- Home
- Auto
- பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! வாகனத்தில் கலர் ஸ்டிக்கர் இல்லேனா ரூ.5000 அபராதம்; அரசு அதிரடி உத்தரவு
பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! வாகனத்தில் கலர் ஸ்டிக்கர் இல்லேனா ரூ.5000 அபராதம்; அரசு அதிரடி உத்தரவு
வானங்களில் எரிபொருளின் வகையை எளிதில் கண்டறியும் வகையில் வாகனங்களில் கலர் ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயம் என்றும், வாகனத்தில் ஸ்டிக்கர் இல்லாத பட்சத்தில் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Traffic Rules
Traffic Rules: வாகனங்களில் எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ணக் குறியீட்டு ஸ்டிக்கர்களை கட்டாயமாக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. பயன்படுத்தப்படும் எரிபொருள் வகையைக் காட்டாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, உத்தரவைப் பின்பற்றாத வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களை (PUCC) பெற முடியாது. வாகனங்களின் எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ணக் குறியீடு கொண்ட ஸ்டிக்கர்கள், 2012-13 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்புப் பதிவுத் தகடுகள் (HSRP) சட்டத்தின் ஒரு பகுதியாகும். 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டது.
Traffic Rules
வாகனங்களை அடையாளம் காண கலர் ஸ்டிக்கர்
இந்த ஸ்டிக்கரை புதிய மற்றும் பழைய வாகனங்களில் ஒட்ட வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாகனம் எந்த வகையான எரிபொருளில் இயங்குகிறது என்பதை அதிகாரிகள் ஒரே பார்வையில் அறிந்து கொள்ள முடியும். விதிகளைப் பின்பற்றத் தவறினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
Traffic Rules
உத்தரவை பின்பற்றாத வாகனங்களுக்கு அபராதம்
இந்த ஸ்டிக்கர்கள் உயர் பாதுகாப்பு பதிவுத் தகட்டின் (HSRP) ஒரு பகுதியாகும், இது 2012-13 இல் அறிமுகப்படுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. மோட்டார் வாகனங்கள் (உயர் பாதுகாப்பு பதிவுத் தகடுகள்) ஆணை 2018, வாகனத்தின் கண்ணாடியில் வண்ணக் குறியீடு கொண்ட ஸ்டிக்கரைக் காண்பிக்க வழிவகை செய்கிறது. இந்த உத்தரவை மீறினால், 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 192(1) இன் விதிகளும் பொருந்தும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Traffic Rules
எந்த வாகனத்திற்கு என்ன கலர்?
இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகளின்படி, டீசல் வாகனங்களில் ஆரஞ்சு நிற ஸ்டிக்கர்களும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களில் வெளிர் நீல நிற ஸ்டிக்கர்களும், மற்ற அனைத்து வாகனங்களிலும் சாம்பல் நிற ஸ்டிக்கர்களும் இருக்க வேண்டும். உத்தரவை பின்பற்றாத வாகன உரிமையாளர்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) கிடைக்காது. டெல்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வாகன உரிமையாளர்கள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளனர்.