MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Black Cars: கார் வாங்கும் போது கலர் முக்கியமா? கறுப்பு நிற கார்களால் இவ்வளவு ஆபத்தா?

Black Cars: கார் வாங்கும் போது கலர் முக்கியமா? கறுப்பு நிற கார்களால் இவ்வளவு ஆபத்தா?

Black Cars: மற்ற நிற கார்களை விட கறுப்பு நிற கார்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. அது என்னென்ன ஆபத்துகள்? கறுப்பு நிற கார்களை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 25 2026, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கார் வாங்கும் போது கலர் முக்கியம்
Image Credit : Facebook

கார் வாங்கும் போது கலர் முக்கியம்

நம்மில் பலர் ஒரு கார் வாங்கும் போது அதன் மைலேஜ், விலை, வசதிகள் மற்றும் பிராண்ட் போன்ற விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், காரின் நிறம் கூட சாலைப் பாதுகாப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கறுப்பு நிற கார்கள் மற்ற நிற கார்களை விட அதிக விபத்துக்களைச் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கறுப்பு நிற கார்கள் ஏன் ஆபத்து?
Image Credit : X

கறுப்பு நிற கார்கள் ஏன் ஆபத்து?

ஆட்டோமொபல் நிபுணர்களின் கூற்றுப்படி கறுப்பு நிறம் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இரவு, மழை, பனிமூட்டம் அல்லது வெளிச்சம் குறைவான நேரங்களில் கறுப்பு கார்கள் சாலையில் தெளிவாகத் தெரிவதில்லை. சாலையின் நிறம், மரங்களின் நிழல் மற்றும் இருட்டுடன் கறுப்பு கார் ஒன்றிவிடுவதால், மற்ற ஓட்டுநர்களுக்கு காரின் தூரம் மற்றும் வேகத்தைக் கணிப்பது கடினமாகிறது. சில சர்வதேச ஆய்வுகளின்படி, கறுப்பு நிற கார்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Top 5 Automatic Cars: கியர் மாற்றும் டென்ஷன் இல்லை.. புதிய ஓட்டுநர்களுக்கான டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Related image2
Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
34
மற்ற நிற கார்களுக்கு பிரச்சனை இல்லையா?
Image Credit : X

மற்ற நிற கார்களுக்கு பிரச்சனை இல்லையா?

வெள்ளை, சில்வர், மஞ்சள் மற்றும் லைட் கிரே போன்ற நிறங்கள் கொண்ட கார்கள் சாலையில் தெளிவாகத் தெரியும் என்பதால், அவை பாதுகாப்பான தேர்வுகளாகக் கருதப்படுகின்றன. இந்த நிற கார்கள் பகல் மற்றும் இரவு என இரண்டு வேளைகளிலும் எளிதாகக் கண்ணில் படும். மேலும், கறுப்பு நிறம் கோடை காலத்தில் அதிக வெப்பத்தை உறிஞ்சும். இதனால், காருக்குள் வெப்பநிலை அதிகரித்து, ஏர் கண்டிஷனர் பயன்பாடு அதிகமாகும். இது காரின் எரிபொருள் செயல்திறனையும் பாதிக்கும்.

44
கறுப்பு நிற கார்களை வைத்திருப்பவர்கள் இதை செய்யுங்க
Image Credit : X

கறுப்பு நிற கார்களை வைத்திருப்பவர்கள் இதை செய்யுங்க

அதே வேளையில் காரின் நிறம் மட்டுமே விபத்துக்குக் காரணம் அல்ல என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அதிவேகம், மொபைல் பயன்பாடு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, மோசமான வானிலை மற்றும் சாலைகளின் நிலை போன்றவையே விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள். ஒருவேளை நீங்கள் கறுப்பு கார் வைத்திருந்தால், இரவு நேரங்களில் ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் ஃபாக் லேம்ப்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாலையில் மற்ற வாகனங்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

முக்கிய அறிவிப்பு: இந்தச் செய்தி கறுப்பு நிற கார்களை வைத்திருப்பவர்களை பயமுறுத்துவதற்காக அல்ல. சர்வதேச நிபுணர்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் கருத்துகளை அப்படியே வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு மட்டுமே இது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata Nexon Offer: ரூ.75,000 வரை ஆஃபர்.. டாடா நெக்ஸான் எஸ்யூவி வாங்க சூப்பர் சான்ஸ்!
Recommended image2
TVS Price Hike: டிவிஎஸ் ஸ்கூட்டர் விலை திடீர் உயர்வு! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி
Recommended image3
மாருதி விக்டோரிஸுக்கு செக் வைக்க ஹூண்டாய், ஹோண்டா, ரெனால்ட் களமிறக்கும் 3 புதிய SUV-கள்!
Related Stories
Recommended image1
Top 5 Automatic Cars: கியர் மாற்றும் டென்ஷன் இல்லை.. புதிய ஓட்டுநர்களுக்கான டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Recommended image2
Automatic Cars: கியர் மாத்த தேவையில்லை! செம மைலேஜ்! ரூ.10 லட்சத்துக்குள் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved