MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Best 250cc Bikes: பட்ஜெட் விலை முதல் பவர் வரை! இந்தியாவின் சிறந்த 200cc - 250cc பைக்குகள் லிஸ்ட் இதோ!

Best 250cc Bikes: பட்ஜெட் விலை முதல் பவர் வரை! இந்தியாவின் சிறந்த 200cc - 250cc பைக்குகள் லிஸ்ட் இதோ!

Best 250cc Bikes: நீங்கள் ஒரு புதிய பைக் வாங்க பிளான் பண்ணிட்டு இருக்கீங்களா? அதுவும் கொஞ்சம் பவர்ஃபுல்லான மாடலாக‌ தேடிட்டு இருக்கீங்களா? அப்படி என்றால் 200cc-லிருந்து 250cc செக்மென்டில் இந்தியாவிலேயே சிறந்த பைக்குகள் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 26 2026, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவின் சிறந்த 200cc 250cc பைக்குகள் (Best 250cc Bikes In India)
Image Credit : AI

இந்தியாவின் சிறந்த 200cc - 250cc பைக்குகள் (Best 250cc Bikes In India)

நாம் புது பைக் வாங்க வேண்டும் என நினைத்தால் அது பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் கெத்தான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அந்த வகையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் சிறந்த 200cc முதல் 250cc வரையிலான சில பைக்குகள் அட்டகாசமான தோற்றம் மற்றும் அம்சங்களை வழங்குகின்றன. பஜாஜ், சுசுகி, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் பைக்குகள் இதில் அடங்கும். இந்த சிறந்த பைக்குகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R (Hero Xtreme 250R)
Image Credit : our own

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R (Hero Xtreme 250R)

ஹீரோ நிறுவனம், தனது எக்ஸ்ட்ரீம் 250R பைக் மூலமா குவார்ட்டர்-லிட்டர் நேக்கட் பைக் செக்மென்ட்டில் நுழைந்துள்ளது. இதில் 249cc லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது 30 hp பவரை கொடுக்கிறது. ஷார்ப்பான பாடி, மஸ்குலர் லுக்னு ரோட்ல ஒரு தனி கெத்தைக் காட்டுகிறது. இந்த பைக்கின் எடை 167.7 கிலோ, சீட் உயரம் 806 மிமீ. இதனால் ஓட்டுறதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கும். USD சஸ்பென்ஷன், முன்பக்கம் பின்பக்கம் டிஸ்க் பிரேக், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஃபுல் LED லைட்டிங்னு மாடர்ன் ஃபீச்சர்ஸும் இந்த பைக்கில் உள்ளது.

Related Articles

Related image1
Top 5 Automatic Cars: கியர் மாற்றும் டென்ஷன் இல்லை.. புதிய ஓட்டுநர்களுக்கான டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Related image2
Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
35
டிவிஎஸ் ரோனின் (TVS Ronin)
Image Credit : stockPhoto

டிவிஎஸ் ரோனின் (TVS Ronin)

டிவிஎஸ் ரோனின், இந்த செக்மென்ட்டில் இருக்குற மற்ற பைக்குகளை விட பார்க்கவே ரொம்ப வித்தியாசமாக உள்ளது. வெறும் பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸை மட்டும் குறிவைக்காம, நியோ-ரெட்ரோ ஸ்டைலுடன் சொகுசான பயண அனுபவத்தையும் கொடுக்கிறது. இதில் 225.9cc ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது 20.4 hp பவரை கொடுக்கிறது. இந்த பைக்கை ஹேண்டில் பண்றது ரொம்ப சுலபம். சீட் உயரம் 795 மிமீ, எடை 159 கிலோதான். இதனால் தினமும் ஓட்டுறதுக்கு ரொம்ப வசதியா இருக்கும். ரைடிங் மோட்ஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டூயல்-சேனல் ABS (டாப் வேரியன்ட்களில்) போன்ற அம்சங்களும் இதில் உள்ளது.

45
சுசுகி ஜிக்ஸர் 250 (Suzuki Gixxer 250)
Image Credit : our own

சுசுகி ஜிக்ஸர் 250 (Suzuki Gixxer 250)

சுசுகி ஜிக்ஸர் 250 பைக்கில் 249cc ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.77 hp பவரை கொடுக்கிறது. சுசுகியோட இந்த குவார்ட்டர்-லிட்டர் இன்ஜின், நல்ல மிட்-ரேஞ்ச் பெர்ஃபாமன்ஸுக்கும், ஸ்மூத்தான பயண அனுபவத்துக்கும் பெயர் போனது. இதனால லாங் டிரைவ், ஹைவே பயணங்களுக்கு இது ஒரு சூப்பர் சாய்ஸ். 156 கிலோ எடை கொண்ட இந்த பைக், இந்த கிளாஸ்லயே ரொம்ப எடை குறைவான பைக்குகளில் ஒன்றாகும். ஷார்ப்பான, ஆங்குலர் ஸ்டைலிங், வசதியான ரைடிங் பொசிஷன், ஸ்மூத் இன்ஜின் இதெல்லாம்தான் இதன் ஸ்பெஷாலிட்டி ஆகும்.

55
பஜாஜ் பல்சர் N250 (Bajaj Pulsar N250)
Image Credit : our own

பஜாஜ் பல்சர் N250 (Bajaj Pulsar N250)

பஜாஜ் பல்சர் N250 பைக்கில் 249cc ஏர்-அண்ட்-ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 24.5 hp பவரை கொடுக்குது. தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற மாதிரி ஸ்மூத்தான பவர் டெலிவரியை பஜாஜ் இதில் கொடுத்திருக்காங்க. அதே சமயம், ஹைவே ரைடிங்கிற்கும் நல்ல பெர்ஃபாமன்ஸை கொடுக்கிறது. 162 கிலோ எடை, 795 மிமீ சீட் உயரம் இருப்பதால் டிராஃபிக்கில் ஓட்டுறதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கும். புது வெர்ஷன்ல டிராக்‌ஷன் கண்ட்ரோல், ABS, ரைடிங் மோட்ஸ், LED லைட்டிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பைக்குகள்
ஆட்டோ செய்திகள்
ஆட்டோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Upcoming Mid Size SUVs: கிரெட்டாவின் ஆதிக்கத்திற்கு ஆப்பு வைக்க வரும் 2 புதிய எஸ்யூவி-கள்!
Recommended image2
Renault Kiger: ரூ.1.46 லட்சம் வரை விலை குறைப்பு! மிரட்டலாக என்ட்ரி கொடுத்த புதிய 2026 ரெனால்ட் கைகர்!
Recommended image3
Toyota Innova Crysta : இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடல் விற்பனையை ஸ்டாப் பண்ண உள்ளதா டொயோட்டா?
Related Stories
Recommended image1
Top 5 Automatic Cars: கியர் மாற்றும் டென்ஷன் இல்லை.. புதிய ஓட்டுநர்களுக்கான டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Recommended image2
Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved