கார் பேட்டரியை வாடகைக்கு விடும் எம்.ஜி.! புது ஐடியாவுடன் களமிறங்கிய வின்ட்ஸர் EV!
எம்.ஜி. நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட MG Windsor EV எலெக்ட்ரிக் காரை இந்திய கார் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கவர்ச்சிகரமான இந்த மின்சார வாகனத்தின் விலை ரூ.9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது மின்சார வாகனம் (EV) ஆகும். இதற்கு முன் ZS EV, Comet EV ஆகிய எலக்ட்ரிக் கார்களைக் கொண்டுவந்துள்ளது.
MG Windsor EV with BaaS program
எம்.ஜி. நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட MG Windsor EV எலெக்ட்ரிக் காரை இந்திய கார் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கவர்ச்சிகரமான இந்த மின்சார வாகனத்தின் விலை ரூ.9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது மின்சார வாகனம் (EV) ஆகும். இதற்கு முன் ZS EV, Comet EV ஆகிய எலக்ட்ரிக் கார்களைக் கொண்டுவந்துள்ளது.
இந்தக் கார் எம்.ஜி. நிறுவனத்தின் BaaS பேட்டரி சேவை திட்டத்துடன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதுமையான அணுகுமுறை குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை வாங்கும் வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் வாங்கும் காரின் பேட்டரிக்கு வாடகையாக ரூ.3.5 லட்சம் செலுத்த வேண்டும்.
MG Windsor EV Price
MG Windsor EV காருக்கான முன்பதிவு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்குகிறது. டெலிவரி அக்டோபர் 12ஆம் தேதி முதல் ஆரம்பிக்கும். எம்.ஜி. நிறுவனத்தின் பங்குகளில் ஒரு பகுதி ஜே.எஸ்.டபிள்யூ. (JSW) வாங்கிய பிறகு வெளியாகும் முதல் MG கார் இது என்பது கவனிக்கத்தக்கது.
கிராஸ்ஓவர் பயன்பாட்டு வாகனமாக (CUV) வடிவமைக்கப்பட்டுள்ள வின்ட்ஸர் EV செடான் மற்றும் SUVயின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் இந்தக் காருக்கு ஒரு தனித்துவமான இடத்தை வழங்குகிறது.
MG Windsor EV Features
இன்னும் இந்தியாவுக்கு வராத வுலிங் கிளவுட் EV (Wuling Cloud EV) காரின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வெர்ஷனாக Windsor EV உருவாகியுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவுக்கான பிரத்யேகமான அப்டேட்களையும் கொண்டுள்ளது. 4,295 மிமீ நீளம் கொண்ட இந்தக் கார் ZS EV ஐ விட சற்று சிறியதாகத் தெரிகிறது. 1,677 மிமீ உயரம் மற்றும் 1,850 மிமீ அகலம் இருக்கிறது. 2,700 மிமீ வீல்பேஸ் மற்ற மாடல்களில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. இது பின் இருக்கைகளுக்கு விசாலமான இடத்தை உறுதி செய்கிறது. 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல், LED DRL, ஹெட்லைட் யூனிட்கள், முன்பக்க-சார்ஜிங் இன்லெட் மற்றும் LED டெயில் லைட் யூனிட் போன்ற நவீன வடிவமைப்பு கூறுகளை உள்ளடக்கி இருக்கியது. ஃப்ளஷ் ஃபிட்டிங் கதவு கைப்பிடிகள் வெளிப்புறத்திற்கு நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கின்றன.
MG Windsor EV Specs
Windsor EV 135 டிகிரி வரை சாயும் பின்புற இருக்கைகள் மற்றும் ப்ளஷ் குஷனிங் ஆகியவை பயணிகளின் வசதியை மேம்படுத்துகின்றன. கேபினில் பனோரமிக் சன்ரூஃப், காற்று சுத்திகரிப்பு அமைப்பு மற்றும் சுற்றுப்புற விளக்குகள் ஆகியவை பிரீமியம் சூழ்நிலையை உருவாக்குகின்றன. தொழில்நுட்ப ரீதியாக, இது 8.8-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, 9-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு, PM2.5 ஏர் பியூரிஃபையர் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வாகனம் 600 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் 80 க்கும் மேற்பட்ட கூடுதல் அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது.
MG Windsor EV Battery
செயல்திறனைப் பொறுத்தவரை, MG Windsor EV எலெக்ட்ரிக் கார் 200 Nm முறுக்குவிசையுடன் 134 bhp மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 38 kWh LFP பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 331 கிமீ தூரம் பயணிக்கலாம். இந்தக் கார் Tata Nexon EV, Curvy EV மற்றும் Mahindra XUV400 போன்ற கார்களுக்கு வலுவான போட்டி அமைகிறது.