MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஆட்டோமேட்டிக் கியர் & குறைந்த பராமரிப்பு செலவு: இந்த தீபாவளிக்கு டாப் 5 சி.என்.ஜி கார்கள்!

ஆட்டோமேட்டிக் கியர் & குறைந்த பராமரிப்பு செலவு: இந்த தீபாவளிக்கு டாப் 5 சி.என்.ஜி கார்கள்!

இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் சொந்தமாகச் சீரான மைலேஜ் தரும் சிஎன்ஜி (CNG) கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்காக, இந்தியச் சந்தையில் ரூ.6.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் கார்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

3 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 27 2026, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தீபாவளி ஆஃபர் சி.என்.ஜி கார்கள்
Image Credit : Gemini

தீபாவளி ஆஃபர் சி.என்.ஜி கார்கள்

வணிக ரீதியிலான டாக்ஸி சேவைகளுக்கு மட்டுமே சிஎன்ஜி (CNG) வாகனங்கள் ஏற்றவை என்ற எண்ணம் இப்போது முழுமையாக மாறத் தொடங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பண்டிகைக் காலப் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில், குறைந்த பராமரிப்புச் செலவுக்காகப் பொதுமக்கள் பலரும் இப்போது சொந்த உபயோகத்திற்கும் சிஎன்ஜி கார்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

மஹிந்திராவின் புதிய 'XUV 3XO ZNG' போன்ற அதிநவீன கார்களும், டாடாவின் ஆட்டோமேட்டிக் வசதி கொண்ட சிஎன்ஜி மாடல்களும் வந்துவிட்ட நிலையில், இந்த தீபாவளிப் பண்டிகைக்குக் குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் வாங்கக்கூடிய டாப் 5 சிஎன்ஜி கார்களின் பட்டியல்களை பற்றி பார்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)
Image Credit : X

மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)

வேரியன்ட்கள் - LXi (O) மற்றும் VXi (O)

விலை (Ex-showroom) - ரூ.4.64 லட்சம் முதல் ரூ.5.14 லட்சம் வரை

சிஎன்ஜி வகை - தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டது (Factory-fit)

காரில் பயணிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் முதன்மைத் தேர்வாக எஸ்-ப்ரெஸ்ஸோ உள்ளது. இதன் சிஎன்ஜி பதிப்பில் 1-லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி மோடில் 57 PS ஆற்றலையும் 82 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

இது வேகத்திற்கான கார் அல்ல; மாறாகச் செலவைக் குறைப்பதற்கான கார். ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 32.73 கி.மீ மைலேஜ் தருவதாக நிறுவனம் சான்றளித்துள்ளது. பெட்ரோல் மோடிலும் லிட்டருக்கு 25.30 கி.மீ மைலேஜ் தருகிறது. இதில் ஆட்டோமேட்டிக் வசதி இல்லை மற்றும் ஒற்றைச் சிலிண்டர் என்பதால் டிக்கி (Boot space) இடம் சற்றே குறைவாகவே இருக்கும். இருப்பினும் தினசரி பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இதில் உள்ளன.

36
மாருதி சுசுகி ஆல்ட்டோ K10 (Maruti Suzuki Alto K10)
Image Credit : X

மாருதி சுசுகி ஆல்ட்டோ K10 (Maruti Suzuki Alto K10)

வேரியன்ட்கள் - LXi (O) மற்றும் VXi (O)

விலை (Ex-showroom) - ரூ.4.84 லட்சம் முதல் ரூ.5.34 லட்சம் வரை

சிஎன்ஜி வகை - தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டது (Factory-fit)

நகர்ப்புறப் போக்குவர நெரிசலை எளிதாகக் கடக்க உதவும் சிறிய கார் ஆல்ட்டோ K10. எஸ்-ப்ரெஸ்ஸோவை விட ரூ.20,000 மட்டுமே கூடுதல் விலையில் இதன் சிஎன்ஜி மாடல் கிடைக்கிறது. அதே 1-லிட்டர் என்ஜின் மற்றும் 57 PS ஆற்றலை வெளிப்படுத்தினாலும், மைலேஜில் இது எஸ்-ப்ரெஸ்ஸோவை முந்துகிறது. இதன் சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 33.40 கி.மீ மைலேஜ் தருகிறது. இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் இல்லை என்றாலும், குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட சிறந்த பாதுகாப்பு அம்சங்களை மாருதி நிறுவனம் வழங்குகிறது.

