இவ்வளவு மைலேஜ் தருமா? மஹிந்திரா ஸ்கார்பியோ என் அசத்தல் அம்சங்கள் இதோ!
மஹிந்திரா நிறுவனதின் அடுத்த அறிமுகமான Scorpio-N கார் சந்தையில் நல்ல வரவேற்பை பற்று விற்பனையிலும் கொடிகட்டி பறக்கிறது. இந்த கார் குறித்து பேசும் பலரும் மைலேஜ் குறித்து சிறப்பாக பேசி வருகின்றனர். அப்படி எவ்வளவு மைலேஜ் இந்த Scorpio -N கார் கொடுக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் எவ்வளவு தூரம் போகும் உண்மையான தகவல் இதோ...
மஹிந்திரா ஸ்கார்பியோ N, மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஸ்டைலிஷ் SUV வகை கார். இதன் நவீன டிசைன், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வலுவான செயல்திறனுக்காக இந்திய சந்தையில் பிரபலமாக அறியப்படுகிறது. இது நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் எல்லாம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஸ்கார்பியோ N மாடல் 7 சீட்டர்கள் மற்றும் 6 சீட்டர்கள் ஆகிய இரு விருப்பங்களிலும் கிடைக்கிறது.
என்ஜின் ஆப்ஷன்:
2.0 லிட்டர் mStallion பெட்ரோல் என்ஜின், இது 200 Php பவரையும், 370 NM (Manural Torque - MT) / 380 NM (Automatic Torque - AT) டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின், இது 132 Php பவர் மற்றும் 300 NM டார்க்குடன் வருகிறது.
கியர்பாக்ஸ்
6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
மைலேஜ்
ஸ்கார்பியோ- என் டீசல் மாடலின் மைலேஜ் சுமார் 15-16 கி.மீ/லிட்டர் மற்றும், பெட்ரோல் மாடலின் மைலேஜ் சுமார் 12-13 கி.மீ/லிட்டர் வழங்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
6 ஏர்பேக்கள் கொண்டது.
Automatic Breaing System (ஏபிஎஸ் ABS) உடன் EPT கொண்டது.
ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசெண்ட் கண்ட்ரோல்
இஸ்பி (எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி ப்ரோகிராம்)
ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்ஸ்
மின் சாப் பெல்ட் ரிமைண்டர்கள்
இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்
8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன், மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகள் கொண்டுள்ளது.
வெளிப்புற வடிவமைப்பு
மாஸ்குலர் மற்றும் ஆக்கேசியஸ் வடிவமைப்புடன் கூடியது. அதன் ஃப்ரன்ட் கிரில், LED ஹெட் லேம்புகள், டீவால் ஹூட், மற்றும் ப்ரொமினெண்ட் ஃபெண்டர்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இது மஹிந்திரா ஸ்கார்பியோவின் பாரம்பரிய சக்திவாய்ந்த தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
உட்புற வசதிகள்
லெதர் சீட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், மற்றும் பவர் அஜஸ்டபிள் ஓஆர்விஎம் (மிரர்) ஆகியவை உள்ளன.
சேவை மற்றும் பராமரிப்பு
மஹிந்திரா வாகனங்கள் சிறந்த தயாரிப்புகளைக் கொண்டுள்ளன. ஸ்கார்பியோ N சாலைகளில் நீண்டதூர இயக்கத்திற்கும், குறைந்த பராமரிப்பு செலவிற்கும் பெயர்பெற்றது.
அதன் வலிமையான செயல்திறன், ஸ்டைலிஷான வடிவமைப்பு, மற்றும் பல்வகை நவீன அம்சங்களால், SUV பிரிவில் சிறந்த தேர்வாக Scorpio N கார் உள்ளது. இது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு வசதி மற்றும் நிம்மதியா பயன அனுபவத்தை வழங்குகிறது.
சின்ன குடும்பத்துக்கு ஏற்ற சிக்கனமான 5 சீட்டர் கார்கள் இதோ! மாருதி சுஜூக்கியை அடிச்சிக்க ஆளே இல்லை!