MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • July 2026 Sales: மெகா விற்பனை செய்த மாருதி சுசுகி.. எந்த மாடல்களுக்கு அதிக டிமாண்ட் தெரியுமா?

July 2026 Sales: மெகா விற்பனை செய்த மாருதி சுசுகி.. எந்த மாடல்களுக்கு அதிக டிமாண்ட் தெரியுமா?

July 2026 Sales: மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், ஜூலை 2026 இல் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச உள்நாட்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 34% வளர்ச்சியை குறிக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 02 2026, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாருதி சுசுகி ஜூலை 2026 விற்பனை
Image Credit : Google

மாருதி சுசுகி ஜூலை 2026 விற்பனை

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், ஜூலை 2026-ல் இந்திய சந்தையில் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனை விவரங்களின்படி, இந்தியாவில் மட்டும் 2,00,123 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது நிறுவனத்தின் இதுவரை இல்லாத சிறந்த உள்நாட்டு விற்பனை சாதனையாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அதிகரித்த விற்பனை
Image Credit : Google

அதிகரித்த விற்பனை

உள்நாட்டு விற்பனை, பிற வாகன உற்பத்தியாளர்களுக்கு (OEM) வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றைச் சேர்த்து, ஜூலை மாதத்தில் மொத்தம் 2,41,421 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,80,526 யூனிட்களாக இருந்தது. இதனால், நிறுவனத்தின் மொத்த விற்பனை சுமார் 34% உயர்ந்துள்ளது.

வெறும் 30 ரூபாயில் 187 கிமீ! ஹீரோவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாஸ் காட்டுது!

Related Articles

Related image1
260 km Range: 260 கிமீ ரேஞ்ச்.. 4 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. ரூ.1.25 லட்சத்தில் புதிய எலக்ட்ரிக் பைக்
Related image2
Hero Bike: ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்
36
எஸ்யூவி பிரிவில் அமோக வளர்ச்சி
Image Credit : Google

எஸ்யூவி பிரிவில் அமோக வளர்ச்சி

Brezza, Fronx, Grand Vitara, Jimny, XL6, Ertiga, Invicto மற்றும் e Vitara உள்ளிட்ட எஸ்யூவி மற்றும் MPV மாடல்களின் விற்பனை அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் மட்டும் 78,851 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 52,773 யூனிட்களாக இருந்தது.

46
சிறிய கார் பிரிவிலும் நல்ல வரவேற்பு
Image Credit : Asianet News

சிறிய கார் பிரிவிலும் நல்ல வரவேற்பு

Alto, S-Presso, WagonR, Swift, Baleno, Dzire, Celerio, Ignis மற்றும் Ciaz உள்ளிட்ட பயணிகள் கார் மாடல்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. இந்த மாடல்கள் இணைந்து 1,03,456 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு 72,662 யூனிட்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

56
Eeco, Super Carry மற்றும் ஏற்றுமதியிலும் வளர்ச்சி
Image Credit : Asianet News

Eeco, Super Carry மற்றும் ஏற்றுமதியிலும் வளர்ச்சி

மாருதியின் Eeco வேன் விற்பனை 13,896 யூனிட்களாக உயர்ந்துள்ளது. Super Carry இலகுரக வணிக வாகனத்தின் விற்பனை 3,920 யூனிட்கள் ஆக பதிவாகியுள்ளது. மேலும், ஜூலை மாத நிறுவனம் 30,056 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

66
ஏப்ரல் முதல் ஜூலை வரை
Image Credit : Asianet News

ஏப்ரல் முதல் ஜூலை வரை

2026-27 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மாருதி சுசுகியின் மொத்த விற்பனை 9,24,145 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. எஸ்யூவி, சிறிய கார்கள் மற்றும் ஏற்றுமதி தொடரும் வலுவான தேவை, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி கார்
SUV (விளையாட்டு பயன்பாட்டு வாகனம்)
குறைந்த விலை கார்
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hero Vida: வெறும் 30 ரூபாயில் 187 கிமீ! ஹீரோவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாஸ் காட்டுது!
Recommended image2
Chery Cars : ஒரே சார்ஜில் 1700 கி.மீ ரேஞ்ச்! 3 செகண்டில் 100 கி.மீ வேகம்; இந்தியாவில் சீறிப்பாய வரும் சீன கார்கள்!
Recommended image3
Tata Punch EV: பெரியவர்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்த ஸ்கோர்.. டாடா பஞ்ச் இவி பாதுகாப்பு சூப்பர்
Related Stories
Recommended image1
260 km Range: 260 கிமீ ரேஞ்ச்.. 4 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. ரூ.1.25 லட்சத்தில் புதிய எலக்ட்ரிக் பைக்
Recommended image2
Hero Bike: ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved