- Home
- Auto
- Ather Konarc: குடும்பங்களுக்கு ஏற்ற ஏதர் ஸ்கூட்டர்.. புதிய கோனார்க் ஸ்கூட்டர் விலை, அம்சங்கள் என்ன?
Ather Konarc: குடும்பங்களுக்கு ஏற்ற ஏதர் ஸ்கூட்டர்.. புதிய கோனார்க் ஸ்கூட்டர் விலை, அம்சங்கள் என்ன?
Ather Konarc: ஏதர் எனர்ஜி, பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையைத் தாண்டி அதிகமான குடும்ப மற்றும் தினசரி பயன்பாட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

ஏதர் புதிய ஸ்கூட்டர்
ஏதர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய கோனார்க் மின்சார ஸ்கூட்டரை ஆகஸ்ட் 29, 2026 அன்று பெங்களூரில் நடைபெறும் ஏதர் Community Day நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் புதிய இஎல் கட்டமைப்பை அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு மாடலாகும். இதுவரை 450 மற்றும் ரிஸ்டா போன்ற மாடல்களில் கவனம் செலுத்தி வந்த ஏதர், இந்த புதிய ஸ்கூட்டர் மூலம் அதிகமான குடும்பங்கள் மற்றும் தினசரி பயண வாடிக்கையாளர்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது. புதிய இஎல் கட்டமைப்பு குறைந்த உற்பத்திச் செலவு, அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் வசதி மற்றும் விலையை போட்டியாக வைத்திருக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோனார்க் ஸ்கூட்டர் அம்சங்கள்
புதிய ஸ்கூட்டரின் பெயர் கோனார்க் என்பதை ஏதர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான தருண் மேத்தா வெளியிட்ட காணொளி முன்னோட்டம் மூலம் உறுதியளித்துள்ளார். இதன் வடிவமைப்பு குடும்பப் பயன்பாடு மனதில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கைப்பிடிக்கு அருகில் பொருத்தப்பட்ட முன்விளக்கு, அகலமான முன்பக்க எல்இடி விளக்கு, சமமான தரைப்பகுதி மற்றும் நீளமான ஒரே துண்டு இருக்கை ஆகியவை இதில் காணப்படுகின்றன. அலாய் சக்கரங்கள், முன்புறத்தில் தொலைநோக்கி அமைப்பிலான அதிர்வு தாங்கி மற்றும் முன்புற வட்டு பிரேக் போன்ற வசதிகளும் புதிய ஸ்கூட்டரின் முன்னோட்ட படங்களும் தெரிகின்றன.
கோனார்க் ஸ்கூட்டர் விலை
விலையைப் பொறுத்தவரை, ஏதர் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக இறுதி விலையை அறிவிக்கவில்லை. இருப்பினும், பல்வேறு வாகனத் தகவல் அறிக்கைகளின்படி இந்த புதிய குடும்பப் பயன்பாட்டு மின்சார ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரையிலான பிரிவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உறுதியானால், குறைந்த விலையில் மின்சார ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு கோனார்க் முக்கியமான தேர்வாக மாறலாம். மேலும், ஓலா, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் விடா போன்ற நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுடன் இது நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது.
கோனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்
பேட்டரி திறன், ஒருமுறை சார்ஜ் செய்தால் பயண தூரம், அதிகபட்ச வேகம், முழுமையாக சார்ஜ் செய்யும் நேரம் மற்றும் மாறுபாடுகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புதிய இஎல் கட்டமைப்பு பேட்டரி திறன் மற்றும் ஸ்கூட்டர் அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் வாகனம் பின்னோக்கி செல்லாமல் தடுக்கும் வசதி, பின்னோக்கி இயக்கும் வசதி, ஏதர் மென்பொருள் மற்றும் இணைப்பு வசதிகள் இடம்பெறலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏதர் கோனார்க் ஸ்கூட்டர்
மொத்தத்தில், ஏதர் கோனார்க் நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் முயற்சியில் முக்கியமான மாதலாக பார்க்கப்படுகிறது. அதிக விலை கொண்ட மின்சார ஸ்கூட்டருக்கு பதிலாக குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனத்தைத் தேடும் வாடிக்கையாளர்களை இது இலக்காகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 29 அன்று நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில் இதன் விலை, பேட்டரி திறன், பயண தூரம், மாறுபாடுகள் மற்றும் முழுமையான வசதிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும். அதன் பிறகே ஓலா எஸ்1 எக்ஸ், டிவிஎஸ் ஐகியூப், பஜாஜ் சேடக் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு கோனார்க் எந்த அளவுக்கு போட்டியாக இருக்கும் என்பது தெளிவாகும்.

