ஒரே சார்ஜில் 156 கிமீ பயணம் செய்யும் Diplos Max+ ஸ்கூட்டர்.. விலை இவ்வளவு தானா.!
Numeros Motors தனது Diplos Max இ-ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் Diplos Max+-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிசைன், இரட்டை பேட்டரி, 156 கிமீ வரை ரேஞ்ச், மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

டிப்ளோஸ் Max+
இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் முன்னேறி வரும் Numeros Motors, தனது பல்துறை பயன்பாட்டு இ-ஸ்கூட்டர் Diplos Max–இன் மேம்படுத்தப்பட்ட மாடல் Diplos Max+-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Diplos Max+ மாடலில் 5 முக்கிய மேம்பாடுகள் உள்ளன.
நியூமெரோஸ் மோட்டார்ஸ்
புதுமையான டிசைன் மற்றும் இரட்டை நிற வடிவமைப்பு (Blaze Red, Piano Black, Volt Blue) அறிமுகமாகியுள்ளது. 4.0 kWh கொள்ளளவு கொண்ட இரட்டை திரவ மூழ்கும் குளிர்ச்சி பேட்டரி, அதிகபட்ச வேகம் 70 கிமீ/மணி, மற்றும் 156 கிமீ (IDC) வரை சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் திறன் என்பவையே இதன் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். மேலும் வேகமான பிக்-அப் வசதியையும் வழங்குகிறது.
156 கிமீ ரேஞ்ச்
இந்த இ-ஸ்கூட்டர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுள் ஆகிய மூன்று அடிப்படைகளின் பேரில் உள்ளது. இரட்டை டிஸ்க் பிரேக்குகள், எல்இடி விளக்குகள், திருட்டு எச்சரிக்கைகள், ஜியோஃபென்சிங் மற்றும் வாகன கண்காணிப்பு போன்ற வசதிகள் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. வலுவான சதுர சாசி மற்றும் அகலமான டயர்கள் பல்வேறு தரைப்பரப்புகளில் நீண்ட கால பயன்படுத்தும் வலிமையையும் தருகின்றன.
70 கிமீ வேகம்
தற்போது Bengaluru ex-showroom விலை ரூ.1,14,999க்கு கிடைக்கும் Diplos Max+, இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. நியூமெரோஸ் மோட்டார்ஸ் தற்போது 14 நகரங்களில் சேவை செய்து வருகிறது. மேலும் நிதியாண்டு 26-27க்குள் 50 நகரங்களில் குறைந்தது 100 டீலர்களை இணைக்க திட்டமிட்டுள்ளது.