நீண்ட டிரைவ் போறீங்களா? இந்த 5 கார்கள் இருந்தா பெட்ரோல் கவலையே இல்லை!
நீண்ட சாலைப் பயணங்களுக்கு கம்ஃபர்ட், நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த விலை ஆகியவை முக்கியம். இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஹாட்ச்பேக் கார்கள் இந்திய சந்தையில் அதிகமாக பிரபலமாக உள்ளன.

குறைந்த விலை ஹாட்ச்பேக் கார்கள்
நீண்ட சாலைப் பயணங்களுக்கு ஏற்ற கார்கள் என்றாலே, செலவு குறைந்து, மைலேஜ் நல்லதாகவும், பயணத்தில் சௌகரியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் சமநிலைப்படுத்தும் வகையில் ஹாட்ச்பேக் கார்கள் பலர் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக இந்திய சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் சில ஹாட்ச்பேக் மாடல்கள் ரோடு ட்ரிப் பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளன.
இந்தியாவில் மைலேஜ் கார்கள்
இந்த பட்டியலில் முதலில் குறிப்பிட வேண்டியது டொயோட்டா கிளான்சா. ரூ.6.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் விலையில் கிடைக்கும் இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இதன் மைலேஜ் பெட்ரோல் மனுவல் மாடலில் 22.35 கிமீ/லிட்டர், ஆட்டோமேட்டிக் மாடலில் 22.94 கிமீ/லிட்டர். மேலும் CNG மாடலும் இருப்பதால், 30.61 கிமீ/கிலோ வரை மைலேஜ் கிடைக்கும்.
ரோடு ட்ரிப் கார்கள்
அடுத்ததாக ஹூண்டாய் i20 மாடல் பேசப்படுகிறது. ரூ.5.99 லட்சம் முதல் விலையில் தொடங்கும் இந்த கார் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. மனுவல் மற்றும் iVT டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் வரும் இந்த கார், சுமார் 82 முதல் 87 ஹார்ஸ்பவர் வரை சக்தி உற்பத்தி செய்கிறது. நகரமும், நீண்ட பயணங்களும் இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது.
ஸ்விஃப்ட் மைலேஜ்
மற்றொரு பிரபலமான தேர்வு மாருதி சுசூகி ஸ்விஃப்ட். ரூ.5.79 லட்சம் முதல் விலையில் கிடைக்கும் இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. மைலேஜ் விஷயத்தில் இது முன்னிலையில் உள்ளது. மனுவல் மாடலில் 24.8 கிமீ/லிட்டர், எம்எம்டி மாடலில் 25.75 கிமீ/லிட்டர் கிடைக்கிறது. மேலும் CNG மாடலில் 32.85 கிமீ/கிலோ வரை மைலேஜ் தருகிறது.
டாடா ஆல்ட்ரோஸ்
மேலும் டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் மாருதி பாலேனோ ஆகியவையும் பயணங்களுக்கு ஏற்ற சிறந்த ஹாட்ச்பேக் கார்கள். ஆல்ட்ரோஸ் ரூ.6.30 லட்சம் முதல் விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என பல விருப்பங்களில் கிடைக்கிறது. பாலேனோ ரூ.5.99 லட்சம் முதல் விலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. நல்ல மைலேஜ், சௌகரியம் மற்றும் விலை குறைவு காரணமாக, இந்த ஹாட்ச்பேக் கார்கள் நீண்ட டிரைவ்களுக்கு சிறந்த துணையாக இருக்கும்.

