MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • தீபாவளி அதிரடி ஆஃபர்: 1 கி.மீ ஓட்ட வெறும் ரூ.2.60 தானா? பட்ஜெட்டுக்குள் 5 புது எலெக்ட்ரிக் கார்கள்!

தீபாவளி அதிரடி ஆஃபர்: 1 கி.மீ ஓட்ட வெறும் ரூ.2.60 தானா? பட்ஜெட்டுக்குள் 5 புது எலெக்ட்ரிக் கார்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பேட்டரியை காரிலிருந்து தனியாகப் பிரித்து வழங்கும் ‘பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ்’ (BaaS) முறையின் கீழ் 5 முன்னணி மின்சார கார்களுக்கு ரூ.2.30 லட்சம் முதல் ரூ.7.04 லட்சம் வரை ஆரம்ப விலையில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 04 2026, 08:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பேட்டரி வாடகை முறையில் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Image Credit : chatgpt

பேட்டரி வாடகை முறையில் 5 எலெக்ட்ரிக் கார்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ‘பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ்’ (Battery-as-a-Service - BaaS) எனப்படும் பேட்டரி வாடகை திட்டத்தின் மூலம் 5 முன்னணி மின்சாரக் கார்கள் (EV) மிகக் குறைந்த ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் காரின் ஆரம்ப விலையில் ரூ.2.30 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.04 லட்சம் வரை சேமிக்க முடியும். அதே வேளையில், பயனாளர்கள் காரை ஓட்டும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தனியாக பேட்டரி வாடகையைச் செலுத்த வேண்டும்.

என்ன இந்த 'பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ்' திட்டம்?

காரின் மொத்த விலையிலிருந்து அதன் பேட்டரியின் விலையைத் தனியாகப் பிரித்து விற்பனை செய்வதே 'BaaS' திட்டமாகும். இதன் மூலம் கார் வாங்கும் போது செலுத்த வேண்டிய முன்பணம் பெருமளவு குறைகிறது. இந்த பண்டிகைக் காலத்தில் 5 முக்கிய எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த ஆரம்ப விலை என்பது பேட்டரி முற்றிலும் இலவசம் என்று அர்த்தமல்ல. டாடா மாடல்களுக்கு 1 கி.மீ-க்கு ரூ.2.60 முதலும், மாருதி இ விட்டாராவுக்கு ரூ.3.99 வரையிலும் பேட்டரி வாடகை உண்டு. எனவே, நீங்க மாதந்தோறும் காரை எவ்வளவு தூரம் இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதன் உண்மையான பராமரிப்புச் செலவு அமையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric)
Image Credit : Hyundai

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric)

இந்த லிஸ்டில் அதிகபட்ச விலை குறைப்பைப் பெற்றுள்ள கார் இதுவே. பேட்டரியுடன் கூடிய இதன் முழு விலை ரூ.18.03 லட்சம். ஆனால், BaaS திட்டத்தின் கீழ் இதன் ஆரம்ப விலை வெறும் ரூ.10.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாங்குபவர்களுக்கு ஆரம்ப விலையில் நேரடியாக ரூ.7.04 லட்சம் வரை மிச்சமாகிறது.

36
மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara)
Image Credit : Maruti

மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara)

மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி காரான 'இ விட்டாரா'-வின் டெல்டா 49kWh மாடல், BaaS திட்டத்தில் ரூ.10.99 லட்சம் ஆரம்ப விலையில் களமிறங்குகிறது. இதன் பேட்டரி வாடகை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.99 ஆகும். சிறிய பேட்டரி கொண்ட இந்த வேரியண்ட் முழு சார்ஜில் 400 கி.மீ வரை மைலேஜ் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

46
டாடா டியாகோ இவி (Tata Tiago EV)
Image Credit : Tata

டாடா டியாகோ இவி (Tata Tiago EV)

டாடா டியாகோ இவி இத்திட்டத்தின் மூலம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதன் BaaS தொடக்க விலை ரூ.4.69 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.60 பேட்டரி வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இது முழு சார்ஜில் 280 கி.மீ வரை இயங்கும்.

56
எம்ஜி காமெட் இவி (MG Comet EV)
Image Credit : MG

எம்ஜி காமெட் இவி (MG Comet EV)

நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த சிறிய 4-சீட்டர் காரின் வழக்கமான முழு விலை ரூ.7.63 லட்சம். ஆனால், BaaS திட்டத்தின் கீழ் ரூ.4.99 லட்சத்திற்கே கிடைக்கிறது. இதற்கான பேட்டரி வாடகை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.20 ஆகும்.

66
டாடா பஞ்ச் இவி (Tata Punch EV)
Image Credit : Tata

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV)

டாடா பஞ்ச் இவி காரின் வழக்கமான முழு விலை ரூ.9.69 லட்சம். ஆனால், BaaS முறையில் இதன் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சமாக உள்ளது. இதன் மூலம் ஆரம்ப விலையில் ரூ.3.20 லட்சம் குறைகிறது. இதன் பேட்டரி வாடகை ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.2.60 ஆக வசூலிக்கப்படுகிறது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆட்டோ செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Maruti Suzuki Sales: மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த மாருதி சுசுகி.. செப்டம்பர் விற்பனை எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Cars Under 10 Lakhs: ஸ்விஃப்ட் முதல் பிரெஸ்ஸா வரை.. ரூ.10 லட்சத்திற்குள் கலக்கும் டாப் 5 கார்களின் லிஸ்ட்!
Recommended image3
Electric Scooter Sales: 5.61 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை.. இந்த 4 நிறுவனங்கள் தான் மார்க்கெட்டை ஆளுது!
Related Stories
Recommended image1
Electric Scooter Sales: 5.61 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை.. இந்த 4 நிறுவனங்கள் தான் மார்க்கெட்டை ஆளுது!
Recommended image2
மஹிந்திரா கார்களுக்கு எகிறும் மவுசு: செப்டம்பரில் 64,000 அதிகமான எஸ்யூவி கார்கள் விற்பனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved