MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 3 பேட்டரி பேக் ஆப்ஷன், 560 கி.மீ. ரேஞ்ச்! ஸ்கோடா எல்ராக் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

3 பேட்டரி பேக் ஆப்ஷன், 560 கி.மீ. ரேஞ்ச்! ஸ்கோடா எல்ராக் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!

ஸ்கோடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் எஸ்யூவியான எல்ராக்கை அறிமுகம் செய்துள்ளது. எல்ராக் ஸ்கோடாவின் புதிய நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தனித்துவமான மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2 Min read
SG Balan
Published : Oct 03 2024, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

ஸ்கோடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் எஸ்யூவியான எல்ராக்கை அறிமுகம் செய்துள்ளது. எல்ராக் ஸ்கோடாவின் புதிய நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தனித்துவமான மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

28
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

ஸ்கோடாவின் "மாடர்ன் சாலிட்" வடிவமைப்பைக் கொண்ட முதல் வாகனமாக, எல்ராக் அமைந்துள்ளது. புதிய "டெக்-டெக் ஃபேஸ்" மூலம் வழக்கமான ரேடியேட்டர் கிரில்லை பளபளப்பான கருப்பு பேனலாக மாற்றியுள்ளது. இது ரேடார் மற்றும் முன்பக்க கேமராவை உள்ளக்கியது.

38
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

ஸ்கோடா லோகோ பானட்டில் இருந்து அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக பிராண்ட் பெயர் புதிய எழுத்துக்களில் இடம்பெற்றுள்ளது. இந்த வாகனம் மேம்பட்ட எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்களுடன் வருகிறது. 36 பிரிவுகளாக உள்ள மேட்ரிக்ஸ் அமைப்பு போக்குவரத்தைப் பொறுத்து தானாகவே சரிசெய்துகொள்கிறது.

48
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

4,488 மிமீ நீளமும், 1,884 மிமீ அகலமும், 1,625 மிமீ உயரமும் கொண்ட எல்ரோக் 2,765 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. இது 1,949 கிலோ எடை கொண்டது. டிமியானோ கிரீன் உட்பட ஒன்பது வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. "ஏரோ-ஆப்டிமைஸ்டு" வடிவமைப்பு கொண்ட சக்கரங்களின் அளவு மாடலுக்கு ஏற்ப 19 முதல் 21 இன்ச் வரை மாறுபடும். பின்புறத்தில், டெயில்லைட் ஸ்கோடாவின் மற்ற மாடல்களில் உள்ள வடிவமைப்பைப் போல உள்ளது.

58
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

கேபினில் 13-இன்ச் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, காம்பாக்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 48 லிட்டர் கேபின் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், காயின் ஹோல்டர் மற்றும் பார்சல் ட்ரேயின் கீழ் உள்ள சார்ஜிங் கேபிளைச் சேமிப்பதற்கான நெட் போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

68
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

எல்ராக் 470-லிட்டர் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது. பின் இருக்கைகள் மடிக்கப்பட்ட நிலையில் 1,580 லிட்டர் வரை கொள்ளளவு கிடைக்கும். வோக்ஸ்வாகன் குழுமத்தின் MEB மாடுலர் எலக்ட்ரிக் கார் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் மூன்றாவது மாடல் இதுவாகும்.

78
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

உலகளவில் ஸ்கோடா எல்ராக் எல்ரோக் 50, எல்ரோக் 60, எல்ரோக் 85 மற்றும் எல்ரோக் 85x என்ற நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை மூன்று வெவ்வேறு லித்தியம்-அயன் பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகின்றன. எல்ரோக் 50, 55 kWh பேட்டரியுடன், 370 கிமீக்கு மேல் ரேஞ்ச் வழங்குகிறது. இதன் மோட்டார் 168 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மிட்-ஸ்பெக் எல்ராக் 60, 63 kWh பேட்டரியுடன் 400 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இது 201 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களும் 160 கிமீ உச்ச வேகத்தைக் கொண்டவை.

88
Skoda Elroq Electric SUV

Skoda Elroq Electric SUV

எல்ராக் 85 மற்றும் எல்ராக் 85x ஆகியவை மிகப்பெரிய 82 kWh பேட்டரியுடன் வருகின்றன. எல்ரோக் 85, 282 பிஎச்பி மற்றும் 545 என்எம் டார்க் கொண்டது. இது 560 கிமீக்கு ரேஞ்ச் வழங்குகிறது. எல்ரோக் 85x ஆல் வீல் டிரைவ் அம்சத்துடன் கூடுதல் மோட்டாரைக் கொண்டது. இரண்டு மாடல்களும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியவை. எல்ரோக் கார்களை வேகமாக சார்ஜ் செய்யலாம். DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் 24 நிமிடங்களில் 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மின்சார கார்
மின்சார வாகனம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved