ஷாக்கிங் நியூஸ்.. ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் புதிய விலையை கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க.!!
ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை சுமார் ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது. புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு 40% ஜிஎஸ்டி வரியே முக்கிய காரணமாகும்.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை உயர்வு
மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி விதிகள் காரணமாக அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் கொண்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயல் என்ஃபீல்டின் 650சிசி பைக்குகள் அனைத்தும் சுமார் ரூ.30,000 வரை உயர்ந்துள்ளன. இன்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி, சூப்பர் மீட்டியோர், ஷாட்கன், கிளாசிக், பியர் என ஆறு மாடல்களில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 40% ஜிஎஸ்டி வரிக்குட்பட்டதால் விலையிலும் நேரடி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கான்டினென்டல் ஜிடி 650
கஃபே ரேசர் ஸ்டைலில் வரும் கான்டினென்டல் ஜிடி 650 விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. பசுமை மற்றும் சிவப்பு வேரியண்ட்கள் ரூ.3.49 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற வேரியண்ட்களில் விலை ரூ.3.71 லட்சம் வரை உயர்ந்துள்ளது. க்ரோம் ஃபினிஷ் கொண்ட “மிஸ்டர் கிளீன்” வேரியண்ட் ரூ.3.78 லட்சமாக அதிகபட்ச உயர்வுடன் உள்ளது.
இன்டர்செப்டர் 650
இன்டர்செப்டர் 650-ன் காலி கிரீன் மற்றும் கென்யன் ரெட் மாடல்கள் தற்போது ரூ.3.32 லட்சம் முதல் கிடைக்கின்றன. சன்செட் ஸ்ட்ரிப் வேரியண்ட் ரூ.3.40 லட்சம், பிளாக் ரே மற்றும் பார்சிலோனா ப்ளூ வேரியண்ட்கள் ரூ.3.51 லட்சம் ஆகிய விலைகளில் விற்பனைக்கு உள்ளன. டாப்-ஸ்பெக் மார்க் 2 மாடல் ரூ.3.62 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
புதிய கிளாசிக் 650
புதிய கிளாசிக் 650-ன் விலையும் உயர்ந்துள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்ட இந்த பைக்கின் வாலம் ரெட் மற்றும் ப்ளூ மாடல்கள் ரூ.3.61 லட்சம், டீல் கலர் ரூ.3.65 லட்சம் மற்றும் பிளாக் குரோம் வேரியண்ட் ரூ.3.75 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேசமயம், கஸ்டம் லுக் கொண்ட ஷாட்கன் 650-ன் விலையும் அதிகரித்துள்ளது. பிளாஸ்மா ப்ளூ மற்றும் டிரில் கிரீன் மாடல்கள் ரூ.4.05 லட்சம், ஸ்டென்சில் ஒயிட் ரூ.4.08 லட்சம் என உயர்ந்த விலையில் கிடைக்கிறது.
650சிசி பைக்குகள் விலை உயர்வு
இதேபோல், பியர் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. பியர் 650-ன் விலை ரூ.3.71 லட்சத்தில் தொடங்கி ரூ.3.93 லட்சம் வரை உள்ளது. குரூசர் வகையான சூப்பர் மீட்டியோர் 650-ன் விலை ஆஸ்ட்ரல் வேரியண்ட்களில் ரூ.3.98 லட்சமாகவும், டாப் செலஸ்டியல் டிரிம்களில் ரூ.4.32 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வரி அமைப்பு காரணமாக, பிரீமியம் பைக்குகளை விரும்பும் பயனாளர்கள் கூடுதல் செலவுக்கு தயாராக இருக்க வேண்டும்.