XUV 7XO-வில் 540° கேமரா.. மூன்று ஸ்கிரீன், AI சிஸ்டம்.. மஹிந்திராவின் மாஸ்டர் மூவ்
மஹிந்திரா தனது புதிய XUV 7XO எஸ்யூவியை ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது XUV700-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக, 540-டிகிரி கேமரா, மூன்று டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.

மஹிந்திரா XUV 7XO
மஹிந்திரா தனது புதிய எஸ்யூவி மஹிந்திரா XUV 7XO குறித்து மீண்டும் ஒரு டீசரை வெளியிட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி அறிமுகமாக உள்ள இந்த எஸ்யூவி, தற்போது விற்பனையில் உள்ளது மஹிந்திரா XUV700-ன் மேம்படுத்தப்பட்ட மற்றும் சக்திவாய்ந்த புதிய பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அம்சங்களை மஹிந்திரா வெளியிட்டு வருகிறார். வடிவமைப்பில், இதன் எலக்ட்ரிக் சகோதரி மஹிந்திரா XEV 9S-ஐ ஒத்த தோற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய XUV 7XO-வின் முக்கிய ஹைலைட் அம்சமாக 540-டிகிரி கேமரா அமைப்பு இடம் பெறுகிறது. வழக்கமான 360-டிகிரி கேமராவை விட இது ஒரு படி முன்னேறியது. வாகனத்தின் முன், பின் பக்கங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள், காரின் அடிப்பகுதியில் உள்ள பகுதிகளையும் டிரைவருக்கு தெளிவாக காட்டும் வசதி இதில் உள்ளது. இதனால் பள்ளங்கள், ஆஃப்-ரோடு பயணங்களில் கூட அதிக பாதுகாப்பு கிடைக்கும்.
மஹிந்திரா புதிய எஸ்யூவி
இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே Tata Harrier EV போன்ற மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் பிரபலமான Land Rover நிறுவனத்தின் உயர்தர எஸ்யூவிகளிலும் இதே போன்ற 'see-through' தொழில்நுட்பம் உள்ளது. கேமராவில் பதிவாகும் காட்சிகள் நேரடியாக இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனில் காட்டப்படும் என்பதால், ஓட்டுநருக்கு கூடுதல் நம்பிக்கை கிடைக்கும். XUV 7XO-வில் BYOD வசதியும் வழங்கப்படுகிறது. முன் இருக்கைகளின் பின்புறத்தில் தனியாக மொபைல் ஹோல்டர்கள் வழங்கப்படுவதுடன், 65W Type-C USB சார்ஜரும் இருக்கும்.
ஆனால் இந்த வசதி டாப்-எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் பகுதியிலும் பெரிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. Adrenox Plus AI இயங்குதளத்தில் இயங்கும் மூன்று டிஜிட்டல் ஸ்கிரீன்கள் இதில் இடம் பெறும். டிரைவருக்காக 10.25-இஞ்ச் டிஜிட்டல் கிளஸ்டர், சென்டர் மற்றும் பயணியர் பக்கம் தலா 12.3-இஞ்ச் டச்ஸ்கிரீன்கள் வழங்கப்படும். கூடுதலாக, லெவல்-2 ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது, XUV 7XO ஒரு முழுமையான ‘கேம் சேஞ்சர்’ எஸ்யூவியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

