MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் வாங்கும் போது, குறிப்பாக பேட்டரிக்கு நீண்ட கால வாரண்டி பெறுவது அவசியம். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 01 2026, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Image Credit : Google

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்கள் ஒரு புதிய இ-ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிட்டிருந்தால், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் சந்தையில் உள்ள டாப் மாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். நீங்கள் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது வாரன்டி ரொம்ப முக்கியம். இதில், ஓலா, ஏத்தர், டிவிஎஸ், சிம்பிள் ஒன் போன்ற முன்னணி பிராண்டுகள் உள்ளன. குறிப்பாக பேட்டரிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு எக்ஸ்டெண்டட் வாரன்டி கொடுக்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நீண்ட கால வாரண்டி என்பது ஒரு பெரிய ப்ளஸ். முக்கியமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக முக்கியமான, காஸ்ட்லியான பாகமான பேட்டரி பேக்கிற்கு நீண்ட வாரண்டி கிடைப்பது ஒரு பெரிய அட்வான்டேஜ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ஓலா எலக்ட்ரிக்
Image Credit : OLA

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு (S1X, S1 ஏர், S1 ப்ரோ, S1 ஸ்போர்ட்) 3 ஆண்டும் அல்லது 40,000 கி.மீ. வாரண்டி கொடுக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த வாரண்டியை 8 ஆண்டும் அல்லது 1.25 லட்சம் கி.மீ. வரைக்கும் நீட்டித்து கொள்ளலாம்.

Related Articles

Related image1
அடேங்கப்பா இத்தனை லட்சம் EV ஸ்கூட்டர் விற்பனையா? ஏத்தர் படைத்த அடிபொலி சாதனை
Related image2
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
36
ஏத்தர் எனர்ஜி நிறுவனம்
Image Credit : our own

ஏத்தர் எனர்ஜி நிறுவனம்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தனது 450 சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 3 ஆண்டும் அல்லது 30,000 கி.மீ. ஸ்டாண்டர்டு வாரண்டி தருகிறது. இதை 8 ஆண்டும் அல்லது 80,000 கி.மீ. வரைக்கும் நீட்டிக்க முடியும். பேட்டரி ஹெல்த் 70% கீழ் போனால், பேட்டரியை மாற்றித் தருவதும் இதில் அடங்கும்.

46
 ஏத்தர் ரிஸ்டா ஃபேமிலி ஸ்கூட்டர்
Image Credit : Ather Energy

ஏத்தர் ரிஸ்டா ஃபேமிலி ஸ்கூட்டர்

சமீபத்தில் வெளியான ஏத்தர் ரிஸ்டா ஃபேமிலி ஸ்கூட்டர் மூலம், ஏத்தர் எனர்ஜி வாரண்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த ஸ்கூட்டரின் பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டும் அல்லது 80,000 கி.மீ. வாரண்டியை ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்படுகிறது.

56
டிவிஎஸ் ஐக்யூப் சீரிஸ்
Image Credit : Google

டிவிஎஸ் ஐக்யூப் சீரிஸ்

டிவிஎஸ் ஐக்யூப் சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்னொரு பிரபலமான சாய்ஸ். இதற்கு 3 ஆண்டும் அல்லது 50,000 கி.மீ. வாரண்டி கொடுக்கப்படுகிறது. பேட்டரிக்கு மட்டும் இந்த வாரண்டியை 5 ஆண்டும் அல்லது 70,000 கி.மீ. வரைக்கும் நீட்டிக்கலாம்.

66
சிம்பிள் எனர்ஜி நிறுவனம்
Image Credit : Google

சிம்பிள் எனர்ஜி நிறுவனம்

சிம்பிள் ஒன் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டும் அல்லது 30,000 கி.மீ. பேட்டரி வாரண்டி கிடைக்கிறது. சிம்பிள் எனர்ஜி நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டும்/50,000 கி.மீ. அல்லது 8 ஆண்டும்/80,000 கி.மீ. என எக்ஸ்டெண்டட் வாரண்டி பிளான்களையும் ஆப்ஷனாக கொடுக்கிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
மின்சார ஸ்கூட்டர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெக்ஸான் முதல் கர்வ் இவி வரை மெகா தள்ளுபடி... டாடா ஆஃபரால் ஷோரூம்களில் குவியும் வாடிக்கையாளர்கள்
Recommended image2
Now Playing
Upcoming Cars | கார் வாங்க பிளானா? அடுத்த 2 வருஷத்துல வரப்போற இந்த 5 காம்பேக்ட் SUV-க்களைப் பாருங்க!
Recommended image3
Upcoming Cars: கார் வாங்க பிளானா? அடுத்த 2 வருஷத்துல வரப்போற இந்த 5 காம்பேக்ட் SUV-க்களைப் பாருங்க!
Related Stories
Recommended image1
அடேங்கப்பா இத்தனை லட்சம் EV ஸ்கூட்டர் விற்பனையா? ஏத்தர் படைத்த அடிபொலி சாதனை
Recommended image2
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved