10 மாதங்களில் 1.45 லட்சம் விற்பனை.. மஹிந்திராவின் நம்பர் 1 கார் இதுவா.?
2025-ல் 145,487 யூனிட்கள் விற்பனையாகி மஹிந்திரா நிறுவனத்தின் நம்பர் ஒன் மாடலாக திகழ்கிறது. இந்த சக்திவாய்ந்த இன்ஜின், 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் இந்திய எஸ்யூவி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனை
மஹிந்திராவின் மிகப்பெரிய ஹிட் மாடலாக பல ஆண்டுகளாக ஸ்கார்பியோ திகழ்கிறது. 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரை, மொத்தம் 10 மாதங்களில் இந்த எஸ்யூவி 145,487 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதே காலப்பகுதியில், ஸ்கார்பியோவின் மிக அருகில் வரும் மற்ற எந்த மஹிந்திரா மாடலும் இல்லை. 2024 அக்டோபர் விற்பனையான 141,465 யூனிட்களையும் கடந்து, நிறுவனத்தின் நம்பர் ஒன் காராக நிலையை உறுதி செய்துள்ளது.
மொத்தமாக 28.1% சந்தைப் பங்குடன், ஸ்கார்பியோ இந்திய எஸ்யூவி பிரிவில் மிக வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்கார்பியோ தற்போது ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரண்டு வடிவங்களில் விற்கப்படுகிறது. ஸ்கார்பியோ என், மஹிந்திராவின் தார் மற்றும் XUV700 உடன் ஒரே இன்ஜின் உடன் வருகிறது. இதில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின்கள் கிடைக்கின்றன.
இந்தியா டாப் எஸ்யூவி
இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேல் வேரியண்ட்களில் 4-வீல் டிரைவ் (4WD) சிஸ்டமும் இணைக்க முடியும். உலகளாவிய NCAP சோதனையில் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு பெற்றிருப்பது ஸ்கார்பியோ N-இன் மிகப்பெரிய பலமாகும். வெளிப்புற வடிவமைப்பில் ஸ்கார்பியோ N முற்றிலும் புதிய ரூபத்தை பெற்றுள்ளது.
குரோம் ஃபினிஷ் கொண்ட சிங்கிள் ஸ்லாட் கிரில், புதுப்பிக்கப்பட்ட LED புரொஜெக்டர் ஹெட்லெம்ப்கள், சி-வடிவ DRL-கள், புதிய ஃபாக் லேம்ப் ஹவுசிங் ஆகியவை முன்புறத்துக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. புதிய அலாய் வீல்கள், குரோம் டோர் ஹேண்டில்கள், சக்திவாய்ந்த ரூஃப் ரெயில்கள், பக்கவாட்டில் திறக்கும் பின்புற கதவு, பெரிய LED டெயில் லேம்ப்கள் உள்ளிட்டவை அதன் ஸ்போர்ட்டி லுக்-ஐ மேலும் உயர்த்துகின்றன.
மஹிந்திரா கார் சந்தை
உள் அமைப்பில் ஸ்கார்பியோ N மிகவும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. புதிய டாஷ்போர்டு, டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரூஃப் மவுண்டட் ஸ்பீக்கர்கள், லெதர் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் போன்றவை வசதியை அதிகரிக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், குரூஸ் கண்ட்ரோல், பின்புற டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவை முக்கியமாக அடங்குகின்றன.

