- Home
- Auto
- CNG 7 Seater Cars: காசு மிச்சம்.! இடவசதியும் அள்ளும்! இந்திய நடுத்தரக் குடும்பங்கள் கொண்டாடப் போகும் 7-சீட்டர் CNG கார்கள்!
CNG 7 Seater Cars: காசு மிச்சம்.! இடவசதியும் அள்ளும்! இந்திய நடுத்தரக் குடும்பங்கள் கொண்டாடப் போகும் 7-சீட்டர் CNG கார்கள்!
இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7-சீட்டர் கார்கள் அவசியமாகின்றன. இந்த பதிவில், பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் CNG கிட் வசதியுடன் வரும் மூன்று சிறந்த 7-சீட்டர் மாடல்களின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் குறித்து பார்க்கலாம்.

7-சீட்டர் கார்கள்
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களாகவோ அல்லது பெரிய குடும்பங்களாகவோ இருக்கின்றன. குறைந்தது 6 முதல் 7 பேர் வரை இருக்கும் இத்தகைய குடும்பங்களுக்கு 5-சீட்டர் கார்கள் கண்டிப்பாகப் பத்தாது. அவர்களுக்கு 7-சீட்டர் கார்கள்தான் ஒரே சிறந்த தேர்வாகும். தற்போது இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் 7-சீட்டர் பிரிவில் பல மாடல்கள் பல்வேறு வசதிகளுடன் கிடைக்கின்றன. குறிப்பாக, பெரிய இடவசதியோடு சேர்த்து, பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த CNG கிட் ஆப்ஷனுடன் வரும் 3 சிறந்த கார்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco)
இந்தியாவின் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரே 7-சீட்டர் CNG கார் இதுதான். இதன் ஆரம்ப விலை வெறும் ரூ.5.21 லட்சம் மட்டுமே. இதன் CNG மாடல் ரூ.6.36 லட்சத்திற்கு கிடைக்கிறது. இதில் K-சீரிஸ் 1.2 லிட்டர் இன்ஜின் உள்ளது. இதன் பேசஞ்சர் வேரியன்ட் பெட்ரோலில் 19.7 கி.மீ/லிட்டரும், CNG-யில் 26.78 கி.மீ/கிலோகிராமும் அசத்தலான மைலேஜ் தருகிறது. புதிய பாதுகாப்பு விதிகளின்படி இதில் EBD உடன் கூடிய ABS, 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் என 11 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய ரோட்டரி ஏசி கன்ட்ரோல்களுடன் இந்த கார் வருகிறது.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)
அழகான லுக், சொகுசான பயணம் மற்றும் பட்ஜெட் விலையில் 7-சீட்டர் தேடுபவர்களின் முதல் சாய்ஸ் எர்டிகா தான். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.80 லட்சம் முதல் ரூ.12.94 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த காரின் பெட்ரோல் மாடல் 20.51 கி.மீ மைலேஜையும், CNG வேரியன்ட் 26.11 கி.மீ/கிலோகிராம் மைலேஜையும் வாரி வழங்குகிறது. 9-இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய ஸ்மார்ட்பிளே ப்ரோ, வாய்ஸ் கமெண்ட், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் என சொகுசு வசதிகள் இதில் தாராளமாக உள்ளன. இது சந்தையில் டொயோட்டா ரூமியான், கியா கேரன்ஸ் போன்ற கார்களுக்குப் பலத்த போட்டியாக விளங்குகிறது.
நிசான் கிராவிட் (Nissan Gravit)
நிசான் நிறுவனம் தனது புதிய 'கிராவிட்' காருக்காக அரசு அங்கீகரித்த புதுமையான CNG கிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக 'ஸ்மார்ட் ட்வின்-சிலிண்டர்' தொழில்நுட்பத்துடன் இந்த கிட் வருகிறது. இதனால் காரின் பூட் ஸ்பேஸ் (இடவசதி) சற்றும் பாதிக்கப்படாது. இந்த கிட் இந்தியாவின் 16 மாநிலங்களில் ரூ.82,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது (காரின் விலைக்கு தனி). மோட்டோஜென் (Motozen) நிறுவனம் தயாரித்துள்ள இந்த கிட்டிற்கு 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிசான் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் இதை எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம்.