46
ரெனால்ட் க்விட் (Renault Kwid)
Image Credit : X

ரெனால்ட் க்விட் (Renault Kwid)

வேரியன்ட்கள் - எவோலூஷன் (Evolution) மற்றும் கிளைம்பர் (Climber)

விலை (Ex-showroom) - ரூ.5.23 லட்சம் முதல் ரூ.5.85 லட்சம் வரை

சிஎன்ஜி வகை - அங்கீகரிக்கப்பட்ட டீலர் மூலம் பொருத்தப்படுவது (Authorised dealer retrofit)

சிறிய பட்ஜெட்டில் எஸ்யுவி (SUV) போன்ற தோற்றமும், சொகுசான பயண அனுபவமும் பெற விரும்பிகளுக்கு ரெனால்ட் க்விட் ஒரு நல்ல தேர்வாகும். தற்போது ரெனால்ட் நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் சிஎன்ஜி கிட் பொருத்திக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. இதன் 1-லிட்டர் என்ஜின் பெட்ரோல் மோடில் 69 PS ஆற்றலையும் 92.5 Nm டார்க்கையும் தரும். சிஎன்ஜி மோடில் இதன் ஆற்றல் சற்று குறைவாக இருக்கும். க்விட் காரின் டாப்-எண்ட் வேரியன்ட்களிலும் சிஎன்ஜி வசதியைப் பெற முடியும் என்பதால், டச் ஸ்கிரீன் மற்றும் சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை நாம் இழக்க வேண்டியதில்லை.

56
டாடா டியாகோ (Tata Tiago)
Image Credit : X

டாடா டியாகோ (Tata Tiago)

வேரியன்ட்கள் - Smart, Pure, Pure Plus, Pure Plus A, Creative

விலை (Ex-showroom) - ரூ.5.87 லட்சம் முதல் ரூ.8.62 லட்சம் வரை

சிஎன்ஜி வகை - தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டது (Factory-fit)

இந்த பட்டியலில் உள்ள மற்ற கார்களை விட டாடா டியாகோ முற்றிலும் மாறுபட்டது. சிஎன்ஜி காரில் வழக்கமாக எதிர்கொள்ளும் டிக்கி இடவசதி பிரச்சனைக்கும், ஆட்டோமேட்டிக் வசதி இல்லாமைக்கும் டியாகோ முற்றுப்புள்ளி வைக்கிறது. 1.2-லிட்டர் என்ஜின் கொண்ட இந்த கார், சிஎன்ஜி மோடில் 75.5 PS ஆற்றலையும் 96.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இப்பட்டியலிலேயே ஆட்டோமேட்டிக் (AMT) வசதியுடன் கிடைக்கும் ஒரே சிஎன்ஜி கார் இதுதான். மேலும், இதில் இரட்டை சிலிண்டர் (Dual-cylinder) தொழில்நுட்பம் உள்ளதால், டிக்கியில் தாராளமாகப் பொருட்களை வைக்க இடம் கிடைக்கிறது. மிகச்சிறந்த பாதுகாப்பு தரமதிப்பீடும் இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

66
மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)
Image Credit : X

மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)

வேரியன்ட்கள் - LXi மற்றும் VXi

விலை (Ex-showroom) - ரூ.5.94 லட்சம் முதல் ரூ.6.49 லட்சம் வரை

சிஎன்ஜி வகை: தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டது (Factory-fit)

குறைந்த பட்ஜெட் சிஎன்ஜி கார்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது அனைவராலும் விரும்பப்படும் மாருதி வேகன் ஆர். எஸ்-ப்ரெஸ்ஸோ மற்றும் ஆல்ட்டோவில் பயன்படுத்தப்படும் அதே 1-லிட்டர் என்ஜின் தான் இதிலும் உள்ளது (57 PS ஆற்றல் & 82.1 Nm டார்க்). இது ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 33.47 கி.மீ மைலேஜ் தருகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இதில் உண்டு. இந்த பட்டியலில் உள்ள கார்களிலேயே மிகவும் விசாலமான உள்கட்டமைப்பு (Cabin Space) கொண்ட கார் வேகன் ஆர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kia India sales: அறிமுகமான முதல் மாதத்திலேயே 1,739 கார்கள் விற்பனை.. எந்த கார் தெரியுமா?
Recommended image2
Electric vs Petrol Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டரா, பெட்ரோல் ஸ்கூட்டரா? ஓராண்டில் எதில் செலவு குறைவு?
Recommended image3
88% அசுர வளர்ச்சி கண்ட ஹீரோ விடா; பட்டையைக் கிளப்பும் டிவிஎஸ் ஐகியூப்: பஜாஜ், ஏத்தர் நிறுவனங்களின் நிலை என்ன?
Related Stories
Recommended image1
88% அசுர வளர்ச்சி கண்ட ஹீரோ விடா; பட்டையைக் கிளப்பும் டிவிஎஸ் ஐகியூப்: பஜாஜ், ஏத்தர் நிறுவனங்களின் நிலை என்ன?
Recommended image2
ஆன்டி-கிளேர் 2.1K டிஸ்ப்ளே, ஹீலியோ G300 பிராசஸர்: 7,060mAh பேட்டரியுடன் லெனோவா 10.1 இன்ச் டேப்லெட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved