MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Upcoming Cars : கார் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! அடுத்த 30 நாளில் களம் இறங்கும் 4 மாஸ் கார்கள்!

Upcoming Cars : கார் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! அடுத்த 30 நாளில் களம் இறங்கும் 4 மாஸ் கார்கள்!

Upcoming Cars : அடுத்த 30 நாட்களில் Skoda, BMW, MG, Kia நிறுவனங்களிடமிருந்து 4 புதிய கார்கள் சந்தைக்கு வரவுள்ளன. மஹிந்திரா நிறுவனமும் புதிய அப்டேட்களுடன் தயாராக உள்ளது. முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 09 2026, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்
Image Credit : Official website

ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

ஸ்கோடா இந்தியா தனது பிரபலமான மிட்-சைஸ் செடான் 'ஸ்லாவியா'-விற்கு புதிய அப்டேட்களைக் கொடுக்கிறது. இந்த மாடல் ஆகஸ்ட் 18 அன்று பிரம்மாண்டமாக அறிமுகமாகிறது. இந்த கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும்.

ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் அம்சங்கள், பவர்டிரெய்ன்:

  • வெளிப்புறத்தில் புதிய LED ஹெட்லேம்ப்ஸ், அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன்பக்க கிரில் ஆகியவை உள்ளன.
  • கேபினுக்குள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு மசாஜ் வசதியும் கொடுக்கப்பட உள்ளது.
  • முக்கிய மாற்றமாக, 1.0-லிட்டர் 3-சிலிண்டர் TSI இன்ஜினுக்கு, பழைய 6-ஸ்பீடு யூனிட்டிற்கு பதிலாக புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வருகிறது. இதனால் டிரைவிங் அனுபவம் மென்மையாகவும், மைலேஜ் அதிகமாகவும் இருக்கும்.
  • 1.5-லிட்டர் TSI இன்ஜின், அதன் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸுடன் தொடர்கிறது.

இதையும் படிங்க : Mutton : மட்டன் ரப்பர் மாதிரி இருக்கா? பஞ்சு போல வேகனுமா? கடையில் கறி வாங்கும்போதே இந்த 3 விஷயத்தைப் பாருங்க!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எல்டபிள்யூபி
Image Credit : Autocar

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எல்டபிள்யூபி

சொகுசு கார் தயாரிப்பாளரான BMW, தனது பிரபலமான X1 SUV-யின் லாங் வீல்பேஸ் (LWB) வேரியன்ட்டை ஆகஸ்ட் 21 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 50 லட்சம் முதல் ரூ. 55 லட்சம் வரை இருக்கலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எல்டபிள்யூபி அம்சங்கள், பவர்டிரெய்ன்: 

  • இது 4616 மிமீ நீளம், 1845 மிமீ அகலம், 1641 மிமீ உயரம் மற்றும் 2802 மிமீ வீல்பேஸ் கொண்டது. சாதாரண மாடலை விட 116 மிமீ நீளமும், 110 மிமீ அதிக வீல்பேஸும் இருப்பதால், பின் இருக்கையில் லெக்ரூம் தாராளமாக இருக்கும்.
  • பூட் ஸ்பேஸ் 540 லிட்டராக உள்ளது.
  • உட்புறத்தில் 10.7-இன்ச் டச்ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் பேட், எலக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், பவர்டு டெயில்கேட், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ பார்க் அசிஸ்ட் போன்ற பல பிரீமியம் அம்சங்கள் உள்ளன.
  • பவர்டிரெய்ன் 1.5L 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (154bhp, 230Nm) 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. டீசல் வேரியன்ட்டில் 2.0L டர்போ யூனிட் இருக்கும்.

இதையும் படிங்க : Business : சொந்தமா Business பண்ண ஆசையா? Flipkart-ன் இந்த புதிய வாய்ப்பை தெரிஞ்சுக்கோங்க!

35
எம்ஜி ஹெக்டர் ஹாக்
Image Credit : Asianet News

எம்ஜி ஹெக்டர் ஹாக்

JSW MG மோட்டார் இந்தியா, ஆகஸ்ட் 26 அன்று 'MG ஹெக்டர் ஹாக்' என்ற புதிய SUV-யை அறிமுகம் செய்கிறது. இது குளோபல் மார்க்கெட்டில் உள்ள ‘வுலிங் ஸ்டார்லைட் 560’ மாடலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 22 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை இருக்கும். இது மஹிந்திரா XUV 7XO, XEV 9S மாடல்களுடன் போட்டியிடும்.

