Tata Sierra: 50,000 விற்பனையை கொண்டாடும் டாடா.. விலை மட்டும் இன்னும் சஸ்பென்ஸ்.. வேற லெவல்
Tata Sierra: புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. 50,000 யூனிட் விற்பனையை எட்டியதை முன்னிட்டு டாடா சியாரா ஜூப்ளி எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா சியாரா எஸ்யூவி
டாடா மோட்டார்ஸ் தனது புதிய டாடா சியாரா எஸ்யூவி 50,000 யூனிட் விற்பனையின் முக்கிய மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் ஜூப்ளி எடிஷன்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வேரியண்டாக அல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களுக்கு டீலர் மூலம் பொருத்தப்படும் (டீலர் பொருத்தப்பட்ட) ஆக்சசரி பேக்கேஜாக இது வழங்கப்படுகிறது. இந்த ஜூபிலி எடிஷன், Smart+, Pure மற்றும் Adventure ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஷோரூமிலேயே கூடுதல் ஆக்சஸரிகளுடன் சியரா-வை வாங்கும் வசதியை இதன் மூலம் பெறுகின்றனர். விருப்பமிருந்தால், முழு பேக்கேஜைத் தேர்வு செய்யாமல் தனித்தனியாக ஆக்சஸரிகளையும் வாங்கலாம் என்று டாடா தெரிவித்தார்.
ஜூப்ளி எடிஷன் வேரியண்ட்
Smart+ ஜூப்ளி எடிஷன் வேரியண்டில் முன்புற கிரில் அட்ஆன், டெயில்கேட் கிலாடிங், ரூஃப் ரெயில்ஸ், ஜூபிலி எடிஷன் பிராண்டிங் கொண்ட செமி லெதரெட் சீட் கவர்கள், 10.25 இன்ச் டஸ்கிரீன் கேமரா இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் Apple CarPlay மற்றும் 4 ரிய ஸ்பீக்கர்கள். Pure ஜூப்ளி எடிஷன் வேரியண்டில் Smart+ அம்சங்களுடன் கூடுதலாக வீல் ஆர்ச் கிலாடிங், லெதரெட் ஸ்டீரிங் வீல் கவர், மேக்னாடிக் சன் ஷேட்ஸ், பார்சல் டிரே, முன் மற்றும் பின் டாஷ்கேம்கள் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பயன்பாட்டு வசதியும் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
டாடா சியரா அம்சங்கள்
Adventure ஜூப்ளி எடிஷன் வேரியண்ட், Tata-வின் முழுமையான ROQ ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வருகிறது. இதனுடன் முன் மற்றும் பின் டாஷ்கேம்களும் வழங்கப்படுகின்றன. வெளிப்புற தோற்றத்தை மேலும் முரட்டுத்தனமாக விரும்பும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த பேக்கேஜ் உள்ளது. முக்கியமாக, ஜூப்ளி எடிஷன் என்பது தனி வேரியண்ட் அல்ல. இது டீலர் மூலம் பொருத்தப்படும் ஆக்சசரி தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான ஆக்சசரிகளை மட்டும் தனியாக தேர்வு செய்து பொருத்திக்கொள்ளலாம்.
டாடா சியாரா ஜூப்ளி எடிஷன்
இந்த ஆக்சசரி பேக்கேஜ்களின் விலையை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வேரியண்ட் வாரியான விலை மற்றும் கிடைக்கும் ஆக்சசரிகள் குறித்து தெரிந்துகொள்ள விரும்புவோர் அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளலாம். 50,000 விற்பனை என்ற மைல்கல்லை நினைவுகூறும் வகையில் அறிமுகமான இந்த ஜூபிலி எடிஷன், புதிய சியரா வாங்க நினைப்பவர்களுக்கு கூடுதல் ஸ்டைல் மற்றும் வசதிகளை ஒரே பேக்கேஜில் பெறும் வாய்ப்பை வழங்குகிறது.

