- Home
- Auto
- Tata Motors Offers: டாடா நிறுவனத்தின் பம்பர் ஆஃபர்! அல்ட்ரோஸ் முதல் டிகோர் கார்களுக்கு அள்ளிக்கொட்டும் சலுகைகள்! ஜூன் 30 வரை மட்டுமே!
Tata Motors Offers: டாடா நிறுவனத்தின் பம்பர் ஆஃபர்! அல்ட்ரோஸ் முதல் டிகோர் கார்களுக்கு அள்ளிக்கொட்டும் சலுகைகள்! ஜூன் 30 வரை மட்டுமே!
Tata Cars Offers: இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), தனது பிரபலமான 3 கார் மாடல்களுக்கு ஜூன் 30 வரை அதிரடியான சலுகைகளையும் ரூ.40,000 வரை தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் கார் தள்ளுபடிகள்
நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு நல்ல கார் வாங்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு சூப்பரான குட் நியூஸ்! இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), தனது பிரபலமான 3 கார் மாடல்களுக்கு ஜூன் 30 வரை அதிரடியான சலுகைகளையும் ரூ.40,000 வரை தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. அதற்கான ஆஃபர் விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
டாடா அல்ட்ரோஸ்
அல்ட்ரோஸ் வரிசையில், சிஎன்ஜி மாடலுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ரூ.5,000 கூடுதல் தள்ளுபடி அடங்கும். டாடா அல்ட்ரோஸின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களுக்கும் இதே கேஷ் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அனைத்து அல்ட்ரோஸ் வேரியன்ட்களுக்கும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.20,000 ஸ்கிராப்பேஜ் சலுகை உள்ளது. இதுதவிர, எல்லா வேரியன்ட்களுக்கும் ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் நீங்கள் பெறலாம். டாடா அல்ட்ரோஸ் காரின் விலை ரூ.6.30 லட்சத்தில் இருந்து ரூ.10.77 லட்சம் வரை உள்ளது.
டாடா டியாகோ
பழைய ஃபேஸ்லிஃப்ட் மாடல் டியாகோவின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு (பேஸ் XE ட்ரிம் தவிர) டாடா நிறுவனம் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்குகிறது. மேலும், ரூ.15,000 ஸ்கிராப்பேஜ் போனஸ் அல்லது ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன், ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பழைய டியாகோ மாடல்களுக்கு (பெட்ரோல், CNG) ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் உள்ளது. புதிய டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.4.70 லட்சத்தில் இருந்து ரூ.8.55 லட்சம் வரை இருக்கிறது.
டாடா டிகோர்
இந்த மாதம் டாடா டிகோர் காருக்கு ரூ.30,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.15,000 ஸ்கிராப்பேஜ் சலுகை ஆகியவை அடங்கும். டிகோரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கும்.

