MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.17 லட்சத்தில் பிரீமியம் எலக்ட்ரிக் கார்: 332 கி.மீ ரேஞ்ச் தரும் புதிய எம்ஜி விண்ட்சர் இண்ட்ல்ஜ் எடிஷன்!

ரூ.17 லட்சத்தில் பிரீமியம் எலக்ட்ரிக் கார்: 332 கி.மீ ரேஞ்ச் தரும் புதிய எம்ஜி விண்ட்சர் இண்ட்ல்ஜ் எடிஷன்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றான எம்ஜி விண்ட்சர் இவி-ல் புதிய இண்டல்ஜ் எடிஷன் ரூ.17.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 14 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எம்ஜி விண்ட்சர் இண்டல்ஜ் எடிஷன் அறிமுகம்
Image Credit : X

எம்ஜி விண்ட்சர் இண்டல்ஜ் எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) விளங்குகிறது. இந்த காரில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய, புதிய இண்டல்ஜ் எடிஷன் (INDULGE Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.17.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்பெஷல் எடிஷன், காரின் தோற்றம் மற்றும் உட்புற வசதிகளில் பிரீமியம் அம்சங்களுடன் வந்துள்ளது.

புதிய எம்ஜி விண்ட்சர் இண்டல்ஜ் எடிஷனில் பிரத்யேக இரட்டை வண்ண வெளிப்புறத் தோற்றம், புதிய இருக்கை வண்ண அமைப்பு, பின்புற பயணிகளுக்கான திரை மற்றும் கூடுதல் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கி.மீ சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய இரட்டை வண்ணத் தோற்றம்
Image Credit : X

புதிய இரட்டை வண்ணத் தோற்றம்

புதிய எம்ஜி விண்ட்சர் இண்டல்ஜ் எடிஷனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் வெளிப்புறத்தில் தனித்துவமான வண்ணத் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷேடோ கோல்டு (Shadow Gold) நிறத்திலான பாடியுடன் கருப்பு நிற மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வண்ணக் கலவை காருக்கு கூடுதல் கவர்ச்சியையும், தனித்துவத்தையும் வழங்குகிறது.

மேலும், கருப்பு நிற வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் 18 அங்குல கருப்பு அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. காரின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள சி-பில்லரில் பிரத்யேக இண்டல்ஜ் பேட்ஜும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான விண்ட்சர் மாடலில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிஷனை எளிதாக வேறுபடுத்திக் கண்டறிய முடியும்.

35
உட்புறத்தில் புதிய மாற்றங்கள்
Image Credit : X

உட்புறத்தில் புதிய மாற்றங்கள்

காரின் கேபினில் அர்பன் டேன் என்ற வண்ணத்திலும், கருப்பு நிறத்திலும் கலந்த புதிய இருக்கை அலங்காரம் இடம்பெற்றுள்ளது. பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்களின் வசதிக்காக சினிமா மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கான பிரைவ் திரை (PRIVE Screen) என்ற டிவி திரை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் பிரத்யேக அடையாளத்துடன் கூடிய தலையணைகள் மற்றும் கழுத்துத் தலையணைகளும் இடம்பெற்றுள்ளன. பின்புற பயணிகளுக்கு கூடுதல் வசதியையும் பொழுதுபோக்கு அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பின்புற சன் ஷேடு, பிரத்யேக வடிவமைப்பிலான முப்பரிமாண தரை விரிப்புகள், முன்புற கிரில்லுக்கான குரோம் அலங்காரம், பம்பர் முனைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், பாடியின் பக்கவாட்டு மோல்டிங் மற்றும் பிரீமியம் லெதர் சாவி உறை ஆகியவையும் இதன் அலங்காரங்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

45
பேட்டரி, பவர் &  ரேஞ்ச்
Image Credit : X

பேட்டரி, பவர் & ரேஞ்ச்

புதிய எம்ஜி விண்ட்சர் இண்டல்ஜ் எடிஷனில் 38kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 136 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 332 கி.மீ சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான பயன்பாட்டில் கிடைக்கும் ரேஞ்ச் ஓட்டும் முறை, சாலை நிலை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

55
முக்கிய சிறப்பம்சங்கள்
Image Credit : X

முக்கிய சிறப்பம்சங்கள்

எம்ஜி விண்ட்சர் மாடலில் 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ளக்கூடிய ஏரோ லவுஞ்ச் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கேபினின் மையப்பகுதியில் 15.6 அங்குல கிராண்ட்வியூ தொடுதிரை இடம்பெற்றுள்ளது. செடான் காரின் சொகுசு வசதியையும், எஸ்யூவியின் பயன்பாட்டுத் தன்மையையும் இணைக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகமான 24 மாதங்களில் இதுவரை 80,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

About the Author

KD
Kiruthickraj D
ஆட்டோ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
கியர் மாற்றும் தொல்லையே இல்லை..! வெறும் ரூ.4.7 லட்சத்தில் 25 கி.மீ மைலேஜ்.. விலை குறைந்த AMT கார்கள்
Recommended image2
Toyota Car Offers: டொயோட்டா கார்களுக்கு ரூ.13.38 லட்சம் வரை மெகா ஆஃபர்! எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Recommended image3
தீபாவளி பம்பர் ஆஃபர்: டாடா கார்களுக்கு ரூ.55,000 வரை அதிரடி தள்ளுபடி! முழு விவரம் உள்ளே!
Related Stories
Recommended image1
தீபாவளி பம்பர் ஆஃபர்: டாடா கார்களுக்கு ரூ.55,000 வரை அதிரடி தள்ளுபடி! முழு விவரம் உள்ளே!
Recommended image2
கியர் மாற்றும் தொல்லையே இல்லை..! வெறும் ரூ.4.7 லட்சத்தில் 25 கி.மீ மைலேஜ்.. விலை குறைந்த AMT கார்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved