MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • கைகர், டிரைபர் மட்டும் இல்ல.. இந்த கார் தான் கேம் சேஞ்சர்.. இந்தியர்கள் அதிகம் வாங்கிய கார் எது?

கைகர், டிரைபர் மட்டும் இல்ல.. இந்த கார் தான் கேம் சேஞ்சர்.. இந்தியர்கள் அதிகம் வாங்கிய கார் எது?

ஜனவரி 2026-ல் ரெனால்ட் இந்தியா 3,715 யூனிட்களை விற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கைகர் மற்றும் டிரைபர் மாடல்களின் தொடர் வெற்றி மற்றும் புதிய தலைமுறை டஸ்டரின் அறிமுகம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 02 2026, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : X/MaazMz

பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட், இந்தியாவில் 2026ஆம் ஆண்டை நல்ல தொடக்கத்துடன் தொடங்கியுள்ளது. ஜனவரி 2026 மாதத்தில் மட்டும் ரெனால்ட் இந்தியாவின் மொத்த விற்பனை 3,715 யூனிட்களைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அதே மாதத்தில் பதிவான விற்பனையை விட கனிசமான உயர்வாகும். ஒட்டுமொத்த வாகனத் துறை வளர்ச்சியையும் விட இந்த உயர்வு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாடல்களின் வருகை நிறுவனத்திற்கு இந்த வேகத்தை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

25
Image Credit : X/Parth_Go

கடந்த இரண்டாம் ஆண்டு பாதியில் ரெனால்டின் கைகர் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த இரண்டு மாடல்களும் சேர்ந்து, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். நகர்ப்புறம் மற்றும் குடும்பப் பயன்பாடு என இருவகை வாடிக்கையாளர்களிடமும் இந்த கார்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் பிடிப்பு மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளது.

Related Articles

Related image1
கிராமம் முதல் ஹைவே வரை.. பெட்ரோல் செலவை குறைக்கும் டாடாவின் சிறந்த மைலேஜ் கார் இதுதான்
Related image2
தினமும் ரூ.6 செலவு.. டீ காசு கூட இல்லை.. இந்திய குடும்பங்கள் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்
35
Image Credit : Renault

2026ஆம் ஆண்டின் தொடக்கம் ரெனால்ட்டுக்கு ஒரு புதிய கட்டமாக இருப்பதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள். கைகர், டிரைபர் ஆகியவற்றின் விற்பனை நிலை திருப்திகரமாக இருப்பதுடன், டஸ்டர் மீண்டும் அறிமுகமாகியிருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. டீலர்ஷிப்களிலும் ஆன்லைன் விசாரிப்புகளும், அதிகரித்து வருவதாகவும் நிறுவனம் கூறுகிறது.

45
Image Credit : Asianet News

ஜனவரி 26, 2026 அன்று புதிய தலைமுறை டஸ்டரை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையை கருத்தில் கொண்டு இந்த எஸ்யூவி, பாதுகாப்பு, வசதிகள் மற்றும் இடவசதி ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக பூட் ஸ்பேஸ், மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் வசதி மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

55
Image Credit : Asianet News

இந்த புதிய டஸ்டர் மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது. அதில் ஒரு ஹைப்ரிட் இன்ஜின் விருப்பமும் இருப்பதால், எரிபொருள் சிக்கனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள ரெனால்ட்வின் உற்பத்தி ஆலையும், நாடு முழுவதும் விரிந்த விற்பனை மற்றும் சேவை மையங்களும் பலமாக உள்ளன. ஜனவரி மாத விற்பனை மற்றும் டஸ்டரின் வருகை, இந்தியாவில் ரெனால்ட் மீண்டும் வலுவான நிலையை பிடிக்கத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரெனால்ட் கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிராமம் முதல் ஹைவே வரை.. பெட்ரோல் செலவை குறைக்கும் டாடாவின் சிறந்த மைலேஜ் கார் இதுதான்
Recommended image2
80 கிமீ மைலேஜ், 5 வருடம் வாரண்டி கொடுத்தா யாரு வாங்க மாட்டாங்க..? TVS Star City Plus
Recommended image3
ரூ.21,000 போதும்! புதிய டஸ்டர் புக்கிங் ஓபன் ஆயிடுச்சு.. கூட்டம் குவியுது
Related Stories
Recommended image1
கிராமம் முதல் ஹைவே வரை.. பெட்ரோல் செலவை குறைக்கும் டாடாவின் சிறந்த மைலேஜ் கார் இதுதான்
Recommended image2
தினமும் ரூ.6 செலவு.. டீ காசு கூட இல்லை.. இந்திய குடும்பங்கள் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved