மார்க்கெட்டை கலக்கும் டிவிஎஸ்! வாகன விற்பனையில் ஒரே மாதத்தில் அதிரடி வளர்ச்சி!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆகஸ்ட் 2025 மாத விற்பனை 30% அதிகரித்து 5,09,536 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இருசக்கர வாகன விற்பனை 30% உயர்வு, மூன்று சக்கர வாகன விற்பனை 47% உயர்வு, ஏற்றுமதி 35% உயர்வு என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது.

டிவிஎஸ் வாகன விற்பனை 30% உயர்வு
பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான மொத்த விற்பனையில் 30% வளர்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்ட் 2024-ல் 3,91,588 யூனிட்டுகளாக இருந்த மொத்த விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் 5,09,536 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் இருசக்கர வாகன விற்பனை
விற்பனை விவரங்களைப் பார்க்கும்போது, இருசக்கர வாகன விற்பனை 30% உயர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,78,841 யூனிட்டுகளாக இருந்த விற்பனை, இந்த ஆண்டு 4,90,788 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. அதேபோல், உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 28% வளர்ச்சியுடன் 2,89,073 யூனிட்டுகளிலிருந்து 3,68,862 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
டிவிஎஸ் மூன்று சக்கர வாகனங்கள்
மூன்று சக்கர வாகன விற்பனையும் 47% வளர்ச்சியுடன் 18,748 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 35% அதிகரித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,976 யூனிட்டுகளாக இருந்த ஏற்றுமதி, இந்த ஆண்டு 1,35,367 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சி, டி.வி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சந்தையில் உள்ள வரவேற்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.