ரூ.60 ஆயிரத்திற்குள்.. ஒரு சார்ஜில் 140 கி.மீ செல்லும் Gracy மின்சார ஸ்கூட்டர்
Zelio E Mobility நிறுவனம் Gracyi மின்சார ஸ்கூட்டரை புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று விதமான பேட்டரி விருப்பங்கள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

60 ஆயிரம் கீழ் மின்சார ஸ்கூட்டர்
Zelio E Mobility நிறுவனம் தனது பிரபலமான Gracyi மின்சார ஸ்கூட்டரை புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் ஆனது மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் டெலிவரி பணி செய்பவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு உள்ளது. விலை ரூ.54,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
குறைந்த விலை ஸ்கூட்டர்
இந்த ஸ்கூட்டர் மூன்று விதமான பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது.
- 72V/42Ah ஜெல் பேட்டரி – விலை ரூ.58,500, ரென்ஜ் 130–140 கி.மீ.
- 60V/30Ah லித்தியம்-அயான் பேட்டரி – விலை ரூ.66,000, ரேன்ஜ் 90–100 கி.மீ.
- 60V/32Ah ஜெல் பேட்டரி – விலை ரூ.54,000, ரெஞ்ச் 80–90 கி.மீ.
செயல்திறன் மற்றும் சார்ஜிங்
Gracyi-யில் 60/72V BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறையான பூரண சார்ஜுக்கு வெறும் 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. லித்தியம்-அயன் பேட்டரி மாடல் நான்கு மணி நேரத்தில் சார்ஜ் ஆகும், ஜெல் பேட்டரி மாடல்கள் எட்டு மணி நேரம் எடுக்கும். அதிகபட்ச வேகம் 25 கி.மீ./மணிநேரம், 180 மிமீ கிரௌண்ட் கிளியரன்ஸ், 150 கிலோ பாரம் சுமக்கும் திறன், 85 கிலோ எடை ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
பாதுகாப்பு மற்றும் வசதி
முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக், ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், டிஜிட்டல் மீட்டர், எல்இடி ஹெட்லாம்ப், கீலெஸ் டிரைவ், திருட்டு தடுப்பு அலாரம், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், பயணிக்குப் பாதம் வைக்க தனி வசதி என அனைத்தும் உள்ளன. பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் உத்தரவாதம், மோட்டார், கண்ட்ரோலர், ஃப்ரேமுக்கு இரண்டு ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
மலிவு விலை மின்சார வாகனம்
Zelio E Mobility நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் குணால் ஆர்யா அறிவித்தார்: -“இந்த புதிய Gracyi மாடல் மூலம் நாங்கள் வடிவமைப்பு, செயல்திறன், புதுமையை இணைத்து இந்திய பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்கிறோம். மின்சார வாகனங்கள் அனைவருக்கும் எளிதாகவும் அணுகத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று கூறினார்.