தீபாவளி பம்பர் ஆஃபர்: டாடா கார்களுக்கு ரூ.55,000 வரை அதிரடி தள்ளுபடி! முழு விவரம் உள்ளே!
Tata Motors Diwali Offers 2026: பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் உள்ளிட்ட 6 மாடல் கார்களுக்கு சூப்பரான ஆஃபர்களை அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா கார்களுக்கு ரூ.55,000 வரை அதிரடி தள்ளுபடி
பண்டிகை காலத்தில் புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சூப்பரான ஆஃபர்களை அறிவித்துள்ளது. 2026 அக்டோபர் மாதத்தில் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், சியரா, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய 6 மாடல்களுக்கு பல சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.
கஸ்டமர் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகைகள் என அதிகபட்சமாக ரூ.55,000 வரை நீங்கள் மிச்சப்படுத்தலாம். இந்த ஆஃபர்கள் அக்டோபர் 31 வரை மட்டுமே கிடைக்கும். மாடல், வேரியண்ட் மற்றும் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் முறையை பொறுத்து சலுகைகள் மாறுபடும். டாடா வழங்கும் இந்த 6 கார்களுக்கான ஆஃபர்களை விரிவாக பார்க்கலாம்.
டாடா டியாகோவுக்கு ரூ.35,000 வரை சலுகை
டாடா நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் காரான டியாகோவுக்கு அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.35,000 வரை சலுகைகள் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு இந்த ஆஃபர் பொருந்தும். ஆனால் XE வேரியண்ட்டுக்கு இது கிடையாது.
ரூ.15,000 கஸ்டமர் ஆஃபர், ரூ.5,000 இன்டர்வென்ஷன் ஆஃபர், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகை ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இந்த எல்லா சலுகைகளும் ஒன்றாக கிடைக்குமா என்பது விதிமுறைகளை பொறுத்தது.
டாடா டிகோருக்கு ரூ.30,000 வரை ஆஃபர்
டாடாவின் காம்பேக்ட் செடான் காரான டிகோருக்கு இந்த மாதம் ரூ.30,000 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ.15,000 நேரடி கேஷ் டிஸ்கவுண்டும் அடங்கும். பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு ரூ.10,000 போனஸ் அல்லது தகுதியை பொறுத்து ரூ.15,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகை கிடைக்கலாம். கார் வாங்கும் முன் டீலர்ஷிப்பில் சரியான ஆஃபரை உறுதி செய்து கொள்வது நல்லது.
டாடா அல்ட்ராஸுக்கு ரூ.55,000 வரை லாபம்
பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா அல்ட்ராஸுக்கு தான் இந்த பட்டியலில் அதிகபட்ச சலுகை கிடைக்கிறது. வேரியண்ட்டை பொறுத்து ரூ.55,000 வரை மிச்சப்படுத்தலாம். சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு தான் அதிகபட்ச சலுகை வழங்கப்படுகிறது. ரூ.15,000 கஸ்டமர் ஆஃபர், ரூ.20,000 இன்டர்வென்ஷன் ஆஃபர், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.20,000 ஸ்கிராப்பேஜ் போனஸ் என ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுக்கு மொத்தம் ரூ.35,000 வரை சலுகைகள் கிடைக்கும்.
டாடா சியராவுக்கும் ஆஃபர்கள்
சமீபத்தில் வெளியான டாடா சியராவின் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுக்கும் அக்டோபரில் அதிகபட்சமாக ரூ.30,000 வரை சலுகைகள் உள்ளன. எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகை, லெவல்-அப் ஆஃபர் மற்றும் லாயல்டி போனஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. வேரியண்ட் மற்றும் வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்து சலுகைகள் மாறுபடும். அதனால் கார் புக் செய்யும் முன் ஆஃபர்களை செக் செய்வது நல்லது.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரிக்கு ரூ.45,000 வரை சலுகை
டாடாவின் பிரீமியம் எஸ்யூவி கார்களான ஹாரியர் மற்றும் 7 சீட்டர் சஃபாரியின் டீசல் வேரியண்ட்களுக்கும் இந்த மாதம் சூப்பரான ஆஃபர்கள் உள்ளன. ஆட்டோபண்டிட்ஸ் (Autopunditz) ரிப்போர்ட் படி, இரண்டு மாடல்களுக்கும் அதிகபட்சமாக ரூ.45,000 வரை சலுகைகள் கிடைக்கலாம். ரூ.10,000 கஸ்டமர் டிஸ்கவுண்ட், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.35,000 வரை ஸ்கிராப்பேஜ் சலுகை என ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றாக கிடைக்காது. விதிமுறைகளை சரிபார்க்க வேண்டும்.
ஆஃபரை எப்படி பயன்படுத்துவது?
டாடாவின் இந்த ஆஃபர்கள் 2026 அக்டோபர் 31 வரை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியான சலுகை தொகை டீலர்ஷிப், வேரியண்ட், ஸ்டாக் மற்றும் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் முறையை பொறுத்து மாறலாம். அதிகபட்ச சலுகை முழுவதும் கேஷ் டிஸ்கவுண்டாக கிடைக்காது. அதனால் புக்கிங் செய்யும் முன் அருகில் உள்ள டாடா டீலர்ஷிப்பில் ஆஃபர் விவரங்களையும் விதிமுறைகளையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

