இந்த விலையில் 5-ஸ்டார் பாதுகாப்பா? டாடா கார்-ன்னா சும்மாவா பாஸ்.!
புதிய டாடா ஆல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் Bharat NCAP சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று, மாருதி பலேனோவை விட முன்னிலை வகிக்கிறது.

டாடா ஆல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய கார் சந்தையில் எப்போதும் பாதுகாப்புக்கான பெயரைப் பெற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ், புதிய டாடா ஆல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மூலம் மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெறும் ரூ.6.89 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமான இந்த ஹாட்ச்பேக் கார், Bharat NCAP சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெறப்பட்டது சாதனை படைத்துள்ளது.
Bharat NCAP சோதனை முடிவுகள்
ஆட்களுக்கான பாதுகாப்பில், Frontal Offset Test-ல் 15.55/16 புள்ளிகள், Side Impact Test-ல் 14.11/16 புள்ளிகள், மேலும் Side Pole Test-ல் பூரண மதிப்பெண் பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில், டைனமிக் ஸ்கோர் 23.90/24, CRS நிறுவல் 12/12, மற்றும் வாகன மதிப்பீடு 9/13 என அதிக மதிப்பெண் எடுத்துள்ளது. இதனால், ஆல்ட்ராஸ் தனது போட்டியாளர் மாருதி பாலேனோவை விட (4-ஸ்டார்) முன்னிலை வகிக்கிறது.
குழந்தைகள் பாதுகாப்பு சோதனை
ISOFIX சீட் அங்கரேஜ் மூலம் குழந்தை சீட் பொருத்தப்பட்ட நிலையில், 3 வயது டம்மி 8/8 புள்ளிகள், 18 மாத குழந்தை டம்மி 7.90/8 புள்ளிகளும் பெற்றது. பக்கவாட்டு மோதல் சோதனையில் இருவரும் பூரண மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதுவே Altroz Child Safety Score அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
இந்த ஹாட்ச்பேக், 6 ஏர்பேக் (ஸ்டாண்டர்ட்), EBD உடன் ABS, Electronic Stability Control, 360° கேமரா, TPMS, ISOFIX சீட் மவுண்ட்ஸ், மற்றும் அனைத்து சீடுகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது, குடும்பத்திற்கான பாதுகாப்பு தரத்தை மிக உயர்வாக உயர்த்துகிறது.
விலை & போட்டியாளர்கள்
விலை ரூ.6.89 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரை இருக்கும் ஆல்ட்ராஸ், மாருதி பாலெனோ, ஹூண்டாய் i20, மற்றும் டொயோட்டா கிளான்சா போன்றவை மாடல்களுடன் போட்டியிடுகிறது. புதிய 10.25-இஞ்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வாய்ஸ் சன் ரூஃப், ஏர் பியூரிபையர், கனெக்டட்டில் லைட்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்களும் இதில் உள்ளன வழங்கப்பட்டுள்ளன. இதனால், மிகச் சிறந்த விலை + பாதுகாப்பு + கலவை அம்சங்கள் இவற்றின் சிறந்த ஆல்ட்ராஸ் திகழ்கிறது.