நவம்பரில் மாருதி பிரெஸ்ஸா வாங்கினா ரூ.25,000 தள்ளுபடி! முழு விவரம் இங்கே
மாருதி சுசுகி தனது பிரெஸ்ஸா காம்பாக்ட் எஸ்யூவிக்கு நவம்பர் மாதத்தில் ரூ.25,000 வரை சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 360° கேமரா, மற்றும் 9-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற நவீன அம்சங்களுடன் வருகிறது.

பிரெஸ்ஸா நவம்பர் ஆபர்
மாருதி சுசுகி இந்தியா நவம்பர் மாதத்திற்காக தனது பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி பிரெஸ்ஸாவுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியன்ட்களிலும் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 வரை சலுகை பெற முடியும். இதில் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது பழைய காரை ஸ்கிராப்பிங் செய்தால் ரூ.25,000 வரை கூடுதல் நன்மை கிடைக்கும்.
தற்போது பிரெஸ்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.25 லட்சம் முதல் ரூ.13.01 லட்சம் வரை உள்ளது. எனினும், அக்டோபருடன் ஒப்பிடும்போது தள்ளுபடி தொகை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.45,000 வரை சலுகை வழங்கப்பட்டது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற மாடல்களுடன் பிரெஸ்ஸா நேரடி போட்டியில் உள்ளது.
மாருதி பிரெஸ்ஸா தள்ளுபடி
பிரெஸ்ஸாவில் புதிய தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட் WT பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் இது ஆதரிக்கிறது. 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இந்த இன்ஜின் 103 ஹெச்பி பவரையும் 137 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.
எரிபொருள் சிக்கனத்தில் இதன் சிறப்பு அம்சமாக, மேனுவல் வேரியன்ட் 20.15 கிமீ/லிட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியன்ட் 19.80 கிமீ/லிட்டர் மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய பிரெஸ்ஸாவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று மேம்பட்ட 360° சர்ரௌண்ட் வியூ கேமரா.
பிரெஸ்ஸா எக்சேஞ்ச் போனஸ்
சுசுகி மற்றும் டொயோட்டா இணைந்து உருவாக்கிய 9-இன்ச் SmartPlay Pro+ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிலே ஆதரவு கிடைக்கும்.
காரின் வெளியே இருக்கும் அனைத்து கோணங்களையும் ஒரு திரையிலேயே காண்பிக்கும் இந்த கேமரா, நகர போக்குவரத்தில் மற்றும் நெருக்கமான பார்க்கிங்கில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இருக்கும். இதில் வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் டாக் வசதியும் உள்ளது.
பிரெஸ்ஸா அம்சங்கள்
ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் அதிக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மாருதியின் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்ப அம்சங்களும் இதில் உள்ளன, இதனால் இந்த காம்பாக்ட் எஸ்யூவி மேலும் நவீனமாக மாறுகிறது.
குறிப்பிட வேண்டியது என்னவெனில், மேற்கூறிய தள்ளுபடி விவரங்கள் நகரம், மாநிலம், டீலர், வேரியன்ட் மற்றும் நிறம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே தங்களது அருகிலுள்ள டீலரை நேரடியாக தொடர்பு கொண்டு சரியான சலுகைகளை உறுதி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.