MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.75,000 தள்ளுபடி… 5 ஸ்டார் பாதுகாப்பு உள்ள காரை வாங்க ரெடியா.!

ரூ.75,000 தள்ளுபடி… 5 ஸ்டார் பாதுகாப்பு உள்ள காரை வாங்க ரெடியா.!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ரூ.75,000 வரை மொத்த சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை ஆகியவை அடங்கும். இதுகுறித்த விவரங்களை காணலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 19 2026, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஸ்கோடா கார் தள்ளுபடி
Image Credit : our own

ஸ்கோடா கார் தள்ளுபடி

இந்திய கார் சந்தையில் போட்டியை கிளப்பும் வகையில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்த மாதம் தனது மாடல்களுக்கு கவர்ச்சியான தள்ளுபடியை அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் மிகவும் கவனம் ஈர்க்கும் மாடல் ஸ்கோடா கைலாக் ஆகும். அறிமுகமானது முதல் விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த என்ட்ரி-லெவல் SUV, தற்போது ரூ.75,000 வரை மொத்த சலுகைகளுடன் கிடைக்கிறது. இதில் ரூ.50,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் சலுகை அடங்கும். ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.59 லட்சம் என்பதால், இந்த ஆஃபர் வாங்குபவர்களுக்கு நல்ல சேமிப்பை தருகிறது.

24
ஸ்கோடா கைலாக் அம்சங்கள்
Image Credit : Google

ஸ்கோடா கைலாக் அம்சங்கள்

ஸ்கோடா கைலாக் கார் பல்வேறு ட்ரிம் லெவல்களில் கிடைக்கிறது. அடிப்படை “கிளாசிக்” வேரியன்டில் 16-இன்ச் ஸ்டீல் வீல்கள், 6 ஏர்பேக்குகள், சென்ட்ரல் லாக்கிங், ISOFIX, டிராக்ஷன் கண்ட்ரோல், மேனுவல் ஈசி, பவர் விண்டோஸ் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் தினசரி பயன்பாட்டை மனதில் வைத்து இந்த வேரியன்ட், எளிமையான மற்றும் பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது.

Related Articles

Related image1
Hybrid Cars: 45 கிமீ மைலேஜ் தரும் கார்! இனி பெட்ரோல் செலவு பாதிக்கு பாதி குறையும்!
Related image2
மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!
34
கைலாக் காரின் வசதிகள்
Image Credit : Skoda India

கைலாக் காரின் வசதிகள்

அடுத்த நிலையான “சிக்னேச்சர்” மற்றும் “சிக்னேச்சர்+” ட்ரிம்கள், கூடுதல் கம்பர்ட் மற்றும் டெக் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டர், 5-இன்ச் மற்றும் 10-இன்ச் டஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஏசி, லெதர் ஸ்டீயரிங், பேடில் ஷிஃப்டர்கள் போன்ற வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 6MT மற்றும் 6AT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கிடைப்பதால், டிரைவிங் அனுபவத்தை விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்ய முடியும்.

44
ஸ்கோடா கைலாக் சலுகைகள்
Image Credit : our own

ஸ்கோடா கைலாக் சலுகைகள்

“பிரெஸ்டீஜ்” வேரியன்ட், பிரீமியம் அனுபவத்தை தரும் வகையில் 17-இன்ச் அலாய் வீல்கள், சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் பவர்டு சீட்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்பில், இந்த கார் பாரத் NCAP சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளது. சந்தையில் இது Maruti Brezza, Tata Nexon, Hyundai Venue, Mahindra XUV 3XO மற்றும் Kia Sonet போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது. இருப்பினும், தள்ளுபடி விவரங்கள் நகரம், டீலர் மற்றும் வேரியன்ட்டை பொறுத்து மாறக்கூடும் என்பதால், வாங்குவதற்கு முன் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்வது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஸ்கோடா கார்கள்
ஸ்கோடா கிலாக்
தள்ளுபடி
சலுகைகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நீண்ட ரேஞ்ச் ஸ்கூட்டர் வந்தாச்சு.. இந்திய மக்கள் எதிர்பார்த்த கேம் சேஞ்சர்.. விலை எவ்வளவு?
Recommended image2
Hybrid Cars: 45 கிமீ மைலேஜ் தரும் கார்! இனி பெட்ரோல் செலவு பாதிக்கு பாதி குறையும்!
Recommended image3
இனி லாங் டிரைவ் பயமே இல்ல.. காருக்குள்ளேயே டாய்லெட்... சீட்டுக்கு அடியில் இப்படி ஒரு வசதியா? முழு விவரம்!
Related Stories
Recommended image1
Hybrid Cars: 45 கிமீ மைலேஜ் தரும் கார்! இனி பெட்ரோல் செலவு பாதிக்கு பாதி குறையும்!
Recommended image2
மொபைல் மாதிரி வசதிகள்.. ரூ.1 லட்சத்தில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved