- Home
- Auto
- டயர் பஞ்சர் ஆகாது..! டியூப்லெஸ் டயர்களுடன் TVS XL100 Heavy Duty Alloy அறிமுகம் - விலை எவ்வளவு?
டயர் பஞ்சர் ஆகாது..! டியூப்லெஸ் டயர்களுடன் TVS XL100 Heavy Duty Alloy அறிமுகம் - விலை எவ்வளவு?
TVS நிறுவனம் தனது XL100 மாடலை டியூப்லெஸ் டயர்கள் மற்றும் அலாய் வீல்களுடன் மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹெவி டியூட்டி அலாய் மாடல், பஞ்சர் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

TVS XL100 டியூப்லெஸ் டயர்கள்
இப்போது கிராம நகரத்திலிருந்து எந்தத் தடங்கலும் இல்லாமல் பயணிக்கலாம். பஞ்சர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், TVS நிறுவனம் தனது XL100 மாடலை டியூப்லெஸ் டயர்கள் வசதியுடன் மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் அலாய் வீல்ஸ் உடன் அறிமுகமாகி, பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பையும் வசதியையும் தருகிறது. XL100 ஹெவி டியூட்டி அலாய் மாடல், முந்தையபோல் 99.7cc, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வசதியைக் கொண்டுள்ளது.
XL100 அலாய் வீல்ஸ்
இது EcoThrust Fuel Injection (ETFi) மூலம் சிறந்த மைலேஜ் தருகிறது. அதிகபட்சமாக 4.3 hp பவர் மற்றும் 6.5 Nm டார்க் உற்பத்தி செய்யும் இந்த என்ஜின், தினசரி சுமைகள் மற்றும் நீண்ட பயணங்களுக்குத் தகுந்ததாக உள்ளது. இந்த புதிய அலாய் மாடல், சிவப்பு, நீலம், சாம்பல் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. வட்டமான ஹெட்லைட், சிங்கிள் சீட், ஹாண்டில்பார் ஆகியவை முந்தைய மாடல்களோடு ஒத்திருக்கின்றன.
புதிய XL100 விலை
ஆனால், அலாய் வீல்கள் + டியூப்லெஸ் டயர்கள் காரணமாக வாகனத்திற்கு தனித்துவமான தோற்றமும் பாதுகாப்பும் கிடைக்கிறது. விலை ரூ.59,800 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் XL100 Heavy Duty Alloy, XL100 வரிசையில் அதிக விலை கொண்ட பிரீமியம் மாடலாக உள்ளது. 89 கிலோ எடையுடன் உள்ள இந்த மாடலில், எல்இடி ஹெட்லைட், எளிதாக ஆன்-ஆஃப் சுவிட்ச், மொபைல் சார்ஜிங் பாயின்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
TVS XL100 Heavy Duty மாடல்
முன்னால் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்னால் டுவல் ஷாக் அப்சார்பர்கள், இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இதனால், குறைந்த விலையில் நம்பகமான மைலேஜ், பாதுகாப்பு, மற்றும் தினசரி பயன்பாட்டுக்கான சிறந்த வசதிகளுடன், TVS XL100 இந்திய இருசக்கர வாகன சந்தையில் தனக்கான இடத்தை பிடித்துள்ளது.