ஜனவரி 15 முதல் விலை ஏறுது.. தள்ளுபடி இனி கிடைக்காது! மாருதி கார் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு
மாருதி சுசுகி நிறுவனம் ஜனவரி 15, 2026 முதல் தனது கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. எனவே, புதிய விலை அமலுக்கு வரும் முன் கார் வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

மாருதி கார்கள் விலை உயர்வு
2026 புத்தாண்டு தொடங்கியது, இந்திய ஆட்டோமொபைல் கார் விலை உயர்வு பற்றிய பேச்சுப்பொருள் வேகமாக உருவாகி வருகிறது. ஜனவரி 1 முதல் பல கார் நிறுவனங்கள் தங்களின் விலைக் கொள்கைகளை மாற்றியமைத்துள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகியும் இந்த பட்டியலில் சேரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரும் கூடுதல் தள்ளுபடிகளை நிறுவனம் திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி குறைப்பால் கிடைக்கும் விலை பலன் தொடரும் என்றாலும், அதற்கு மேலாக வழங்கப்பட்ட சலுகைகள் இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. இந்த மாற்றம் ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் விலை உயர்வு
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டபோது, அதன் பயனை மாருதி சுசுகி நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்றது. பெரும்பாலான மாடல்களின் விலை குறைக்கப்பட்டது, விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கூடுதல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன. இதனால், பல என்ட்ரி-லெவல் கார்கள் பொதுமக்களுக்கு மேலும் மலிவாக கிடைத்தன. ஜிஎஸ்டி குறைப்பு தவிர, எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாடல்களில் சில வேரியண்ட்களுக்கு ரூ.67,000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 15
இந்த நிலையில், ஜனவரி 15 வரை கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது. புதிய விலை நடைமுறைக்கு வரமுன், பழைய விலையிலேயே கார் வாங்க முடியும். மேலும், 2025 ஆம் ஆண்டு ஸ்டாக்குகளை காலி செய்ய டீலர்கள் முயற்சிப்பதால், சில நேரங்களில் கூடுதல் சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கார் வாங்கும் நேரம்
ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், பிரெஸ்ஸா போன்ற பிரபல மாடல்களை வாங்க நினைப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை. ஜனவரி 15க்கு முன் வாங்கினால், அதே காருக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம். எனவே, கார் வாங்கும் நேரத்தை சரியாக தேர்வு செய்வது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

