MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • MG Hector Tomahawk: 7 பேர் பயணிக்கலாம், 500+ கி.மீ. ரேஞ்ச்.. மஹிந்திராவுக்கு போட்டியாக களமிறங்கும் எம்ஜியின் புதிய கார்

MG Hector Tomahawk: 7 பேர் பயணிக்கலாம், 500+ கி.மீ. ரேஞ்ச்.. மஹிந்திராவுக்கு போட்டியாக களமிறங்கும் எம்ஜியின் புதிய கார்

MG Hector Tomahawk: இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் 7 சீட்டர் எஸ்யூவி பிரிவும் தற்போது வேகமாக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜெஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா தனது புதிய மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 25 2026, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி
Image Credit : ChatGPT

எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி

ஜெஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய மூன்று வரிசை எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய மாடல் ஆகஸ்ட் 26, 2026 அன்று அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதை பலரும் எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி என அழைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பு இதன் இறுதி பெயரை எம்ஜி நிறுவனம் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. புதிய அடாப்ட் ஆர்க்கிடெக்சர் அடிப்படையில் இந்தியாவில் உருவாகும் முதல் மாடலாக இது இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எம்ஜியின் புதிய எஸ்யூவி
Image Credit : Asianet News

எம்ஜியின் புதிய எஸ்யூவி

இந்த புதிய எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அடாப்ட் பிளாட்ஃபார்ம் உள்ளது. எம்ஜி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்த புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமின்றி, ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் ரேஞ்ச்-எக்ஸ்டெண்டர் எலக்ட்ரிக் வாகனங்களையும் உருவாக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் ஒரே பிளாட்ஃபார்மை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல்வேறு வகையான புதிய வாகனங்களை உருவாக்க எம்ஜி திட்டமிட்டுள்ளது. வெளிப்புற டிசைனை ஏற்கனவே வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் மூலம் ஓரளவு தெரிந்துகொள்ள முடிகிறது.

Related Articles

Related image1
Ather Konarc: குடும்பங்களுக்கு ஏற்ற ஏதர் ஸ்கூட்டர்.. புதிய கோனார்க் ஸ்கூட்டர் விலை, அம்சங்கள் என்ன?
Related image2
Baleno Facelift : வென்டிலேட்டட் சீட் முதல் அடாஸ் வரை... பலேனோ ஃபேஸ்லிஃப்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்னென்ன?
34
7 பேர் பயணிக்கும் கார்
Image Credit : Asianet News

7 பேர் பயணிக்கும் கார்

இந்த எஸ்யூவி 7 பேர் பயணிக்கும் வகையில் மூன்று வரிசை சீட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் எல்இடி டிஆர்எல், எல்இடி ஹெட்லெம்ப், மூடப்பட்ட கிரில் பகுதி மற்றும் பெரிய லோயர் ஏர் இன்டெக் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரூஃப் ரெயில்ஸ் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்களும் காணப்படுகின்றன. உட்புறத்தில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் சீட்கள், 360 டிகிரி கேமரா மற்றும் ஏடிஏஎஸ் போன்ற வசதிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி மற்றும் ரேஞ்ச் இந்த புதிய எஸ்யூவியின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் வுலிங் ஸ்டார்லைட் 560 மாடலில் 69.2 கிலோவாட் ஹவர் எல்எஃப்பி பேட்டரி மற்றும் முன்புற எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் சுமார் 201 ஹெச்பி பவர் மற்றும் 310 என்எம் டார்க் வழங்குகிறது. அந்த சர்வதேச மாடல் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி விலை
Image Credit : Asianet News

எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் ஈவி விலை

இதே பேட்டரி மற்றும் மோட்டார் அமைப்பு இந்திய மாடலிலும் பயன்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்திய மாடலின் அதிகாரப்பூர்வ ரெஞ்ச் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விலையைப் பொறுத்தவரை, பல்வேறு ஆட்டோமொபைல் அறிக்கைகள் இந்த புதிய எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான பிரிவில் இருக்கலாம் என தெரிவிக்கின்றன. சில தகவல்கள் இதைவிட அதிகமான விலையையும் குறிப்பிடுகின்றன. எனவே அதிகாரப்பூர்வ விலை வெளியாகும் வரை இந்தத் தொகையை எதிர்பார்க்கப்படும் விலையாக மட்டுமே பார்க்க வேண்டும்.

அறிமுகத்துக்குப் பிறகு, இந்த 7 சீட்டர் எலக்ட்ரிக் எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி 9எஸ் மற்றும் கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஈவி போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 பேர் பயணம், பெரிய பேட்டரி மற்றும் நீண்ட ரெஞ்ச் ஆகியவை உறுதி செய்யப்பட்டால், குடும்ப பயன்பாட்டுக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் இது முக்கியமான புதிய தேர்வாக மாறலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
SUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baleno Facelift : வென்டிலேட்டட் சீட் முதல் அடாஸ் வரை... பலேனோ ஃபேஸ்லிஃப்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்னென்ன?
Recommended image2
Kia Sonet Stunning Features: ரூ.8.28 லட்சத்துக்கு 5-Star Safety + Sunroof! இந்த காரை பார்த்தா வியந்துபோவீங்க!
Recommended image3
Ather Konarc: குடும்பங்களுக்கு ஏற்ற ஏதர் ஸ்கூட்டர்.. புதிய கோனார்க் ஸ்கூட்டர் விலை, அம்சங்கள் என்ன?
Related Stories
Recommended image1
Ather Konarc: குடும்பங்களுக்கு ஏற்ற ஏதர் ஸ்கூட்டர்.. புதிய கோனார்க் ஸ்கூட்டர் விலை, அம்சங்கள் என்ன?
Recommended image2
Baleno Facelift : வென்டிலேட்டட் சீட் முதல் அடாஸ் வரை... பலேனோ ஃபேஸ்லிஃப்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved