- Home
- Auto
- Best Bikes For Office: கம்மி விலை... செம மைலேஜ்! ஆபீஸ் போறவங்களுக்கு இந்த 4 பைக்குகள் தான் பெஸ்ட்!
Best Bikes For Office: கம்மி விலை... செம மைலேஜ்! ஆபீஸ் போறவங்களுக்கு இந்த 4 பைக்குகள் தான் பெஸ்ட்!
Best Bikes For Office: தினமும் ஆபிஸ் போறவங்களுக்கு பைக் அத்தியாவசிய ஒன்று. அந்த வகையில் ஆபிஸ் போறவங்களுக்கு ஏற்ற அதிக மைலேஜ் கொடுக்கும், விலையும் பட்ஜெட்டில் இருக்கும் பைக்குகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆபிஸ் போறவங்களுக்கு ஏற்ற பைக்குகள்
தினமும் ஆபிஸ் போறதுக்கு நல்ல மைலேஜ், குறைஞ்ச மெயின்டனன்ஸ், சொகுசான பயணம் தரும் ஒரு பைக் தேடுறீங்களா? ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன் 125, டிவிஎஸ் ரைடர் 125, பஜாஜ் பல்சர் 125-னு இந்தியாவோட பாப்புலர் 125சிசி பைக்குகள் என வரிசைகட்டி நிற்குது. உங்க பட்ஜெட், தேவைக்கு எது செட் ஆகும்னு விலை, ஃபீச்சர்ஸ், மைலேஜ் வெச்சு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor)
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் வேலைக்கு போகும் பலருக்கும் ஒரு ஃபேவரைட் பைக். இதோட முக்கிய காரணம், நம்பகமான 124.7cc இன்ஜினும், சிம்பிளான டிசைனும்தான். இந்த பைக் எந்த ஆடம்பரமும் இல்லாம, வருஷக்கணக்குல உழைக்கும். நிமிர்ந்து உட்காரும் பொசிஷன், சொகுசான சிங்கிள்-பீஸ் சீட் இருக்கிறதால, எவ்வளவு நேரம் டிராஃபிக்ல நின்னாலும் முதுகு வலியோ, தோள்பட்டை வலியோ வராது.
விலையும் ரொம்ப கம்மி
ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125)
இந்த செக்மென்ட்ல அதிகமா விற்பனையாகுற, ரொம்ப நம்பகமான பைக் இதுதான். இதோட பெரிய சிறப்பம்சமே சைலன்ட் ஸ்டார்ட் மற்றும் இன்ஜினோட ஸ்மூத்னெஸ்தான். காலையில ஆபிஸுக்கு கிளம்பும்போது, எந்த சத்தமும், அதிர்வும் இல்லாம இன்ஜின் ஸ்டார்ட் ஆகும். கடுமையான டிராஃபிக்ல கூட, இதோட கியர் ஷிஃப்ட்டிங், கிளட்ச் எல்லாமே ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். அதனால ஓட்டுறவங்களுக்கு டயர்டே ஆகாது.
ஒரு லிட்டருக்கு 65 கிலோமீட்டர் மைலேஜ்
டிவிஎஸ் ரைடர் 125 (TVS Rider 125)
நீங்கல் ஒரு யங்ஸ்டரா இருந்தா, இல்ல உங்க ஆபிஸ் பைக் ஸ்போர்ட்டி லுக்கோட லேட்டஸ்ட் ஃபீச்சர்ஸ்ல இருக்கணும்னு நினைச்சா, டிவிஎஸ் ரைடர் 125 உங்களுக்கு சரியான சாய்ஸ். இதோட மாடர்ன் டிசைன், ரோபோட்டிக் LED ஹெட்லைட், மஸ்குலர் ஃபியூயல் டேங்க் எல்லாம் கூட்டத்துல தனியா காட்டும். இதோட இன்ஜின் ரொம்ப அட்வான்ஸ்டு. வேகமா பிக்கப் ஆகும், அதனால ஆபிஸ் அவசரத்துல டிராஃபிக்கை ஈஸியா சமாளிச்சுட்டு போகலாம்.
எக்ஸ்-ஷோரூம் விலை ₹82,810
பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125)
குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் பைக்கோட ஃபீலை அனுபவிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இதுதான் சரியான பைக். இதோட சேஸிஸ், மஸ்குலர் பாடி எல்லாம் இதோட அண்ணன் பல்சர் 150 போலவே இருக்கும். அதனால ரோட்ல ஒரு கெத்தான லுக் கொடுக்கும். ஆபிஸ் போகும்போது, இந்த பைக் ஒரு ஸ்ட்ராங்கான, உறுதியான உணர்வைக் கொடுக்கும். ஹைவேஸ்ல வேகமா போகும்போதும் முழு கண்ட்ரோல் உங்க கையில இருக்கும்.

