MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Maruti Ethanol Car: 1 கிமீக்கு ரூ.4 செலவு மட்டுமே.. மாருதி எத்தனால் கார் ஜூன் 5-ல் அறிமுகம்.. அம்சங்கள் இதோ!

Maruti Ethanol Car: 1 கிமீக்கு ரூ.4 செலவு மட்டுமே.. மாருதி எத்தனால் கார் ஜூன் 5-ல் அறிமுகம்.. அம்சங்கள் இதோ!

Maruti Ethanol Car: கிலோமீட்டருக்கு ரூ.4 வரை மட்டுமே செலவாகும் என கூறப்படும் மாருதியின் எத்தனால் கார் ஜூன் 5-ல் அறிமுகமாக உள்ளது. குறைந்த செலவு மற்றும் மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் காரணமாக இந்த கார் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 03 2026, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாருதி எத்தனால் கார்
Image Credit : Gemini AI

மாருதி எத்தனால் கார்

இந்திய வாகன உலகில் புதிய மாற்றத்திற்கான கதவு திறக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், மாருதி சுசூகி தனது எத்தனால் அடிப்படையிலான காரை ஜூன் 5-ம் தேதி அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. பல ஆண்டுகளாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை மற்றும் மாற்று எரிபொருள் தேவை அதிகரித்துள்ள சூழலில், இந்த முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்த கார் அறிமுகமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எத்தனால் எரிபொருள் கார்
Image Credit : Instagram

எத்தனால் எரிபொருள் கார்

வெளிநாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இந்த முறை, இந்திய சாலைகள் மற்றும் எரிபொருள் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி எரிபொருளின் மீது உள்ள சார்பை குறைப்பது இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக தற்போது பயன்படுத்தப்படும் பெட்ரோலில் ஒரு குறிப்பிட்ட அளவு எத்தனால் கலக்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய கார் அதிக அளவு எத்தனால் வளைந்து கொடுக்கும் எரிபொருள் இயந்திரத்துடன் வரலாம். எத்தனால் கிடைக்காத இடங்களில் பெட்ரோலையும் பயன்படுத்தும் வசதி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Royal Enfield Bullet 650: கெத்து காட்டும் புல்லட் 650... விலை இவ்ளோ கம்மியா? முழு விவரம் இதோ!
Related image2
Top Selling Scooter: இந்திய மக்கள் அதிகம் வாங்கிய ஸ்கூட்டர் எது தெரியுமா? மே மாத விற்பனை லிஸ்ட் இதோ
34
மாருதி புதிய கார்
Image Credit : Instagram

மாருதி புதிய கார்

இதனால் பயனாளர்களுக்கு பயன்பாட்டு சுதந்திரமும் கிடைக்கும். இந்த காரின் பயணச் செலவு குறைவாக இருக்கும் என்பதே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4 வரை மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. மைலேஜ் மற்றும் இயக்கச் செலவில் கிடைக்கும் இந்த முன்னிலை, பொதுமக்கள் மத்தியில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
மாருதி ஜூன் 5 வெளியீடு
Image Credit : Instagram

மாருதி ஜூன் 5 வெளியீடு

இந்த முயற்சி வாகனத் துறையைக் கடந்து விவசாயத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கரும்பு, சோளம் உள்ளிட்ட வேளாண் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் காற்று மாசுபாடு மற்றும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் முயற்சிக்கும் இது துணை நிற்கும் என்பதால், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தில் இந்த கார் ஒரு முக்கிய திருப்பமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி கார்
மாருதி சுசூகி
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Top Selling Scooter: இந்திய மக்கள் அதிகம் வாங்கிய ஸ்கூட்டர் எது தெரியுமா? மே மாத விற்பனை லிஸ்ட் இதோ
Recommended image2
Royal Enfield Bullet 650: கெத்து காட்டும் புல்லட் 650... விலை இவ்ளோ கம்மியா? முழு விவரம் இதோ!
Recommended image3
Maruti Sales: விற்பனையில் மாஸ் காட்டிய மாருதி! மே மாதம் மட்டும் இத்தனை லட்சம் கார் சேல்ஸ் ஆனதா? அதிர வைக்கும் ரிப்போர்ட்
Related Stories
Recommended image1
Royal Enfield Bullet 650: கெத்து காட்டும் புல்லட் 650... விலை இவ்ளோ கம்மியா? முழு விவரம் இதோ!
Recommended image2
Top Selling Scooter: இந்திய மக்கள் அதிகம் வாங்கிய ஸ்கூட்டர் எது தெரியுமா? மே மாத விற்பனை லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved