- Home
- Auto
- 400 கி.மீ. ரேஞ்ச் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இந்தியர்கள் காத்திருந்தது இதற்குத்தானே.. விலை எவ்வளவு?
400 கி.மீ. ரேஞ்ச் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இந்தியர்கள் காத்திருந்தது இதற்குத்தானே.. விலை எவ்வளவு?
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது Gen 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிம்பிள் அல்ட்ரா மாடல், ஒரே சார்ஜில் 400 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்ட இந்தியாவின் மிக அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டராக வந்துள்ளது.

சிம்பிள் ஒன் ஜெனரல் 2
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்திய சந்தையில் தனது Gen 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Simple One Gen 2, Simple OneS Gen 2 மற்றும் Simple Ultra என மூன்று புதிய மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் Simple One Gen 2 ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ.1,39,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்பிள் அல்ட்ரா மாடல், ஒரே சார்ஜில் 400 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிக ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அல்ட்ரா ரேஞ்ச்
Simple OneS Gen 2 மாடல், 190 கி.மீ. ஐடிசி ரெஞ்சுடன் ரூ.1,49,999 (பெங்களூரு எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. Simple One Gen 2 இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. 4.5 kWh பேட்டரி கொண்ட மாடல் 236 கி.மீ. ரேஞ்சுடன் ரூ.1,69,999 விலையிலும், 5 kWh பேட்டரி கொண்ட மாடல் 265 கி.மீ. ரேஞ்சுடன் ரூ.1,77,999 விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் உடனடியாக வாங்க கிடைக்கும் நிலையில் உள்ளன.
ஜென் 2 ஸ்கூட்டர் அம்சங்கள்
Gen 2 மாடல்களில் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1 லிட்டர் கிளவ் பாக்ஸ், தனியான சார்ஜிங் போர்ட், எளிமையான புதிய டாஷ்போர்டு, டிராக்ஷன் கண்ட்ரோல், நான்கு நிலை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எடை 8 கிலோ குறைக்கப்பட்டு, சீட் உயரம் 780 மிமீ ஆக மாற்றப்பட்டுள்ளது.
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்த ஸ்கூட்டர்கள் 7-இஞ்ச் டச் ஸ்கிரீன், 5G e-SIM, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நெவிகேஷன், Find My Vehicle, TPMS, பார்க் அசிஸ்ட் போன்ற நவீன வசதிகளுடன் வருகிறது. Simple Energy நிறுவனம் 8 ஆண்டு மோட்டார் வாரண்டி வழங்குகிறது. இந்தியாவின் பல நகரங்களில் உள்ள 61க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் Amazon, Flipkart போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் இந்த ஸ்கூட்டர்களை வாங்கலாம்.

