MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இந்தியாவில் டாப் MUV கார்கள் லிஸ்ட் வெளியீடு.. இந்திய குடும்பங்கள் அதிகம் வாங்கிய கார் எது?

இந்தியாவில் டாப் MUV கார்கள் லிஸ்ட் வெளியீடு.. இந்திய குடும்பங்கள் அதிகம் வாங்கிய கார் எது?

இந்தியாவில் ஒரு கார் செக்மென்ட் அமைதியாக இருந்த இடத்திலிருந்து திடீரென வெடித்து வளர்ந்து வருகிறது… அது MUV கார்கள்! 2026 நிதியாண்டில் 4.79 லட்சம் விற்பனையுடன் இந்த பிரிவு அதிர்ச்சி அளிக்கும் வளர்ச்சியை கண்டுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 20 2026, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் டாப் MUV கார்கள்
Image Credit : Google

இந்தியாவில் டாப் MUV கார்கள்

இந்தியாவில் தற்போது மல்டி யூட்டிலிட்டி வாகனங்கள் (எம்யூவி) மீது மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. பெரிய குடும்பங்களுக்கும், அதிக பயணப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியவர்களுக்கும் இந்த வகை கார்கள் மிகவும் வசதியாக இருப்பதால், மக்கள் அதிகம் விரும்புகின்றனர். 2026 நிதியாண்டில் மட்டும் இந்திய சந்தையில் 4.79 லட்சத்திற்கும் மேற்பட்ட எம்யூவி கார்கள் விற்பனையாகி, முந்தைய ஆண்டை விட 7% அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது இந்த செக்மென்ட்டின் வேகமான வளர்ச்சியை தெளிவாக காட்டுகிறது.

25
மாருதி சுசுகி எர்டிகா
Image Credit : Maruti Suzuki

மாருதி சுசுகி எர்டிகா

இந்த பிரிவில் வழக்கம்போல மாருதி சுசுகி எர்டிகா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1.98 லட்சம் எர்டிகா கார்கள் விற்பனையாகி, நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குடும்பங்களுக்கு ஏற்ற இடவசதி, நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்.

Related Articles

Related image1
World’s most efficient hybrid Car: லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ்..! இனி வீட்டுக்கு வீடு இந்த கார் தான்
Related image2
Hybrid Cars: 45 கிமீ மைலேஜ் தரும் கார்! இனி பெட்ரோல் செலவு பாதிக்கு பாதி குறையும்!
35
டொயோட்டா இன்னோவா
Image Credit : Google

டொயோட்டா இன்னோவா

இரண்டாவது இடத்தில் டொயோட்டா இன்னோவா (ஹைகிராஸ், கிரிஸ்டா) மாடல்கள் உள்ளன. இந்த கார்கள் சேர்த்து 1.12 லட்சத்துக்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தை கியா கேரன்ஸ் பிடித்துள்ளது. இந்த மாடல் 18%க்கும் மேற்பட்ட வளர்ச்சியுடன் 76 ஆயிரத்திற்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. மாருதி XL6 நான்காவது இடத்தில் இருந்தாலும், அதன் வளர்ச்சி மிக குறைவாகவே உள்ளது.

45
ரெனால்ட் ட்ரைபர்
Image Credit : Asianet News

ரெனால்ட் ட்ரைபர்

ஐந்தாவது இடத்தில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் சிறந்த வளர்ச்சியை காட்டியுள்ளது. சுமார் 25 ஆயிரம் கார்கள் விற்று 26%க்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டொயோட்டா ரூமியன் உள்ளது. இந்த கார் 24 ஆயிரம் யூனிட்கள் விற்று நல்ல முன்னேற்றத்தை காட்டியுள்ளது. குறைந்த விலை மற்றும் பயன்பாட்டு வசதிகள் காரணமாக இந்த மாடல்கள் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன.

55
எர்டிகா வசதிகள்
Image Credit : Maruti Suzuki

எர்டிகா வசதிகள்

எர்டிகா குறித்து பேசினால், இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. மேலும் சிஎன்ஜி வசதியும் கிடைக்கிறது. பெட்ரோலில் 20 கி.மீக்கு மேல் மைலேஜ் தரும் இந்த கார், சிஎன்ஜி-யில் அதிக சேமிப்பை வழங்குகிறது. ரூ.8.80 லட்சம் முதல் ரூ.13.13 லட்சம் வரை இந்த மாடல், குடும்பங்களுக்கு மிகவும் நம்பகமான தேர்வாகத் திகழ்கிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப கார்கள்
ரெனால்ட் கார்
மாருதி
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
Recommended image2
பட்ஜெட் விலையில் பக்கா மாஸ்.. பாதுகாப்பு, மைலேஜ், பட்ஜெட் - மூன்றும் அடங்கிய 'டாப் 7' ஃபேமிலி கார்கள
Recommended image3
World’s most efficient hybrid Car: லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ்..! இனி வீட்டுக்கு வீடு இந்த கார் தான்
Related Stories
Recommended image1
World’s most efficient hybrid Car: லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ்..! இனி வீட்டுக்கு வீடு இந்த கார் தான்
Recommended image2
Hybrid Cars: 45 கிமீ மைலேஜ் தரும் கார்! இனி பெட்ரோல் செலவு பாதிக்கு பாதி குறையும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved