அதிக மைலேஜ் குறைந்த விலையில்.. மக்கள் தேடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்
இந்தியாவில் நீண்ட ரேஞ்ச் வழங்கும் முக்கிய ஸ்கூட்டர்களின் விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீண்ட ரேஞ்ச் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, குறிப்பாக ஸ்கூட்டர்களுக்கு, பெரும் வரவேற்பு கிடைத்தது வருகிறது. தினசரி பயணத்திற்கும், செலவு குறைவதற்கும் மக்கள் அதிகம் விரும்புவதால், பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இப்போது சந்தையில் கிடைக்கும் சில முக்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பார்ப்போம்.
டிவிஎஸ் ஆர்பிட்டர்
டிவிஎஸ் ஆர்பிட்டர் ரூ.99,990 விலையில் கிடைக்கிறது. 3.1 kWh பேட்டரி கொண்ட இது, 158 கிமீ வரை ரேஞ்ச் தரும். ப்ளூடூத் கனெக்டிவிட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட், ரிவர்ஸ் அசிஸ்ட் போன்ற சிறப்பு அம்சங்கள் உடன் வருகிறது.
ஹீரோ விடா VX2
ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்திய விடா VX2, இரண்டு வேரியன்ட்களில் (VX2 கோ, VX2 பிளஸ்) கிடைக்கிறது. விலை முறையே ரூ.99,490 மற்றும் ரூ.1.10 லட்சம். 2.2 kWh ரிமூவபிள் பேட்டரியால் இயங்கும் இது, 92 கிமீ ரேஞ்சை வழங்கும். 0 முதல் 40 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டும் இந்த ஸ்கூட்டரின் மேக்சிமம் வேகம் மணிக்கு 70 கிமீ. 4.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ஈக்கோ மற்றும் ரைடு மோடுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
ஓலா எஸ்1 ப்ரோ
ஓலா எலக்ட்ரிக் அறிமுகப்படுத்திய புதிய எஸ்1 ப்ரோ ஸ்போர்ட் ஜென் 3, ரூ.1.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம். ஜனவரி 2026 முதல் டெலிவரி தொடங்கும். 5.2 kWh பேட்டரி கொண்ட இது, 320 கிமீ ரெஞ்சை வழங்கும். மேலும், 15 நிமிடங்களில் பேட்டரியை 20% முதல் 80% வரை சார்ஜ் செய்யும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
அல்ட்ராவைலட் டெசராக்ட்
புதிய தலைமுறை பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஆல்ட்ராவைலட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.1.45 லட்சம் விலையில் கிடைக்கிறது. 14-இன்ச் வீல்கள், டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், 7-இன்ச் டஸ்கிரீன் TFT கன்சோல், ஒருங்கிணைந்த டேஷ்கேம், வயர்லெஸ் சார்ஜிங் போன்றவை அம்சங்களுடன் வருகிறது. இவை அனைத்தும் சேர்ந்து, டெசராக்டை சந்தையில் வித்தியாசமான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக மாறுகின்றன.