MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Maruti Suzuki Cars Price Hike: பண்டிகை காலத்தில் கார் வாங்குவோருக்கு ஷாக்; மாருதி கார்களின் விலை மீண்டும் அதிகரிப்பு.. எவ்வளவு?

Maruti Suzuki Cars Price Hike: பண்டிகை காலத்தில் கார் வாங்குவோருக்கு ஷாக்; மாருதி கார்களின் விலை மீண்டும் அதிகரிப்பு.. எவ்வளவு?

Maruti Suzuki Cars Price Hike: மாருதி சுசுகி கார்களின் விலை செப்டம்பர் முதல் மீண்டும் உயர்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு ரூ.20,000 வரை விலை அதிகரிக்கும் என நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 09 2026, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாருதி சுசுகி கார் விலை உயர்வு
Image Credit : Asianet News

மாருதி சுசுகி கார் விலை உயர்வு

மாருதி சுசுகி கார்களின் விலை மீண்டும் உயர உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரை விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, பணவீக்கத்தின் தாக்கமும் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்வு என்பது தொடர்பான முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாருதி கார்கள் விலை உயர்வு
Image Credit : Asianet News

மாருதி கார்கள் விலை உயர்வு

இந்த விலை உயர்வு, கடந்த மே மாதத்திற்குப் பிறகு மாருதி சுசுகி மேற்கொள்ளும் மூன்றாவது விலை மாற்றமாகும். இதற்கு முன்பு ஜூன் மாத கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும் நிறுவனத்தின் அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றம் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டுமே செப்டம்பர் மாத விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது.

போனா வராத ஆஃபர்.. இந்த கார் வாங்கினால் இவ்வளவு சலுகைகளா! உடனே வாங்கி போடுங்க

Related Articles

Related image1
Maruti Baleno: ரூ.6.09 லட்சம் போதும்! லெவல் 2 ஏடிஏஎஸ், குளிரூட்டும் இருக்கைகள், புதிய இன்ஜின் என என்னென்ன புதுசு?
Related image2
Family Electric Scooter: 200 கி.மீ வரை ரேஞ்ச்.. பேமிலிக்கு ஏற்ற புது வசதிகள்.. உடனே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குங்க
35
மாருதி கார் விலை உயர்வு காரணம்
Image Credit : Google

மாருதி கார் விலை உயர்வு காரணம்

மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனங்களைத் தயாரிப்பதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன் பணவீக்கம் மற்றும் உலகளவில் அதிகரித்துள்ள போக்குவரத்து, எரிபொருள் செலவுகள் மற்றும் நிறுவனத்தின் செலவுகளின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளாவிய விநியோகச் செலவுகள் ஏற்படும் மாற்றங்களும் வாகனத் துறைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

45
மாருதி சுசுகி கார்கள்
Image Credit : Asianet News

மாருதி சுசுகி கார்கள்

உற்பத்திச் செலவு அதிகரித்தாலும், அதன் தாக்கத்தை முழுமையாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லாமல், முடிந்தவரை அதன் ஒரு பகுதியை நிறுவனம் தானே ஏற்றுக்கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளை முழுமையாக சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அந்த ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்தார். இதனால் செப்டம்பர் முதல் சில மாதங்களின் விலை உயரும்.

55
கார் விலை உயர்வு
Image Credit : Google

கார் விலை உயர்வு

மாருதி சுசுகி மட்டுமின்றி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களும் சமீப காலங்களில் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணமாகக் கூறி வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கிடையில், பண்டிகைக் கால விற்பனை தொடங்கும் நேரத்தில் மாருதி சுசுகியின் புதிய விலை உயர்வு வெளியாகியுள்ளது. எந்தெந்த மாடல்களுக்கு இந்த உயர்வு பொருந்தும், ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு தொகை அதிகரிக்கும் என்பது குறித்த துல்லியமான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகே முழுமையாக தெரியும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
மாருதி கார்
விலைவாசி
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டிராபிக் ரூல்ஸ் மீறுறீங்களா..? லைசன்ஸ்.., RCக்கு ஆபத்தாகிடும்..! மத்திய அரசின் கிடுக்குபிடி ரூல்ஸ்
Recommended image2
VinFast VF 9: ஒரே சார்ஜில் 594 கிமீ! இந்தியாவிற்கு வரும் வியட்நாம் எலக்ட்ரிக் SUV
Recommended image3
Maruti Baleno: ரூ.6.09 லட்சம் போதும்! லெவல் 2 ஏடிஏஎஸ், குளிரூட்டும் இருக்கைகள், புதிய இன்ஜின் என என்னென்ன புதுசு?
Related Stories
Recommended image1
Maruti Baleno: ரூ.6.09 லட்சம் போதும்! லெவல் 2 ஏடிஏஎஸ், குளிரூட்டும் இருக்கைகள், புதிய இன்ஜின் என என்னென்ன புதுசு?
Recommended image2
Family Electric Scooter: 200 கி.மீ வரை ரேஞ்ச்.. பேமிலிக்கு ஏற்ற புது வசதிகள்.. உடனே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved