- Home
- Auto
- Car Offers : கையில் பணம் இல்லையா? பரவாயில்ல...ரூ.12 லட்சம் காரை இப்பவே வீட்டுக்கு கொண்டு போங்க!
Car Offers : கையில் பணம் இல்லையா? பரவாயில்ல...ரூ.12 லட்சம் காரை இப்பவே வீட்டுக்கு கொண்டு போங்க!
Car Offers : எம்ஜி ஹெக்டர் தனது 7வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது! ஆகஸ்ட் மாத சிறப்புச் சலுகையாக ரூ.60,000 வரை பலன்களும், 100% ஆன்-ரோடு ஃபைனான்ஸ் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் காருக்கு அதிரடி சலுகைகள்
இந்தியாவின் புகழ்பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றான எம்ஜி ஹெக்டர், இந்திய சந்தையில் காலடி பதித்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைச் சிறப்பிக்கும் வகையில், ஜேஎடபிள்யூஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதற்கும் அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
சலுகைகளின் விவரங்கள்
மொத்த பலன்கள்: வாடிக்கையாளர்கள் ரூ.60,000 வரை பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.
எக்ஸ்சேஞ்ச் சலுகை: பழைய காரை மாற்றிவிட்டு புதிய ஹெக்டர் வாங்குவதற்கான எக்ஸ்சேஞ்ச் சலுகை.
லாயல்டி போனஸ்: ஏற்கனவே எம்ஜி கார் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்புப் போனஸ்.
கார்ப்பரேட் தள்ளுபடி: கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சிறப்புத் தள்ளுபடி.
முக்கிய குறிப்பு: இந்தச் சலுகையானது நீங்கள் தேர்ந்தெடுக்கும் காரின் வேரியண்ட் மற்றும் டீலர்ஷிப்பைப் பொறுத்து மாறுபடும்.
இதையும் படிங்க : Maha Bhagya Yoga : மீனத்தில் சனி வக்கிரப் பயணம்! மகா பாக்ய யோகத்தால் 4 ராசிகளுக்கு இனி கஷ்ட காலம் ஓவர்!
ரூபாய் கூட கட்ட வேண்டாம்... 100% லோன்!
ஹெக்டர் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! காரின் ஆன்-ரோடு விலையில் 100% வரை கடன் பெற நிறுவனம் வாய்ப்பளிக்கிறது. இந்த கடனை 84 மாதங்கள், அதாவது 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம். காருடன் வாங்கும் ஆக்சஸெரீஸ்களுக்கும் முழு ஃபைனான்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், 100% கடன் அனைவருக்கும் கிடைத்துவிடாது. வாடிக்கையாளரின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்தின் விதிமுறைகளைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதையும் படிங்க : Coriander : வீட்லேயே ஃப்ரெஷ் கொத்தமல்லி வளர்க்கணுமா? இதோ 6 ஈஸி டிப்ஸ்!
எம்ஜி ஹெக்டரின் சூப்பர் அம்சங்கள்
எம்ஜி ஹெக்டர் முதல்முறையாக 2019-ல் இந்தியாவில் அறிமுகமானது. அப்போது 'கனெக்டட் எஸ்யூவி'யாக, இன்டர்நெட் வசதிகளுடன் களமிறங்கியது. இப்போது 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதிய ஹெக்டரின் தோற்றத்திலும் தொழில்நுட்பத்திலும் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். புதிய டிசைனில் முன்பக்க கிரில், பம்பர் மற்றும் புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செலடான் ப்ளூ, பெர்ல் ஒயிட் போன்ற புதிய நிறங்கள் காருக்கு ஒரு பிரீமியம் லுக்கைத் தருகின்றன.
இதையும் படிங்க : Independence Day : இந்த தேசபக்தி படங்களை இன்னும் பார்க்கலயா? ஒவ்வொன்றும் வேற லெவல்!
எம்ஜி ஹெக்டரின் இன்டீரியர்
காரின் உட்புறத்திலும் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. லெதர் போன்ற டேஷ்போர்டு, காற்றோட்டமான முன் இருக்கைகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல், ஆறு விதமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் என அசத்துகிறது. இதன் முக்கிய அம்சம், 14 இன்ச் பெரிய HD வெர்டிகல் டச்ஸ்கிரீன் தான். இதன் மூலம் ஏசி, மியூசிக், நேவிகேஷன் என அனைத்தையும் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். டிஜிட்டல் கீ, ரிமோட் ஏசி ஆன் போன்ற கனெக்டட் அம்சங்களும் இதில் உண்டு.
இதையும் படிங்க : Land in Moon : நிலவில் நிலம் வாங்க ஆசையா? ஒரு ஏக்கர் நிலம் வெறும் 1,700 ரூபாய்தான்!
எம்ஜி ஹெக்டர் விலை எவ்வளவு தெரியுமா?
பாதுகாப்பு மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்களிலும் ஹெக்டர் கவனம் செலுத்தியுள்ளது. டிரைவருக்காக 17.78 செ.மீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் அம்சங்கள் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. புதிய எம்ஜி ஹெக்டரின் ஆரம்ப விலை ரூ.11.99 லட்சம். இதனுடன் ரூ.60,000 வரையிலான சலுகைகள் மற்றும் 100% ஆன்-ரோடு ஃபைனான்ஸ் வாய்ப்பும் இருப்பதால், புதிய எஸ்யூவி வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். முன்பதிவு செய்வதற்கு முன், அருகிலுள்ள எம்ஜி டீலர்ஷிப்பிற்குச் சென்று முழு விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
இதையும் படிங்க : Chandra Mangala Yoga : செவ்வாய் நீசப் பெயர்ச்சியால் உருவாகும் சந்திர-மங்கள யோகம்! 4 ராசிகளுக்கு பொற்காலம்!

