100+ கி.மீ ரேஞ்ச்.? டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருது - விலை எவ்வளவு?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 'ஆர்பிட்டர்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது. Ola S1X, Vida VX2, Bajaj Chetak போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக, இது எளிமையான வடிவமைப்பு மற்றும் அடிப்படை அம்சங்களுடன் வரக்கூடும்.

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாடல் “TVS Orbiter” என்ற பெயரில் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது டிவிஎஸின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் மிகக் குறைந்த விலை மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் இருக்கும் iQube மாடல் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.59 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிட்டர் ஸ்கூட்டர் அம்சங்கள்
ஆனால், ஆர்பிட்டர் ஸ்கூட்டர் அதைவிட குறைந்த விலையில் இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் எளிதில் வாங்கக்கூடியதாக இருக்கும். புதிய TVS Orbiter இந்திய சந்தையில் Ola S1X, Vida VX2, Bajaj Chetak போன்ற குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
இதன் வடிவமைப்பு சிம்பிளாக இருந்தாலும், நவீன ஸ்டைலுடன் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விலை குறைவாக வைக்கப்படுவதால், சில அம்சங்கள் எளிமையாகவே இருக்கும். மோட்டார் பக்கம் பார்க்கும்போது, hub-mounted motor மற்றும் சிறிய அளவிலான battery pack பயன்படுத்தப்படலாம்.
ஆர்பிட்டர் ஸ்கூட்டர் ரேஞ்ச்
இருப்பினும், அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான மைலேஜ் வழங்கும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, பயனாளர்களுக்கு செலவுக் குறைவு, பராமரிக்க எளிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். தற்போது iQube மாடலில் 2.2 kWh முதல் 5.3 kWh வரை பல்வேறு பேட்டரி விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.
அதிகபட்சமாக 212 கி.மீ. வரை ஒரு சார்ஜில் செல்லும் வசதி உள்ளது. புதிய ஆர்பிட்டர் மாடல் குறைந்த பேட்டரி கொண்டிருந்தாலும், சில அடிப்படை அம்சங்கள் iQube-இல் இருந்து தொடரக்கூடும். எனவே, விலை குறைந்த, தரமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.