? ஆம். டாடா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதாரண மக்களுக்கு ஒரு கனவு போல இருக்கப் போகிறது.சந்தையில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களை விட இந்த ஸ்கூட்டரை சிறந்ததாக மாற்றும் இந்த ஸ்கூட்டரில் உங்களுக்கு பல மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும்.
Tata Electric Scooter Price
கொஞ்ச நாள் கழித்து, அதாவது விரைவில் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம் என்று டாடா நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அதன் விவரங்கள் கசிந்துள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து அம்சங்களையும், அதன் விலை போன்ற முக்கிய விவரங்களை காணலாம். இந்த மின்சார ஸ்கூட்டர் சக்திவாய்ந்த மோட்டார் உடன் வர உள்ளது. அதன் வரம்பைப் பற்றி பேசினால், இது 270 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சக்திவாய்ந்த மோட்டார் ஆனது, 3kW உச்ச ஆற்றலை உருவாக்குகிறது.
Tata Scooter Mileage
டாடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்இடி ஹெட்லைட், பூட் அண்டர் ஸ்பேஸ், வசதியான இருக்கை, முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக், டியூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இதில் நிறுவப்பட்ட பேட்டரி பேக் முழுவதுமாக சார்ஜ் ஆக 3 மணி நேரம் ஆகும், மேலும் சக்திவாய்ந்த மோட்டார் காரணமாக, இந்த மின்சார ஸ்கூட்டரின் செயல்திறன் மிகவும் வலுவானதாகிறது.
Ratan Tata
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையைப் பற்றி பார்ப்பதற்கு முன், அதன் வெளியீட்டுத் தேதியைப் பற்றி தெரிந்து அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாகவே இருக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அறிமுகத்துக்கு பிறகு சிறிது மாதம் கழித்து சந்தையில் அறிமுகப்படுத்தலாம். இந்த ஸ்கூட்டரை 67 ஆயிரம் ரூபாய் விலையில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விலை குறித்து இதுவரை நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
சார்ஜ் இனி தீராது.. மாஸ் காட்டும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா?