350cc Bikes : வெறும் ₹1.38 லட்சத்தில் ஸ்டைலான பைக்குகள்! டெய்லி யூஸுக்கும் பெஸ்ட்!
350cc Bikes : 350 cc பைக் என்றாலே ராயல் என்ஃபீல்ட் தான் நினைவுக்கு வரும். வெறும் 1.38 லட்ச ரூபாய் விலையில் தொடங்கும் 350 cc பைக்குகளின் பட்டியல் இதோ. தினசரி பயன்பாடு மற்றும் லாங் ரைடுக்கும் இந்த பைக் பெஸ்டாகக் கருதப்படுகிறது.

குறைந்த விலையில் 350 cc பைக்
இந்தியாவில் 350 cc பைக்குகளுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் வரவேற்பு உள்ளது. தினமும் அலுவலகம் செல்வது போன்ற அன்றாட பயன்பாட்டிற்கும், வார இறுதி நாட்களில் லாங் ரைடு செல்லவும் ஒரே பைக்கைப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்த பைக் வசதியான பயணம் மற்றும் அதிக ஸ்டைலான தோற்றத்தை வழங்குகிறது. மைலேஜ் மற்றும் பராமரிப்பும் மற்ற பைக்குகளைப் போல எந்தக் டென்ஷனும் இல்லாமல் எளிதாகச் செய்ய முடியும்.
இதையும் படிங்க : Dishwasher : பாத்திரம் கழுவ கஷ்டமா? கம்மி செலவில் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் மெஷின் செய்யலாம்!
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350
ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350, சிட்டி மற்றும் லாங் ரைடுக்கு ஏத்த மாதிரி வடிவமைக்கப்பட்ட பைக். கிளாசிக் மாடல் அளவுக்கு எடை இல்லாம, இலகுவா இருக்கிறதால பெண்களும் ஈஸியா ஓட்டலாம். இந்த பைக்கோட ஆரம்ப விலை ₹1.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது சுமார் 36 கி.மீ. மைலேஜ் கொடுக்கும்.
இதையும் படிங்க : Almond : பாதாமை ஊற வைத்து சாப்பிடுறீங்களா? இதனால் உண்மையில் கூடுதல் பலன் கிடைக்குமா?
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350
ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே அதிகம் விற்பனையாகும் மாடல் இதுதான். பலரோட ஃபேவரைட் ஆன கிளாசிக் 350 பைக்கோட ஆரம்ப விலை ₹1.81 லட்சம். இதோட டாப் மாடல் விலை ₹2.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டெய்லி யூஸ், லாங் ரைடுனு எல்லாத்துக்கும் இந்த பைக் செட் ஆகும். இது 35 முதல் 40 கி.மீ. வரை மைலேஜ் தரும்.
இதையும் படிங்க : Parasurama Rajayoga : 300 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கிரகங்களின் அணிவகுப்பு! கொட்டிக் கொடுக்கும் பரசுராம ராஜயோகம்!
ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்
ராயல் என்ஃபீல்டுக்கு நேரடிப் போட்டியாளரா ஹோண்டா களமிறக்கிய பைக் தான் ஹைனெஸ் சிபி 350. நவீன தொழில்நுட்ப வசதிகளோட மார்க்கெட்டில் ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்கு. இதோட ஆரம்ப விலை ₹1.93 லட்சம், டாப் மாடல் விலை ₹1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஸ்லிப்பர் கிளட்ச், ப்ளூடூத், அதிர்வில்லாத இன்ஜின்னு பல அம்சங்கள் இதில் இருக்கு.
இதையும் படிங்க : Yash Net Worth : 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய KGF யஷ்ஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ராயல் என்ஃபீல்ட் மீட்டியோர் 350
ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்தான் மீட்டியோர் 350. இந்த பைக்கோட விலை ₹1.96 லட்சத்துல இருந்து ₹2.16 லட்சம் வரைக்கும் இருக்கு (எக்ஸ்-ஷோரூம்). இது சுமார் 40 கி.மீ. மைலேஜ் கொடுக்கும். இது ஒரு க்ரூஸர் ரக பைக், பல கலர் ஆப்ஷன்களில் கிடைக்குது.
இதையும் படிங்க : Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?

