MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Auto
  • கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்

கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்

கோவாவில் நடந்த மோட்டோசோல் 2025 நிகழ்ச்சியில், டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி பிராண்டின் 20வது ஆண்டை முன்னிட்டு அப்பாச்சி RDX 300 செலிப்ரேஷன் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 07 2025, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
அப்பாச்சி RDX 300
Image Credit : Google

அப்பாச்சி RDX 300

கோவாவில் நடைபெற்று வரும் மோட்டோசோல் 2025 நிகழ்ச்சியில் டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி RDX 300-ன் சிறப்பு செலிப்ரேஷன் எடிஷனை அறிமுகப்படுத்தியது கவனம் ஈர்த்துள்ளது. அப்பாச்சி பிராண்டின் 20வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு RTR வரிசையில் நினைவுப் பதிப்பு வெளியிடப்பட்டதால், RDX-க்கும் இத்தகைய மாடல் வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும், விலை குறித்து டிவிஎஸ் இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய எடிஷன் ஸ்டைல் ​​மாற்றங்களையே கொண்டு வருகிறது.

இந்த செலிப்ரேஷன் எடிஷனின் முக்கிய சிறப்பு கருப்பு – ஷாம்பெயின் கோல்டு நிறக் கலவையாகும். கருப்பு பாடி பேனல்களைச் சுற்றி, எரிபொருள் டேங்க், சைட் பேனல்கள் மற்றும் ஃபேரிங் பகுதிகளில் தங்க நிற கிராஃபிக்ஸ் கண்கவர் வகை குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, சிவப்பு நிற சிறிய ஹைலைட்கள் பைக்கின் ஸ்போர்ட்டி லுக்கை இனிமையாக விளக்குகின்றன. அலாய் வீல்களில் டிவிஎஸ் பயன்படுத்திய டூயல்-டோன் ஃபினிஷ் எனும் வடிவமைப்பு கூடுதல் அழகை வழங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
20வது ஆண்டு பதிப்பு
Image Credit : Google

20வது ஆண்டு பதிப்பு

ஒரு பகுதி கருப்பு நிறத்தில்; மற்ற பகுதி தங்க நிறத்தில் உள்ளது. மோட்டார்சைக்கிளின் இன்ஜின், ஃபிரேம், சஸ்பென்ஷன், பிரேக்கிங் போன்ற முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் மாற்றமின்றி தொடர்கின்றன. அதே எலக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் மற்றும் ரைடர் எய்டுகள் ஆகியவை இதில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தொழில்நுட்ப அப்டேட் அல்ல. டிசைன் மற்றும் தோற்ற மாற்றத்தை மட்டுமே கொண்ட ஒரு சிறப்பு பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, நீண்ட தூர பயணத்திற்கான ஆக்சஸரீஸ் சேர்ப்பதோ, இன்ஜினில் மாற்றங்களைச் செய்ததோ போன்ற செயல்களை டிவிஎஸ் தவிர்த்துள்ளது. இந்த பதிப்பு பிராண்டின் 20 ஆண்டு பயணத்தை கொண்டாடும் ஒரு ஸ்டைலிஷ் நினைவுச் பதிப்பே. அதிகாரப்பூர்வ விலை மற்றும் கிடைக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
ரூ.85,000 வரை சேமிக்கலாம்.. ரூ.6 லட்சத்திற்குள் ஹூண்டாய் காரை வாங்கலாம்.!
Related image2
1 மாதத்தில் 32,000 புக்கிங்.. ரூ.7.90 லட்சம் காருக்கு மக்கள் கொடுத்த சூப்பர் ரெஸ்பான்ஸ்.. எந்த மாடல்?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவிஎஸ் அப்பாச்சி
வாகனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Front Engine: கார்களில் இன்ஜின் ஏன் முன்பக்கம் இருக்கு? இந்த சீக்ரெட் லாஜிக் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
Recommended image2
Hatchback Cars: புதுசா கார் வாங்க போறீங்களா? மாருதி, ஹூண்டாய், டொயோட்டாவின் 4 புதிய மாடல்கள் வருது!
Recommended image3
Tata Punch Price Hike: டாடா பஞ்ச் விலை திடீர் உயர்வு; பெட்ரோல் முதல் பஞ்ச் ஈவி வரை புதிய விலை பட்டியல் இதோ
Related Stories
Recommended image1
ரூ.85,000 வரை சேமிக்கலாம்.. ரூ.6 லட்சத்திற்குள் ஹூண்டாய் காரை வாங்கலாம்.!
Recommended image2
1 மாதத்தில் 32,000 புக்கிங்.. ரூ.7.90 லட்சம் காருக்கு மக்கள் கொடுத்த சூப்பர் ரெஸ்பான்ஸ்.. எந்த மாடல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved