நவம்பரில் மாஸ் காட்டிய டாப் 5 பைக் நிறுவனங்கள்; இவ்வளவு பைக்குகள் விற்பனையா?
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிக பைக்குகள் விற்பனையாகின. இதில் முதல் 5 இடத்தில் இருக்கும் நிறுவனங்க்ள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

Bike sales in india
இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதற்கு ஏற்ப வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கார், இரு சக்கர வாகனங்களின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இந்தியாவில் 2024ம் ஆண்டு விற்பனையில் மாஸ் காட்டிய முதல் 5 இரு சக்கர வாகனங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
ஹோண்டா இந்தியா நிறுவனம்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் நவம்பர் 4,72,749 யூனிட்கள் இரு சக்கர வாகன விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 5.55 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் 4,32,888 இருசக்கர வாகன யூனிட்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
Top 5 highest selling bikes in india
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம்
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 94,370 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. கடந்த் ஆண்டு நவம்பரில் விற்பனை 87,096 யூனிட்டுகளாக இருந்த நிலையில் இப்போது விற்பனை 8% அதிகரித்துள்ளது. சுசுகி நவம்பர் மாதம் உள்நாட்டில் மட்டும் 78,333 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 16,037 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
ஊரெல்லாம் இதே பேச்சு.. புஷ்பா 2 கார் பற்றி வலைவீசி தேடும் நெட்டிசன்கள்!
TVS motor bike sales
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 3,92,473 இரு சக்கர வாகன விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தை விட 12 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனத்தின் உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டு நவம்பரில் 2,87,017 யூனிட்களில் இருந்து இப்போது 3,05,323 யூனிட்டுகளாக சுமார் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
Royal Enfield bike sales
ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 82,257 யூனிட் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 80,251 யூனிட் பைக்குகள் விற்பனையான நிலையில், இது இப்போது விற்பனை 2% அதிகரித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அண்மையில் அதன் முதல் மின்சார பைக்கான ஃப்ளையிங் ஃப்ளீ சி6 மாடல் மற்றும் பியர் 650 மற்றும் கோன் கிளாசிக் 350 மாடல் பைக் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. நவம்பரில் மட்டும் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சுமார் 96% அதிகரித்து 10,021 யூனிட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ
கடந்த மாதம் நவம்பரில் பஜாஜ் ஆட்டோவின் ஒட்டுமொத்த இரு சக்கர வாகன விற்பனை 3,68,076 யூனிட்டுகளாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3,49,048 யூனிட்கள் விற்பனையான நிலையில், இப்போது விற்பனை சதவீதம் அதிகரித்துள்ளது.