**எம்ஜி ஹெக்டர் ஹாக் அம்சங்கள், பவர்டிரெய்ன்:

  • இந்த SUV, ப்ளக்-இன் ஹைபிரிட் (PHEV) மற்றும் முழு எலக்ட்ரிக் (EV) என இரண்டு மாடல்களில் வருகிறது.
  • PHEV வேரியன்ட்: 1.5L பெட்ரோல் இன்ஜின், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 20.5kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது 194bhp பவர், 230Nm டார்க்கை உருவாக்கும். எலக்ட்ரிக் மோடில் மட்டும் 125 கிமீ பயணிக்கலாம். 52 லிட்டர் ஃபியூயல் டேங்க் மற்றும் பேட்டரியுடன் சேர்த்து, இது 1100 கிமீ வரை ரேஞ்ச் தரும் என CLTC கூறுகிறது.
  • EV வேரியன்ட்: 69.2 kWh பேட்டரி பேக் மற்றும் ஃபிரன்ட்-ஆக்சில் மோட்டாருடன் வருகிறது. இது 201hp பவர், 310Nm டார்க்கை வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 கிமீ ரேஞ்ச் தரும்.

இதையும் படிங்க : Biryani : மீதமான பிரியாணியை ஃபிரிட்ஜில் வச்சிருக்கீங்களா? இந்த விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க!

45
கியா சோரென்டோ
Image Credit : our own

கியா சோரென்டோ

கியா இந்தியாவின் புதிய ஃபிளாக்ஷிப் 3-வரிசை SUV 'சோரென்டோ' செப்டம்பர் 4 அன்று அறிமுகமாகிறது. ரூ. 25,000 டோக்கன் தொகை செலுத்தி ஆன்லைனில் அல்லது டீலர்ஷிப்களில் இந்த காரை புக் செய்யலாம். இதன் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 38 லட்சம் முதல் ரூ. 42 லட்சம் வரை இருக்கலாம்.

கியா சோரென்டோ அம்சங்கள், பவர்டிரெய்ன்:

  • இது இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது. கியாவிடமிருந்து இந்தியாவில் வரும் முதல் ஸ்ட்ராங் ஹைபிரிட் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. * இதில் 1.6-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் மற்றும் பிரபலமான 2.2-லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
  • இது 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் அமைப்புகளில் கிடைக்கும். 6-சீட்டர் மாடலில் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் இருக்கும்.
  • உட்புறத்தில் இரட்டை 12.3-இன்ச் வளைந்த ஸ்கிரீன்கள், போஸ் ஆடியோ சிஸ்டம், பல்வேறு டெர்ரெய்ன் டிரைவ் மோட்கள் மற்றும் லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இதையும் படிங்க : Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?

55
2024 மஹிந்திரா ஸ்கார்பியோ N அப்டேட் இதுதான்
Image Credit : Asianet News

2024 மஹிந்திரா ஸ்கார்பியோ N அப்டேட் இதுதான்

மஹிந்திரா தனது பிரபலமான SUV ஸ்கார்பியோ N-க்கு ஒரு புதிய அப்டேட்டை வழங்குகிறது. இது ஃபேஸ்லிஃப்ட் அல்ல, ஒரு மாடல் வருட அப்டேட் மட்டுமே. நாடு முழுவதும் உள்ள சில ஷோரூம்களுக்கு இந்த புதிய வெர்ஷன் வந்துவிட்டதாக வீடியோக்கள் மூலம் தெரிகிறது. இந்த புதிய அப்டேட்டில் 360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 65W டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் புதிய அலாய் வீல்கள் வரவுள்ளன. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. பழைய 2.2-லிட்டர் டீசல் மற்றும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களில் இது கிடைக்கும்.

இதையும் படிங்க : Baba Vanga : பாபா வங்காவின் இந்த வார ராசிபலன் - பட்டையக் கிளப்பும் 5 ராசிக்காரர்கள்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஆட்டோ
கார் செய்தி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
696 கி.மீ மைலேஜ்: எலக்ட்ரிக் டூ ஸ்ட்ராங் ஹைப்ரிட் வரை; அக். 12-ல் அறிமுகமாகும் 5 மாஸ் கார்கள்!
Recommended image2
160 எச்.பி பவர், 29 கிமீ மைலேஜ்: சந்தையை அலறவிட வரும் புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட்!
Recommended image3
Triumph Bike: ரூ.4,999 போதும்! டிரையம்ப் புதிய பைக் முன்பதிவு தொடங்கியது - விலை, வசதிகள் என்ன?
Related Stories
Recommended image1
E20 Petrol : '100% பெட்ரோல் வேண்டும்!' E20 பெட்ரோலுக்கு எதிராக புதிய 'Janta Party'! சர்ச்சையின் பின்னணி என்ன?
Recommended image2
Petrol : காலை நேரத்தில் பெட்ரோல் போட்டால் மைலேஜ் அதிகரிக்குமா? உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved