MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Flex Fuel Cars: பெட்ரோல் விலைக்கு டாட்டா! மாருதியின் ‘ஃப்ளெக்ஸ் ஃபியூயல்’ மேஜிக்! ஜூன் 5 முதல் புதிய புரட்சி!

Flex Fuel Cars: பெட்ரோல் விலைக்கு டாட்டா! மாருதியின் ‘ஃப்ளெக்ஸ் ஃபியூயல்’ மேஜிக்! ஜூன் 5 முதல் புதிய புரட்சி!

Flex Fuel Cars: பெட்ரோல் விலைக்கு டாட்டா சொல்லும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 23 2026, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மாருதி சுஸுகி ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்
Image Credit : Asianet News

மாருதி சுஸுகி ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகனப் பராமரிப்புச் செலவு என எல்லாம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரை அறிமுகம் செய்ய உள்ளது. ஜூன் 5-ம் தேதி டெல்லியில் மாருதி சுஸுகி தனது ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரை அறிமுகப்படுத்துகிறது. இந்தக் கார் எத்தனால் மற்றும் பெட்ரோல் கலந்த எரிபொருளில் இயங்கும்.

ஏற்கனவே, மாருதி சுஸுகி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் ஃபிரான்க்ஸ் மற்றும் வேகன்ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்களைக் காட்சிப்படுத்தியிருந்தது. அதனால், இப்போது எந்த கார் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பம் குறித்து பல சோதனைகளை நடத்தி வருகிறது. ஜூன் 5-ம் தேதி அறிமுகமாகும் இந்த கார், இந்தியாவில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், எரிபொருளுக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை குறையும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா
Image Credit : Asianet News

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா

தற்போது இந்தியாவில் E20, அதாவது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. E25, E27, E30 போன்ற கலவைகளும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில், இந்தியா E100, அதாவது 100% எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை நோக்கிச் செல்லும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் தங்களது ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. விரைவில், இந்தியாவில் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார்கள் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். தற்போது மாருதி இந்த முக்கிய முன்னெடுப்பைச் செய்துள்ளது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃப்யூல் ஸ்டோரேஜ்

எத்தனால் எரிபொருள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் வழக்கமான என்ஜின்கள் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதற்காக மாருதி நிறுவனம் தனது காரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃப்யூல் ஸ்டோரேஜ், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு மற்றும் இக்னிஷன் சிஸ்டம் ஆகியவற்றை மாற்றியமைத்துள்ளது.

Related Articles

Related image1
ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்
Related image2
Baleno Facelift: ஹூண்டாய் i20-க்கு செக் வைத்த மாருதி! புதிய அவதாரத்தில் 2026 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!
33
விலை மற்றும் உற்பத்திச் செலவு
Image Credit : Autocar

விலை மற்றும் உற்பத்திச் செலவு

சாதாரண காரை விட ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரை உருவாக்குவதற்கான செலவு அதிகம். வாகனத் தயாரிப்புத் துறை நிபுணர்களின் கணிப்புப்படி, ஒரு காரை ஃப்ளெக்ஸ் ஃபியூயலாக மாற்ற தோராயமாக ₹40,000 முதல் ₹50,000 வரை கூடுதல் செலவாகும். இதனால் காரின் ஆரம்ப விலையும் சற்று அதிகமாக இருக்கலாம்.

பெட்ரோல் விலைக்கு டாட்டா சொல்லும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kia Safety Rating: கியா கார் வாங்க திட்டமா? கிராஷ் டெஸ்டில் வெறும் 1 ஸ்டார்.. எந்த மாடல்?
Recommended image2
Ather Voice on Ather: பேசினாலே போதும்.. ஸ்கூட்டரைத் தொடாமலேயே கட்டுப்படுத்தும் ஏதரின் புதிய அம்சம்
Recommended image3
BMW Price Hike: ஆடம்பர கார் வாங்குபவர்களுக்கு முக்கிய தகவல்.. BMW கார்கள் விலை ஏறும் தேதி இதோ!
Related Stories
Recommended image1
ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்
Recommended image2
Baleno Facelift: ஹூண்டாய் i20-க்கு செக் வைத்த மாருதி! புதிய அவதாரத்தில் 2026 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved